• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

காட்டுல் தீ! (கதை கேளு கதை கேளு)

5
ஏப்ரல் 2026கதை கேளு கதை கேளுபிஞ்சு 2026

விழியன்

அமைதியான இரவு. காடு உறங்கிக் கொண்டு இருந்தது. வழக்கத்தைவிட அதிகமான அமைதி. மரங்கள்கூட பேசவில்லை. மரங்கள்கூட காற்றின் சத்தத்தைக் கேட்டு அமைதியாக இருந்தன. வானத்தில் விண்மீன்கள் மின்னிக் கொண்டிருந்தன. அவையும் எந்தச் சத்தமும் எழுப்பவில்லை. எல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த நேரம் அது.

அப்போதுதான் ஏதோ ஒரு மாறுபட்ட வாசனை காற்றில் பரவியது. பூக்களுடைய வாசனை இல்லை; மண்ணின் வாசனையும் இல்லை.  அது… புகை வாசனை.

“அம்மா… இது என்ன வாசனை?” என்று ஒரு குட்டி மான் மெதுவாகக் கேட்டது. அதற்குள் வானத்தின் ஓரத்தில் சிவப்பான ஒளி மின்னியது.

“அய்யோ! பக்கத்துக் காட்டில் தீ!” என்று ஒரு பறவை அலறியது.

அந்த வினாடியே காடு முழுவதும் கவலை பற்றிக்கொண்டது. குட்டி விலங்குகள் பயந்து ஓடின. பெரிய விலங்குகள் கவலைப்பட்டன. “இந்தத் தீ நம்ம காடு வரைக்கும் வந்துடுமா?” என்கிற பயம் எல்லாருக்கும் இருந்தது.

“வந்திடும்”

“வராதுன்னு நினைக்கிறேன்”

“போன முறை வந்தது”

“மழை வருமா?”

இப்படியாக பல குரல்கள் அங்கே கேட்டன.

அப்போதுதான் ஒரு மூத்த குரங்கு மெதுவாக, ஆனால் தெளிவாகச் சொன்னது: “இந்தத் தீயை அணைக்க நமக்குத் தண்ணீர் வேண்டும். மழை வருவது போலத் தெரியவில்லை. நிறைய தண்ணீர் வேண்டும். அதைச் சுமந்து கொண்டு வர யானைகளால்தான் முடியும்.”

ஆனால், யானைகள் காட்டின் வேறு முனையில் இருந்தன.

“யாராவது உடனே போய்ச் சொல்லணும்!” என்று எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள்.

அந்த நேரத்தில் முயல் முன்னே வந்தது. “நான் போறேன். நான் ரொம்ப வேகமா ஓடுவேன். சீக்கிரம் போய்ச் சொல்லிடுவேன்” என்று நம்பிக்கையுடன் சொன்னது.

அதற்கு ஆமை மெதுவாகப் பதில் சொன்னது. “இது இரவு நேரம். பாதையும் தெளிவாக இருக்காது. கொஞ்சம் யோசிச்சுச் செய்வது நல்லது.”

முயல் சிரித்தது. அதில் கோபமும் தொனித்தது.

“இப்ப யோசிக்க நேரமா இருக்கு? தீ நமக்காகக் காத்திருக்கும் போல?” என்று சொல்லிவிட்டு ஓடத் தொடங்கியது.

முயல் கற்களைத் தாண்டி, புதர்களைத் தாண்டி, மூச்சு வாங்கிக்கொண்டே ஓடியது. “எப்படியாவது யானைகளிடம் சொல்லிடவேண்டும்” என்ற ஒரே எண்ணம்தான் அதன் மனதில் இருந்தது.

இருட்டில் ஓடியதால் முயலின் கால்களில் காயம் ஏற்பட்டது. நீண்ட நேரம் ஓடிய பிறகு முயல் யானைகள் இருக்கும் இடத்தை அடைந்தது. ஆனால், அங்கே யானைகள் இல்லை. ஒன்றுகூட இல்லை. ஒருவேளை வெளியூர்ப் பயணம் சென்றுவிட்டனவோ?

“என்னடா இது சோதனை? காடு இன்றைக்கு நாசம்தான் போல” என்று வருத்தப்பட்டது. அதிர்ச்சியுடன் சுற்றிப் பார்த்தது.

அப்போதுதான் ஒரு குட்டி யானை அருகே வந்து, “ஏ முயலே, இங்க என்ன செய்றீங்க?” என்று கேட்டது.

