• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

கலிபோர்னியா காண்டோர் (CALIFORNIA CONDOR) பறவைகள் அறிவோம்-25

12
பறவைகள் அறிவோம்பிஞ்சு 2026மார்ச் 2026

பி இளங்கோ

தாயின் கருவிலிருந்து கருமுட்டையாக வெளிவந்து, தாயின் அரவணைப்பில் உயிராகி, தடைகளை உடைத்து வாழத் தொடங்கும் பறவைகள் பின்னர் பூமியில் வீழும் காலம் வரை உள்ள இடைவெளியே பறவைகளின் வாழ்க்கைக் காலம். இந்தக் காலத்திற்கு இத்தனை ஆண்டுகள்தான் என்பது கிடையாது. இந்தக் காலம் நொடிப் பொழுதாகவும் இருக்கலாம். சிறகுகள் தளர்ந்த முதுமைக் காலமாகவும் இருக்கலாம் நிர்ணயிக்கப்படாத இந்தக் காலவரம்பில் தான் ஒவ்வொரு பறவை இனமும் வாழ்க்கையை வாழத் தொடங்குகின்றன. அந்த வாழ்க்கையில் பூமியில் வாழும் பல்லுயிரிகளுக்கும் ஏதேனும் ஒருவகையில் தன்னால் இயன்ற நன்மைகளைச் செய்வதுதான் வாழ்க்கையின் உயிர்நாடி என விதைகளைச் சுமந்து கொண்டே பூமி முழுவதும் விதைக்கின்றன. விதைப்பவன் உறங்கலாம் ஆனால், விதைகள் உறங்காது. மண்ணில் விதைக்கப்பட்ட விதை – நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் செடியாகி, மரமாகி, பூவாகி, கனியாகி பல்லுயிரிகளுக்கும் உணவும் தங்குமிடமும் கொடுப்பதனால் இந்தப் புவி மண்டலத்தில் மதிப்பு மிக்கதாய் இருப்பது மரங்கள்தாம். வளர்ந்த மரங்கள் மகிழ்ச்சியோடு தலையசைத்துப் பறவைகளை அழைக்கும்.

பறவைகள் பறக்கும் ஆற்றலையும், வெப்ப இரத்தமும் கொண்ட முதுகெலும்புள்ள இனமாகும். பறவைகள் கால்களை கிளைகளில் அமரவும் ஓய்வெடுக்கவும் பயன்படுத்துவதோடு, கால்களின் வழியாக தங்களது உடற் சூட்டையும் தணித்துக் கொள்கின்றன. அவ்வாறான பறவைகளின் கால்களில் தசைகள் குறைவாகவும் இறகுகள் இல்லாமலும் இருப்பதைக் காண முடிகிறது. யூரிஹைட் ரோசிஸ் (UROHYDROSIS) என்பது சில பறவைகள் தங்கள் உடல் வெப்ப நிலையை சமநிலைப்படுத்தத் தங்கள் கால்களின் செதில்கள் உள்ள பகுதிகளில் தங்கள் கழிவுகளை (சிறுநீர் மற்றும் மலம் கலந்த நீர்த்த நிலை) வெளியேற்றும். இது ஒரு செயல் முறையாகும். இந்தக் கழிவில் உள்ள நீர் ஆவியாவதன் மூலம், ஆவியாதல், குளிர்ச்சி (EVAPORATIVE, COOLING) என்ற முறையில் உடல் வெப்பம் குறைக்கப்பட்டு குளிர்ச்சி ஏற்படுகிறது. இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கும் முக்கியப் பறவையினங்களில் பெரிய நாரைகள், நியூ வேர்ல்ட் வல்ச்சர்ஸ், துருக்கி கழுகு மற்றும் கலிபோர்னியா காண்டோர் பறவையினங்களாகும்.

