புத்தகமாம் புத்தகம்(சிறார் பாடல்)

புத்தகமாம் புத்தகம்
படிக்க நல்ல புத்தகம்
சத்தமிட்டு பாடலாம்
சந்தோசமாய் ஆடலாம்!
பாட்டும் கூட இருக்குது
படக் கதையும் இருக்குது
கேட்டுப் பாரு நீயுமே
கிடைக்கும் இன்பம் கோடியே
வீரம் நிறைந்த பாடலும்
வெற்றி மாந்தர் பாடலும்
நேரம் கிடைக்கும் போதெல்லாம்
நாமும் கூடிப் பாடலாம்!
கலை பலவும் அறிந்திட
கற்றுத் தரும் புத்தகம்
தலைகுனிந்து படித்திடு
தலை நிமிர்ந்து வாழலாம்!
– அருப்புக்கோட்டை செல்வம்




