மேசைக் கடிகாரம் TABLE CLOCK (ஓவியம் வரையலாம்)
பி.இளங்கோ
மேசைக் கடிகாரம் என்பது மேசையின் மீது வைக்கவும் வெளியே எடுத்துச் செல்லவும், நேரம் காட்டும் கருவியாகும். இவை பெரும்பாலும் ஒலி எழுப்பும் வசதியுடன் பிளாஸ்டிக், உலோகம் போன்ற பொருள்களால் நேர்த்தியான வடிவமைப்புகளில் கிடைக்கின்றன. வீட்டிலும் அலுவலகத்திலும் மேசைகளை அலங்கரிக்கவும், நேரத்தைச் சரியாக நிருவகிக்கவும் இவை சிறந்த தேர்வாகும். பண்டைய காலத்தில் சூரியனின் நிழலை அடிப்படையாகக் கொண்ட சூரியக் கடிகாரங்களில் (Sundials) தொடங்கி, மணல் மற்றும் நீர்க் கடிகாரங்கள் எனப் பரிணாம வளர்ச்சியடைந்து, இன்று எலக்ட்ரானிக்ஸ் (Digital) கடிகாரம் வரை எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
1510இல் பீட்டர் ஹென்லைன் கையடக்க கடிகாரத்தை உருவாக்கினார். பின்னர் 1656இல் கிறிஸ்டியன் ஹியூஜென்ஸ் முதல் ஊசல் கடிகாரத்தையும் (Pendulum Clock) உருவாக்கினார். 20ஆம் நூற்றாண்டில் குவார்ட்ஸ் மற்றும் மின் அணுக் கடிகாரங்கள், துல்லியமான நேரத்தைக் காட்டின. இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நேரம் மிகவும் முக்கியமானது. நாம் அலுவலகம் செல்ல வேண்டியதாய் இருந்தாலும் ரயிலில் ஏற வேண்டியதாய் இருந்தாலும் (யாரையாவது) சந்திக்க வேண்டியதாய் இருந்தாலும் நம் கண்கள் எப்பொழுதும் கடிகாரத்தின் மீதே இருக்கும். வீட்டில் இருக்கும் போது சுவரில் தொங்கும் கடிகாரத்தையோ அல்லது மேசைக் கடிகாரத்தையோ பார்த்துத் தெரிந்து கொள்வோம். அந்த வகையில் பெரியார் பிஞ்சு வாசகர்களே, இன்று நாம் வரைய இருக்கும் ஓவியம் மேசைக் கடிகாரம். இதை எவ்வாறு ஆங்கில எழுத்துகள் உதவியுடன் வரையலாம் என்பதைப் பார்ப்போம் வாங்க! இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் O மற்றும் X. இந்த எழுத்துகளைக் கொண்டு வரையலாம். வாங்க!