பெரியார் பிஞ்சு வாசகர்களே! இந்த இதழில் நாம் காணவிருக்கும் பறவை கலிபோர்னியா காண்டோர் (CALIFORNIA CONDOR) வட அமெரிக்கா, கலிபோர்னியா நாட்டிலுள்ள மலைப்பாங்கான பகுதிகளில் காண்டோர் பறவைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. மேலும், அமெரிக்காவின் மிகப் பெரிய நிலப்பறவையாகக் காண்டோர் பறவை உள்ளது. இப்பறவையின் இறகுகள் கருப்பு நிறத்திலும், பறக்கும் பொழுது இறக்கையின் அடிப்பகுதியில் உள்ள முக்கோண வடிவ வெள்ளை நிறத் திட்டு காண்டோர் பறவைக்குக் கூடுதல் அழகைச் சேர்க்கிறது, கண்கள் பழுப்பு நிற வளையத்தில் சிவப்பு நிறத்தில் காட்சி தருகின்றன. தலை பெரும்பாலும் வழுக்கைத் தன்மையுடன் இருப்பதனால் அழுகிய பிணங்களை உண்ணும் போது எலும்புகளுக்கிடையே தலை சிக்கிக் கொள்ளாமலும், கிருமிகள் ஒட்டாமலும் வழுக்கி விடுகின்றன. இதனால் பெருந்தொற்று நோயிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது. வழமையான நாள்களில் இளம் பறவைகளின் தோல் சாம்பல் நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாகவும், இனப்பெருக்கக் காலத்தில் பிரகாசமான ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும், கால்கள் சாம்பல் வண்ணங்களில் இருக்கின்றன. சிறகுகள் சுமார் 3 அடி நீளம் கொண்டவை. சுமார் 4,600 மீட்டர் உயரத்தில் கூடச் சிறகுகளை அதிகம் அசைக்காமல் காற்றில் மிதந்த படியே 30 மைல் வேகத்தில் சுமார் 250 கி.மீ. பயணம் செய்யும் ஆற்றலுடையது.

காண்டோர் பறவைகள், உயிருள்ள விலங்குகளையோ, பறவைகளையோ துரத்திச் சென்று வேட்டையாடுவதில்லை. இறந்த விலங்குகளின் உடல்களை மட்டுமே உணைவாக உட்கொள்கின்றன. உணவைத் தேடி நீண்டதூரம் வானத்தில் வட்டமிட்ட படியே பறக்கும். ஒரு வட்டம் சுற்றிவர சுமார் 16 நொடிகள் மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. அழுகிய பிணங்களை உண்ணுவதால் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்குகின்றன. இப்பறவையின் உணவுக்குழாயில் சுமார் 3 கிலோ வரை இறைச்சியைச் சேமித்து வைக்கும் உணவுப் பை இருப்பதனால் 16 நாள்கள் வரை உணவு உண்ணாமல் உயிர் வாழும் சிறப்புத் திறன் கொண்டது. குளிர் காலத்தில் காண்டோர் பறவைகள் சூடாக இருக்க தங்கள் இறகுகளை உயர்த்துகின்றன. வெப்பமான காலத்தில் உடலின் வெப்பநிலையைச் சமன் செய்ய தங்களின் கால்களில் சிறுநீர் மற்றும் கழிவுகளைக் கழிக்கின்றன. ஆவியாகும் கழிவு காலில் ஓடும் இரத்தத்தைக் குளிர்வித்து உடல் முழுவதும் வெப்பநிலையைக் குறைக்கிறது. மேலும் அடிக்கடி குளிப்பதன் மூலமாகவும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தங்கள் இறகுகளைச் சுத்தம் செய்வதன் மூலமாகவும் காண்போர் கண்களைக் கவர்ந்திழுக்கும் ஆற்றலுடையது. பறவையினங்களில் நீண்ட காலம் உயிர் வாழக் கூடிய பறவைகளில் இதுவும் ஒன்று. சுமார் 50 லிருந்து 60 ஆண்டுகள் வரை. இப்பறவையினங்கள் பருவ வயதை அடைய சுமார் 8 ஆண்டுகள் ஆகின்றன. இயற்கையின் அதிசயங்கள் எல்லாம் எதிர் பாலினத்தின் மீதான வசீகரத்தில் இருந்தே தொடங்குகின்றன. முன் பனிக்காலம் முதல் இளவேனிற்காலம் வரை இனப்பெருக்கக் காலமாகும் (ஜனவரி – ஏப்ரல்) இக்கால கட்டத்தில் பருவமடைந்த ஆண் பறவை, தனக்கான இணைப் பறவையின் முன் தனது அழகான சிறகினை விரித்தபடியே, அடி மேல் அடி வைத்துப் பெண் பறவையை நோக்கிச் செல்லும் போதே தன்னுடைய தலையை அடர்சிவப்பு நிறமாக மாற்றி நிற்கும். இதனழகில் மயங்கும் பெண்பறவை தன்னுடைய இசைவைத் தெரிவிக்க தலையைத் தாழ்த்தி அசைக்கும். நீரும் மண்ணும் போல ஆணும், பெண்ணும் நொடி நேரத்தில் ஒன்றுடன் ஒன்று காற்று இடைவெளி இல்லாமல் கலக்கின்றன.

