துணி எப்படி வெளுக்குது? (துணுக்குச் சீட்டு – 33)

அபி
அம்மா, நீ இரு, உனக்கு நான் சாம்பார் போடுறேன்”னு கிண்ணத்தை எடுத்துத் தட்டில் ஊற்றும் போது, கை தவறி மேசை விரிப்பிலும் கொட்டி விட்டான் இசையமுதன். அம்மா ஒரு பார்வை விடவும், “அது ஒன்னும் இல்லையம்மா, உனக்குப் பசிக்குற மாதிரியே இந்த விரிப்புக்கும் பசிச்சு இருக்கும்ல… அதுதான் மா, கொஞ்சம் அதுக்கும் கொடுத்தேன், அப்புறமா, துவைச்சிடுறேன்”னு சொல்லி அருமையாக மழுப்பி விட்டு ஓடிவிட்டான்.
சொல்லியபடியே விரிப்பைத் துவைத்துக் காயப்போடும்போது, அவனுக்கு ஒரு கேள்வி மனத்தில் எழுந்தது. வெறும் தண்ணீரில் முக்கும்போது போகாத அழுக்கு, வழலைக்கட்டியால் (SOAP) தேய்க்கும் போது போகுதே எப்படி?
அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் வேதியியல் பொருள் கலந்து இருக்கு. இந்த வேதியியல் பொருகளை எடுத்து உடைத்துக் கொண்டே வந்தால் ஒரு கட்டத்தில் அதை உடைக்கவே முடியாத நிலை வரும். அப்படி உடைக்க முடியாத அந்தச் சிறிய கண்ணுக்குத் தெரியாத துகளுக்குப் பெயர்தான் அணு. உதாரணத்துக்கு, சோடியம், கார்பன் போன்றவற்றைச் சொல்லலாம். இரண்டுக்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்றாக இருந்தால், அதை மூலக்கூறு என்று சொல்லுவோம்.
அப்போ, வழலைக் கட்டியும் வேதியியல் பொருள் தானா? ஆமாம், வழலைக்கட்டியின் மூலக்கூற்றில், கார்பன், நீர்வளி (HYDROGEN), ஆக்சிஜன் (உயிர்வளி), சோடியம் இருக்கும். மூலக்கூறுக்கும், எண்ணெய் என்றால் ரொம்பப் பிடிக்கும். இதுக்குத் தண்ணீரைக் கண்டாலே ஆகாது. COONa- க்குத் தண்ணீர்தான் பிடிக்கும் ‘எண்ணெய்’ என்ற சொல் கூட பிடிக்காது.
(CH3(CH2)16COONa) சோடியம் ஸ்டீரேட் என்னும் மூலக்கூறு தான் வழலைக் கட்டி முழுவதும் இருக்கும். ஒரு வழலைக்கட்டியை எடுத்தீங்கன்னா சுமார் 20 கோடி (CH3(CH2)16COONa) மூலக்கூறுகள் இருக்கும்.
துணியில் இருக்கும் அழுக்கு எண்ணெய்த் தன்மை கொண்டதாகவே இருக்கும். இதன் பிசுபிசுன்னு இருக்குற அழுக்கைப் பார்த்ததும் CH3 ஓடிப்போய் ஒட்டிக்கொள்ளும். தண்ணீரைக் கண்டதும், COONa ஒட்டிக்கொள்ளும். அந்த ஒரு அழுக்கில். ஒரு சின்ன இடம் கூட விடாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட (CH3) (CH2)16 COONa மூலக்கூறுகள் ஒட்டிக்கொள்ளும். அப்போ COONa? அது, தண்ணீரோடு ஒட்டிக்கொள்ளும். இதுங்களுக்கு நடுவுல இருக்குற (CH2)16 தான் பாவம், அல்லவா? இந்தப் பக்கம் (CH3) இழுக்கும். அந்தப் பக்கம் COONa இழுக்கும்.
I FEEL SORRY FOR YOU, (CH2)16.
“இன்னும் புரியும்படி சொல்லணும்னா துணியில் அழுக்கு இருக்கும், அதுமேல (CH3) ஒட்டிக்கிட்டு இருக்கும்; (CH3) கூட (CH2)16 COONa இருக்கும். (COONa) கூட தண்ணீர் ஒட்டிக்கிட்டு இருக்கும். மொத்தமாகப் பார்த்தால், ஒரு பந்து மாதிரி இருக்கும். நம்ம துணியை நல்லா கும்மும்போது, இந்தப் பந்து உடைந்து சின்ன சின்னப் பந்துகளாக மாறுது. இந்தப் பந்தின் வெளிப்புறம் (COONa) தான் இருக்கும். துணியை நல்லா கும்மும்போது, இந்த (COONa) தண்ணீரோட ஓட்டிகிட்டு இருக்குறதால, அழுக்கெல்லாம் – வழலைக் குமிழிப் பந்துகளாகி, தண்ணீரில் மிதக்க ஆரம்பிக்கும், அலசும் போது, துணிக்கு டாடா சொல்லிட்டு, தண்ணீரோடு வந்துவிடும். துணியும் பள பள என்று ஆகிவிடும். அது சரி, வெள்ளைத் துணியில் நீலம் போட்டால், அது எப்படி வெளுக்குது?<
(அடுத்து பார்ப்போமா…)


