திமிங்கலங்களின் தலைகீழ் பரிணாம வரலாறு!(விந்தை உலகம்)

அருண் பகத்
உயிர்களின் பரிணாம வரலாற்றில் மிக சுவாரசியமானது திமிங்கலத்தின் தோற்றம்.
மீன்களிலிருந்து இருவாழ்விகள், அதிலிருந்து ஊர்வன, அவற்றிலிருந்து பாலூட்டிகள், பிறகு பெரிய பாலூட்டிகள் – என்பது ஒரு புறம்! (Fishes to Amphibians to Reptiles to Mammals to Larger Mammals.)
ஊர்வனவற்றிலிருந்து பெரியவகை ஊர்வன, அவற்றிலிருந்து டைனோசர் வகைகள், அந்தக் குடும்பத்தின் ஒரு கிளையாக பறவைகள் இது மறுபுறம் . (Other side Reptiles to Larger Reptiles to Dino dynasty- one branch of Dino dynasty to Birds)
இப்படிச் செல்லும் பரிணாமச் சங்கிலியில், பெரும் பாலூட்டிகளிலிருந்து பெரிய வகை இருவாழ்வி அதிலிருந்து பெரிய மீன் 4. (Larger Mammal to Larger Amphibian to Larger Fish) என்று திமிங்கலத்தின் பரிணாமம் பின்னோக்கிய திசையில் நடந்திருக்கிறது.
பின்னோக்கி என்பதன் பொருள், ‘வளர்ச்சியை இழந்து’ என்பதல்ல!
திறன்மிக்க பாலூட்டி உயிரினமாக விளங்கிய திமிங்கலத்தின் மூதாதை, தனது மூதாதை பரிணமித்து வந்த கடலுக்குள் மீண்டும் சென்று, மாபெரும் மீனாகப் பரிணமிக்கும் போது, மிக அபாரத் திறன்களை கொண்ட உயிராக உருவெடுத்திருக்கிறது. எனவே, அறிவியல் பூர்வமாக இது முன்னோக்கிய பயணமே!
மீன் என்று சொன்னாலும் திமிங்கலமும் டால்ஃபின்களும் கடலில் வாழும் பாலூட்டிகளே! இவை மீன்களைப் போல முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதில்லை. மாறாக, குட்டியிட்டுப் பால் கொடுக்கின்றன.
மீன்களைப் போல செதில்களின் வழியாக ஆக்சிஜனை உள்ளிழுப்பதில்லை. கடலின் மேற்பரப்பிற்கு வந்து மூக்கு வழியாக சுவாசிக்கின்றன.
நிலத்தில் சாதாரணப் பாலூட்டியாக இருந்தது திமிங்கலத்தின் மூதாதை! ஆனால், கடலின் அரசனாக வலம் வருகின்றன திமிங்கலங்கள். இந்தப் பரிணாமம் சில நூறு ஆண்டுகளில் நிகழ்ந்திருக்காது. பல லட்சம் ஆண்டுகளாக மெல்ல மெல்ல நிகழ்ந்து இன்றைய திமிங்கலமாக உருவெடுத்திருக்கும்.
ஆம், புறச்சூழலின் மாற்றம், தகவமைப்பின் தேவை ஆகியவை தான் உயிர்களிடத்தில் புதிய திறன், அம்சங்களை தோற்றுவித்து புதிய உயிராக பரிணமிக்கச் செய்கின்றன. புறச்சூழலின் மாற்றத்துக்கேற்ப, புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளாத உயிர்கள் இயற்கைத் தேர்வில் தோல்வியடைகின்றன. சமூகத் தேர்வும் அப்படித்தான்.
திரைப்படம், பிரபஞ்ச வரலாற்றுக்கு நிகரான சுவாரசியத்தைக் கொண்டது உயிரினங்களின் பரிணாம வரலாறு. மதங்கள் சொல்லிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து, அறிவியல் பார்வையை மறுத்து, இவ் வரலாற்றை தெரிந்துக் கொள்ளாமல் போவது பெரிய இழப்பு!
பிஞ்சுகளே… உயிரினங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி பற்றிய அறிவியல் செய்திகளைத் தேடித் தேடிப் படியுங்கள்!<