காண்டோர் பறவைகள், மிக உயரமான மரக்கிளைகளிலும் உயரமான மலைப் பாறை இடுக்குகளிலும் கூடுகட்டி முட்டையிட்டு, சுமார் 60 நாள்கள் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகள் கண்திறந்த நிலையிலேயே பிறந்தாலும் 5 முதல் 6 மாதங்களுக்குப் பின்னரே பறக்கக் கற்றுக் கொள்கின்றன. மேலும் சுமார் இரண்டாண்டு காலம் தாய் தந்தையின் அரவணைப்பில் ஒன்றாக வாழ்கின்றன. பூமி தன்னை ஒவ்வொரு நாளும் பூக்களால் ஒப்பனை செய்து கொண்டு ஆகாயத்தில் முகம் பார்த்து மகிழ்ச்சியடைவது பறவைகளால் தான்.

இவ்வளவு பெருமைமிக்க பறவைகளின் வாழ்க்கை என்பது உடைந்த பானையிலிருந்து வழியும் நீரைப் போல ஒழுகுகிறது. பறவைகளின் வாழ்க்கையைப் பாதுகாப்பதில் மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரும் கடமையாகக் கருதி பறவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் பசுமை உலகைக் கொடுப்போம்.

காண்டோர் பறவை அருவருப்பின் அடையாளமல்ல!

காண்டோர் பறவை தூய்மையின்          அடையாளம்!<

3
கணிதப் புதிர் சுடோகு16th September 2026
திருக்குறள் இல்லறவியல்: - அறத்துப்பால்16th September 2026திருக்குறள்  இல்லறவியல்: - அறத்துப்பால்

மற்ற படைப்புகள்

சுடோகுபிஞ்சு 2026மார்ச் 2026
16th September 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுஜனவரி 2026பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

எண்ணிப்பர் ஏழு வேறுபாடுகள் விடைகள்

Read More
ஓவியம் வரையலாம்பிஞ்சு 2026மார்ச் 2026
21st September 2026 by Periyar Pinju

தீப்பெட்டி(ஓவியம் வரையலாம்)

Read More
sdfdsaf
ஜனவரி 2026திருக்குறள்பிஞ்சு 2026
8th September 2026 by Periyar Pinju

திருக்குறள் அரசியல் – பொருட்பால்

Read More
10
பிஞ்சு 2026மார்ச் 2026
16th September 2026 by Periyar Pinju

தேர்வு அச்சம் தவிர்: தன்னம்பிக்கையுடன் வெற்றியை நமதாக்குவோம்!

Read More
15
ஜனவரி 2026துன்னுகுச்சீட்டுபிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

விக்கல் வருவது ஏன்? How it Works(துன்னுகுச்சீட்டு)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p