• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

காதல் நடனம் பூநாரைகள்(பிஞ்சு நூல் ஆறிமுகம்

16
நூல்பிஞ்சு 2026பிப்ரவரி 2026

தென்றல் மணிமேகலை

 

புத்தகத்தின் பெயர்:
காதல் நடனம் பூநாரைகள்

நூலாசிரியர்: ஏ.சண்முகானந்தம்

பக்கங்கள்: 20

நன்கொடை: ரூ 80

வெளியீடு:
உயிர் பதிப்பகம்,
எண்: 4, 5 ஆவது தெரு,
சக்தி கணபதி நகர், திருவொற்றியூர்,
சென்னை – 600 019.

செல்: 9840364783

 

இன்றைய கால கட்டத்தில் பல பேர் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.  நிறைய புத்தகங்கள் மற்ற புத்தகங்களில் இருந்து அப்படியே எடுத்து ‘copy paste’ செய்யப்படும்.  ஓர் எழுத்தாளர் என்பவர் பல புத்தகங்களைப் படித்து, புரிந்து, அவற்றை ஆராய்ந்து, சொந்த நடையில் எழுதுபவர் அல்லது நேரடியாக கள ஆய்வு செய்து எழுதுபவர். அப்படி களப்பணி ஆய்வை மேற்கொண்டு புத்தகங்களை எழுதுபவர் எழுத்தாளர், ஆய்வாளர் ஏ.சண்முகநாதன் அவர்கள்.  அவர் எழுதிய “காதல் நடனம் பூநாரைகள்” என்ற புத்தகம்தான் இவ்விதழின் நூல் அறிமுகம் பகுதியில் இடம் பெறுகிறது.

அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிச் செய்திகளின் அடிப்படையில் இந்தப் புத்தகம் உள்ளது.

காட்டில் ஏற்படும் அனுபவம், அழகிய வண்ண ஒளிப்படங்கள், கட்டுரைகள், கதைகள் அடங்கிய ஒரு சிறிய அழகிய நூல்தான் இது.

திருநெல்வேலி என்ற பெயரைக் கேட்டாலே உடனே நினைவுக்கு வருவது, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா!

இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்தால் இனிமேல் திருநெல்வேலி என்ற பெயரைக் கேட்கும்போது கூந்தன்குளம் பறவைகளின் வாழ்விடம்தான் நினைவுக்கு வரும்.  அந்த அளவிற்குப் பறவையினங்களில் உள்ள பூநாரையைப் பற்றி வடித்துள்ளார் இந்நூலாசிரியர்.

கூந்தன்குளம் பறவைகளின் வாழ்விடமாக எப்படி மாறியது?  எப்போது ஏற்பட்டது?  ஒற்றைக்காலில் ஏன் நாரைகள் நிற்கின்றன?  நீர் நிலைகளின் அளவுகள், முக்கியமாக கூந்தன்குளம் என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது போன்ற பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

நாம் நமது வீடுகளில் கோழி அல்லது பறவைகளை வளர்த்தால் அதன் எச்சங்களால் துர்நாற்றம் வீசும்.  பல உடல் உபாதைகள் ஏற்படும்.  ஆனால், கூந்தன்குளம் கிராம மக்களின் அரவணைப்பில், அன்பில் மனிதர்கள் குறித்த அச்சமின்றி அத்தனைப் பறவையினங்களும் அங்கு வாழ்கின்றன.

என்னடா, புத்தகம் பெயர் பூநாரைகள் – அதுவும் ‘காதல் நடனம் பூநாரைகள்’ என்று சொல்லிவிட்டு, இன்னும் அதைப்பற்றிச் சொல்லவில்லையே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.  இதோ பூநாரைகள் பற்றி ஒரு சில…

குஜராத்தின் ரான் – ஆஃப் –கட்ச் (Rann of kutch) மற்றும்  ஒரிசாவின் சில்கா ஏரிகளில் இனப்பெருக்கம் செய்துவிட்டுக் குளிர்காலங்களில் தமிழ்நாட்டின் பழவேற்காடு, கோடியக்கரை மற்றும் கூந்தன்குளம் புகலிடங்களுக்கு உள்ளூர் வலசைப் பறவைகளாக வருகை புரிகின்றன.

