தீப்பெட்டி(ஓவியம் வரையலாம்)
பி.இளங்கோ
பெரியார் பிஞ்சுகளே!
சிறு பெட்டிக்குள் நெருப்பை அடைக்க இயலும் என்று கண்டுபிடித்தவர் ஜான் வாக்கர்.
பாப்புலர், மட்டி, அல்டிஸா இரப்பர் மற்றும் முருங்கை மரங்களிலிருந்து தீப்பெட்டிக் குச்சிகள் தயாரிக்கப்பட்டு பாஸ்பரஸ், பொட்டாசியம் மருந்துகளைப் பயன்படுத்தி, நெருப்புக் குச்சி தயாரிக்கப்பட்டு அவை பெட்டியில் அடைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விற்கப்படுகின்றன. இந்தத் தீப்பெட்டியை எவ்வாறு ஆங்கில எழுத்துகள் உதவியுடன் வரையலாம் என்பதனைக் காண்போம்.
இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் E மற்றும் L. இந்த இரண்டு எழுத்துகளைக் கொண்டு தீப்பெட்டியை வரையலாம், வாங்க!



