• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

மேகாவும் குட்டி மேகமும்(கதை கேளு கதை கேளு)

6
கதை கேளு கதை கேளுபிஞ்சு 2026மார்ச் 2026

விழியன்

மேகா வீட்டுக்குக் கிளம்பினாள். அவள் சோகமாக இருந்தாள். கையில் நீல நிறக் குடை இருந்தது.

வானத்தில் மழையும் இல்லை; வெயிலும் இல்லை. இன்று அவள் தோழி டோராவுடன் சண்டை. நாளை பழம் விட்டுக்கொள்வோம். “ச்ச, என்ன மோசமான நாள் இது” என்று முணுமுணுத்தாள். குடையை விரித்துக்கொண்டாள். அடிமேல் அடி வைத்து நடந்தாள்.

சிறிது தூரம் நடந்ததும் நின்றாள். குடையின் உள்ளே குளுமை. எப்படி இந்தத் திடீர்க் குளுமை? மேலே பார்த்தாள். ஓட்டையாகி இருக்குமோ? தம்பி திட்டுவானே? இது அவன் குடையாச்சே!

“அய்யோ! குளிருது!” மேகா நின்றாள்.

குடையின் உள்ளே பார்த்தாள்.

“ஹாய் மேகா”. ஆமாம், அது ஒரு குட்டி மேகத்தின் குரல்.

“நீ யார்?” என்றது மேகா.

“என்னைப் பார்த்தால் தெரியலையா?… குட்டி மேகம்,” அதன் குரல் நடுங்கியபடி இருந்தது.

“ஏன் நடுங்குறே?” மேகா கேட்டுவிட்டாள்.

“ஆமாம், எனக்குப் பயம். மழைன்னா பயம்” என்றது குட்டி மேகம்.

மேகா சிரித்தாள். மேகத்தில் இருந்துதானே மழை வரும்?

“ஏன்?” என்று கேட்டாள்.

“நனைஞ்சா சளிப் பிடிக்கும்.” என்றது மேகம். மேகா கலகலவெனச் சிரித்தாள். ஆனால் மற்றவர்கள் பயத்தினைப் பார்த்துச் சிரிக்கக்கூடாது என்று நினைவுக்கு வந்தது

“அச்சோ!” என்றாள் உடனே.

“அதனால் தான் குடைக்குள்ளே வந்தியா?” எனத் தொடர்ந்தாள்.

“ஆமாம்” – சொல்லிக்கொண்டே தனது உருவத்தை மாற்றிக்கொண்டது மேகம்.

“குடையை மடக்காதே… ப்ளீஸ்! மடக்கினால் நான் மழையில் நனைஞ்சிடுவேன். மழையில் நனைந்து சளிப் பிடிக்கும்” மீண்டும் ஓர் உருவம்.

மேகா சிரித்தாள்.

“சரி…இங்கேயே இரு.” என்றாள்.

டிப்… டிப்… என ஆரம்பித்தது “மழை!”

குட்டி மேகம் முகத்தில் பயம்.

“நான் இருக்கேன், கவலை வேண்டாம்” எனப் பார்வையால் கூறினாள் மேகா.

ஒரு கடையின் வாசலில் நின்றாள்.

“இங்கே நிற்கலாமா? ஒரு பென்சில் வாங்க வேண்டும்” என்றாள்.

“ம்ம்ம்ம்… குடையை மடக்காதே; கீழே வைக்காதே” என்றது மேகம்.

ஒல்லியான பென்சிலை வாங்கினாள்.

ஒரு மரத்தின் கீழே நின்றாள்.

“இந்த மரத்தின் கீழே நிற்கலாமா? நான் இங்கே ஒரு செடி வளர்க்கின்றேன். தண்ணீர் ஊற்ற வேண்டும்”  என்றாள்.

“ம்ம்ம்ம்… குடையை மடக்காதே; கீழே வைக்காதே” என்றது மேகம்.

பாட்டிலில் இருந்து தண்ணீர் ஊற்றினாள். “மழை வருது செடியே, பத்திரமா இரு, குட்டிச் செடியே” என்றாள்.

குட்டி மேகம் குட்டிச் செடிக்குக் கை அசைத்தது.

“நீயும் மேகா” என்றது.

மழை சிறிது நேரம் கழித்து நின்றது.

“இப்போ நான் போகணும்” என்றது குட்டி மேகம்.

“போயிட்டு திரும்ப வருவியா?” என்றாள் மேகா.

“வருவேன், அப்பவும் குடையை மடக்காம இருப்பியா?” என்று சொல்லி மேகம் சிரித்தது.

“டாட்டா!”

“டாட்டா!”

குட்டி மேகம் குடையிலிருந்து வெளியே வந்தது.

மேகா கொஞ்ச தூரம் நடந்தாள்.

குடையை மடக்கினாள்.

ஒரு மழைத்துளி மேகாவின் கன்னத்தில்…

“ஹேய்…நீ தானே?” மேகா சிரித்தாள்.

அவள் பின்னால் இருந்து ஒரு குரல். “ஹலோ மேகா, இன்னும் நான் மேலே போகவே இல்லை. செடிக்கு டாட்டா காட்டிவிட்டு இப்பத்தான் வரேன்”

இருவரும் சிரித்தனர்.<

1
தன்னம்பிக்கைன்னா என்னான்னு தெரியுமா?16th September 2026
கற்போம்! உயர்வோம்! (இதுதான் ஆங்கிலம்)16th September 2026கற்போம்! உயர்வோம்! (இதுதான் ஆங்கிலம்)

மற்ற படைப்புகள்

1591
அக்டோபர் 2025கதைகதை கேளு கதை கேளுபிஞ்சு 2025
26th August 2026 by Periyar Pinju

கொஞ்சம் ‘ஹெல்ப்’ பண்ணுங்க!(கதை கேளு கதை கேளு)

Read More
2023_feb_4
கதை கேளு கதை கேளுபிப்ரவரி2023
2nd February 2023 by விழியன்

சாக்லேட் மரம்

Read More
8
குறுக்கெழுத்துப் போட்டிபிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி(பெரிசு வேண்டுமா? )

Read More
15
குறுக்கெழுத்துப் போட்டிபிஞ்சு 2026மார்ச் 2026
21st September 2026 by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
13
2024கதை கேளு கதை கேளுசெப்டம்பர் 2024பிஞ்சு 2024
4th September 2024 by விழியன்

கதை கேளு… கதை கேளு…பூனைப் பள்ளிக்கு வந்த புலி நண்பர்

Read More
2019_apr_Page-14-16
ஏப்ரல் 2019கதை கேளு கதை கேளு
3rd April 2019 by விழியன்

அலாமியும் அதிசய பறவைகளும்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p