ஆண்டின் இறுதியில் அக்டோபர் மாதங்களில் இலட்சக்கணக்கில் வருகை புரியும் பூநாரைகள் மார்ச் மாதத் தொடக்கத்தில் தங்களது இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்கின்றன.

Phoenicopteridae என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரே பறவையினமாகப் பூநாரை உள்ளது.

தமிழ் நாட்டில் இரண்டு வகையான பூநாரைகள் காணப்படுகின்றன.

  1. பழைய உலகைச் சேர்ந்த பூநாரை (old world) Greater Flamingo, Phoenikcopterus
  2. சிறிய நாரை (Lesser Flamingo, Phoenkcopterus)

ஒட்டு மொத்தமாக உலகளவில் ஆறுவை பூநாரைகள் பரவலாகக் காணப்படுகின்றன.  ஏழு வகையான பூநாரைகள் தொன்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்திருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

பூ என்ற சொல்லுக்குச் சிவப்பு என்றும், பூவல் என்றால் சிவந்த மண் என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதோடு ஒப்பிடும் போது, “பூ நாரை” என்பது சிவந்த இறகுகளை உடைய நாரை என்று பொருள்படுகிறது.

குழந்தைகள் உதட்டைக் கடித்தால் நமட்டைக் கடிக்காதே என்று சொல்வோம்.  இந்தச் சொல் நடைமுறைக்கு எவ்வாறு வந்தது?

பூநாரைகள் எந்த உணவை அதிகமாக உண்ணும்?  எந்தப் பகுதியில் அதிகம் வாழ்கின்றன? போன்ற பல்வேறு செய்திகள் உள்ளன.

மேலும் கலித்தொகை, குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் பூநாரைகள் பற்றிய பாடல் வரிகளையும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.

பூநாரைகளின் நடனத்தை இரசிக்க இந்தப் புத்தகத்தை இன்றே வாங்கிப் படிப்பீர்!

நேரில் சென்று பார்க்க முடியாதவர்கள் புத்தகத்தின் வாயிலாக நடனத்தைக் காணலாம்.

இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, திருநெல்வேலி என்றதும் கூந்தன்குளம் பறவைகள் வாழிடம் – பூநாரைகள் என்று நடனம் யாருக்கெல்லாம் நினைவில் வந்தது என்பதை எழுதி அனுப்புறீங்களா?<

1
தங்கக் கட்டியும் செங்கல்லும்( படக்கதை)9th September 2026
திரைக் கவர்ச்சி - கவனமாய் இருங்கள்!(நினைவில் நிறுத்துவோம்)9th September 2026திரைக் கவர்ச்சி - கவனமாய் இருங்கள்!(நினைவில் நிறுத்துவோம்)

மற்ற படைப்புகள்

அக்டோபர் 2025நூல்பிஞ்சு 2025
25th August 2026 by Periyar Pinju

குழந்தைப் பாடல்கள் நூறு

Read More
19
இதுதான் ஆங்கிலம்பிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

PRONOUNS – 48(இதுதான் ஆங்கிலம்)

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுபிஞ்சு 2026மார்ச் 2026
21st September 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு விடைகள்

Read More
பிஞ்சு 2026மார்ச் 2026வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
21st September 2026 by Periyar Pinju

வண்ணம் தீட்டி மகிழுங்கள்!

Read More
9
அறிவியல் வளர்ச்சிபிஞ்சு 2026மார்ச் 2026
16th September 2026 by Periyar Pinju

AI ஏமாற்றுக்காரர்களிடம் எச்சரிக்கை வழிகாட்டி!(அறிவியல் வளர்ச்சி)

Read More
படக்கதைபிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

தங்கக் கட்டியும் செங்கல்லும்( படக்கதை)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p