திருக்குறள் இல்லறவியல்: – அறத்துப்பால்

அதிகாரம் 24 – குறள் எண் 236
“தோன்றுஇல் புகழொடு தோன்றுக அஃதுஇலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.”
ஒருவர், தாம் புகவிரும்புகின்ற துறையில், புகழோடு விளங்கமுடியும் என்றால் மட்டுமே, அந்தத் துறையில் தோன்றவேண்டும். அதற்கான அறிவுத்திறனும், ஆற்றல் திறனும், வாய்ப்பும் இல்லாதவர்கள் அந்தத் துறையில் புகுவதைவிடப் புகாமலிருப்பதே நல்லதாகும்.