“காட்டுல… காட்டுல… காட்டுல….காட்டுல தீ!” என்று முயல் சொன்னது. குரலில் அதிகப் பதற்றம் இருந்தது.

குட்டி யானை சிரித்தது. “அது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். எல்லா பெரிய யானைகளும் தண்ணீர் எடுத்துக்கொண்டு கிளம்பிட்டாங்க. குட்டி யானைகளைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லிட்டுக் கிளம்பிட்டாங்க”

முயல் குழம்பிப் போனது.

“யார் சொன்னது? ஆமை என்னைவிட வேகமாக வந்துவிட்டதா?” என்று குழம்பியது.

திரும்பவும் தனது பகுதியை நோக்கி வேகமாக ஓடியது. முக்கால்வாசி தூரம் சென்றபோது, எதிரே அதே ஆமை வந்து சேர்ந்தது.

“இது எப்படி சாத்தியமானது? நான் நடுவில் எங்கும் தூங்கவில்லையே? நிதானமே பிரதானம்னு சொல்லுவீங்களே” எனக் கூறியது முயல்.

“எல்லாக் காலத்துக்கும் ஒரே பொன்மொழி வேலைக்கு ஆகாது முயலே! நானும் மெதுவாக நடந்துவந்தேன்,” என்று ஆமை சொன்னது. “ஆனால் நடக்கும்போதே பறவைகளிடம் சொன்னேன். பறவைகள் மேலே பறந்து செய்தியை எல்லாத் திசைகளிலும் கொண்டு சேர்த்தன. அதனால யானைகளுக்குச் சீக்கிரமே தகவல் கிடைத்தது. அவையும் உடனே கிளம்பிவிட்டன. பறவைகள் அந்தச் செய்தியையும் இப்போது எங்களிடம் கூறின. சில இடங்களில் வேகம், சில இடங்களில் விவேகம், சில இடங்களில் நிதானம்” என்று சொல்லிக் கண்ணடித்தது.

முயல் அமைதியாகத் தலையை அசைத்தது. “நான் வேகமா ஓடினேன். நீங்கள் சரியான வழியைத் தேர்ந்தெடுத்தீர்கள்.”

சிறிது நேரத்தில் யானைகள் தண்ணீர் சுமந்து வந்து தீயை அணைத்துக், காட்டையும் நம்மைப் போன்ற விலங்குகளையும் காப்பாற்றிவிட்டன.

“முயலாரே, காலில் காயமாகி இருக்கு. காட்டைக் காப்பாற்றும் உங்கள் முயற்சிக்குத் தலை வணங்குகிறேன். உங்களை நினைத்துப் பதறியே நான் வந்தேன். இப்ப என் மேல ஏறி படுத்துத் தூங்குங்க. நான் மெதுவாக நம்ம பகுதிக்கு அழைத்துச் செல்கின்றேன். உங்க கால்களுக்கும் ஓய்வு தேவை” என்றது ஆமை.

“சரி” என ஏறிக்கொண்டது.

“நான் தூங்கணும்னா எனக்குக் கதை சொல்லணுமே” என்றது.

“முன்ன ஒரு காலத்துல ஒரு முயலுக்கும் ஆமைக்கும்…”

முயல் சிரித்தது. காடு மீண்டும் அமைதி நிலைக்குத் திரும்பியது.<

2
சின்னக்கைச் சித்திரம்21st September 2026
கடந்த இதழ் சுடோகு விடை;21st September 2026

மற்ற படைப்புகள்

எண்ணிப்பார் 7 வேறுபாடுஜனவரி 2026பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More
2016_jun_pinju6
கதை கேளு கதை கேளுஜூன்
3rd June 2016 by விழியன்

டம்டம் மற்றும் டமாடமா

Read More
2019_aug_a15
ஆகஸ்ட் 2019கதைகதை கேளு கதை கேளு
2nd August 2019 by விழியன்

அன்பால் உருவான பாலம்

Read More
2021_jun_v34
கதை கேளு கதை கேளுஜூன் 2021
1st June 2021 by விழியன்

கண்ணாமூச்சி ரே ரே..

Read More
2016_mar_pinju7
கதை கேளு கதை கேளுமார்ச்
3rd March 2016 by விழியன்

பியானாவின் பிறந்தநாள்

Read More
பிஞ்சு 2026மார்ச் 2026வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
21st September 2026 by Periyar Pinju

வண்ணம் தீட்டி மகிழுங்கள்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p