மட்டைப் பந்து CRICKET(ஓவியம் வரையலாம்)

பி இளங்கோ
மட்டைப் பந்து விளையாட்டை ஆங்கிலத்தில் கிரிக்கெட் (CRICKET) என்பார்கள். மட்டை, பந்து கொண்டு விளையாடப்படும் ஒரு குழு விளையாட்டு ஆகும். இதில் பதினொரு (11) வீரர்கள் கொண்ட இரண்டு அணிகள் மோதுகின்றன. இது இங்கிலாந்தில் தோன்றி உலகளவில் பிரபலமாக உள்ளது. இந்தியாவில் இதன் நிர்வாக அமைப்பாக பி.சி.சி.ஐ (BCCI) உள்ளது. இந்த விளையாட்டின் முக்கிய நோக்கம் எதிரணியினர் புள்ளிகள் (RUNS) பெறுவதைத் தடுத்து, அதிகப் புள்ளிகளைப் பெற்று வெற்றி பெறுவது.
குழு விளையாட்டாக இருந்தாலும் ஒவ்வொரு வீரரும் பெறும் புள்ளிகள் அவர்களுடைய பெயரிலேயே சேர்க்கப்பட்டு வெற்றி பெற்ற குழுவில் அதிகப் புள்ளிகள் பெற்ற வீரர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும் அதிக விக்கெட் எடுத்த வீரருக்கும், சிறப்புப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்படுவதால் ஒவ்வொரு வீரருடைய தனித் திறமை வெளிப்படுகின்றன.
இவ் விளையாட்டின் முக்கியமான மட்டை வில்லோ மரத்திலிருந்து தயார் செய்யப்படுகிறது. மட்டைப் பந்து என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அது உலக நாடுகளின் ஒரு கலாச்சாரமாகவும், மிகப் பெரிய பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கிறது.
பெரியார் பிஞ்சு குழந்தைகளே! வாங்க இந்த மட்டைப்பந்து விளையாட்டுப் பொருளை எவ்வாறு ஆங்கில எழுத்துகளின் உதவியுடன் வரையலாம் என்பதைப் பார்ப்போம். இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள்: H, C, D, O மற்றும் E
வாங்க அழகாக வரைந்து வண்ணம் தீட்டி மகிழலாம்.





