• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

பெரியார் பிஞ்சு எழுதிய புத்தகம்! (பிஞ்சு நூல் ஆறிமுகம் )

28
ஏப்ரல் 2026பிஞ்சு 2026பிஞ்சு நூல் ஆறிமுகம்

தென்றல் மணிமேகலை

பெரியார் பிஞ்சு செல்லங்களா …

எல்லாருக்குமே எழுதுகின்ற ஆசை இருக்கும். எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், எப்படி எழுத வேண்டும் என்று தெரியாது. என்ன எழுத வேண்டும் என்ற குழப்பம் இருக்கும். அப்படி எழுதுகின்ற ஆசை எண்ணம் இருப்பவர்களுக்குப்  பயிற்சி அளித்து, ஒரு புத்தக ஆசிரியராக உருவாக்கிட நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்ற ஒருவருடைய நூலைப் பற்றித் தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்

பள்ளியில் படிக்கிற போதே எழுதுகிற பழக்கத்தை வளர்த்து விட்டால் அந்தக் குழந்தை ஆளுமை மிக்கதாய் வளரும். எழுதுவதால் கையெழுத்து மட்டும் அல்ல, எழுதும் வேகம் மட்டுமல்ல, கற்பனைத் திறன் அதிகமாகும். அதனால் சொல் வளம் மிகும்; சொல்லாட்சி மிளிரும்; சிந்திக்கும் திறன் வளரும்.

சிறுவர்களை எழுத்தாளராக மாற்றுகின்ற இந்த இமாலய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது புத்தகம் எழுதும் இயக்கம்.

அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பயில்கின்ற தகுதியுள்ள மாணவர்களைக் கண்டறிந்து தொடர்ந்து பயிற்சி அளித்து அவர்களை எழுத்தாளர்களாக மாற்றுகிற ஏற்றமிகு பணியை அனைவரும் வியக்கும் வண்ணம் இந்த இயக்கத்தின் பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.

இப்படி சிறப்பு வாய்ந்த இந்தப் புத்தகம் எழுதும் இயக்கத்தில் பயிற்சி பெற்ற குழந்தை வி.யாழினி தான் நல்லெண்ணமும் நல்வாழ்க்கையும் என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதியுள்ளார் அந்தப் புத்தகத்தைப் பற்றித் தான் நாம் பார்க்கப் போகிறோம்.

பெரியார் பிஞ்சு யாழினி அவர்கள் தனது வாழ்க்கையில் நடந்த சில உண்மை நிகழ்வுகளைக் கற்பனை கலந்து கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

அவர் பயணம் செய்ததையும் பிறரிடம் கேட்டு அறிந்த செய்த செய்திகளையும் கதையாகத் தொகுத்து இந்தப் புத்தகத்தை வழங்கி உள்ளார்.

அனைவரும் நீண்ட தூரம் பேருந்தில் பயணம் செய்திருப்போம். அதுபோல் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் அம்மாவும், குழந்தையும் உணவுக்காகவும் சிறுநீர் கழிப்பதற்காகவும் நிற்கும் இடத்தில் குழந்தையின் அம்மா குழந்தையைப் பேருந்தில் அமர வைத்துவிட்டு உணவு வாங்குவதற்காகக் கீழே இறங்கி விடுகிறார். ஆனால், அம்மா வருவதற்குள் பேருந்து புறப்பட்டுவிடுகிறது. அப்போது அவள், தான் கொண்ட பயம், அழுகை, பிறகு அம்மா வந்தது, தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றது என முதல் கதை, இப்படி தன்னுடைய கோடை விடுமுறையில் நிகழ்ந்ததைச்  சொல்லியிருக்கிறார்.

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், ஊர்க்கு நாலு பேர் இருப்பார்கள்!  அந்த நாலு பேர்தான் எல்லோர் மனதிலும் பீதியைக் கிளப்புபவர்கள். அவர்கள் எதையாவது சொல்வார்களே என்று தான் எல்லோரும் பயப்படுவார்கள். அவர்களைக் கண்டு அஞ்சாது, தன் பெண் குழந்தையைப் படிக்க வைத்த ஒரு குடும்பத்தின் கதை!

நாலு பேர் என்ன சொல்வார்கள்? ஊர் என்ன சொல்லும்? என்று நினைத்தால், நாம் முன்னேற முடியாது. வாழ்ந்தாலும் இந்த ஊர் பேசும். தாழ்ந்தாலும் பேசும்.

இன்று விபத்துகள் எங்குப் பார்த்தாலும் நடக்கின்றன. அதற்கு முக்கியக் காரணம், சாலை விதிகளைப் பயன்படுத்தாமல் செல்வதுதான்.

சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒரு கதை.

பெண் குழந்தைகள் படிக்கவே கூடாது. வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும், ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்றும், பள்ளிக்கூட வாசல் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கக் கூடாது என்றும் இருக்கும் சூழலில் வளர்ந்த ஒரு குழந்தையின் ஆசை அய்.ஏ.எஸ். ஆவது.

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து, மாவட்ட அளவில் பரிசு பெற்று பிறகு அய்.ஏ.எஸ். ஆன கதை. எந்த உறவுகள் படிக்க வேண்டாம் என்று தடுத்தார்களோ அவர்களுக்கு முன் படித்து அய்.ஏ.எஸ். ஆகி, கல்விதான் முதல் சொத்து என்பதை உணர்த்தும் கதை.

நம் பெரியார் பிஞ்சுகளுக்குத் தஞ்சை என்றாலே நினைவுக்கு வருவது ‘பெரியார் பிஞ்சுகள் பழகு முகாம்’ தான்! அந்தப் பழகு முகாமுக்குச் சென்று அங்கு 5 நாள் நடந்தவற்றைத் தொகுத்து ஒரு கதையாகச் சொல்லி இருக்கிறார் நம் குட்டி ஆசிரியர்.

கோள்கள் என்றால் நம் அனைவருக்கும் பிடிக்கும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு உண்டு. எட்டு கோள்களுக்கும் அவற்றுக்கென்று தனித்தனிச் சிறப்புக்கூறுகள் இருக்கின்றன என்பது குறித்தான கதை ‘விண்ணுலகம்’ என்ற தலைப்பில் உள்ளது.

நல்ல நண்பர்கள் கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். மதி ஓர் ஏழைக் குழந்தை. அவளுக்கு அப்பா இல்லை. பள்ளிக்குச் செல்வது பிடிக்காது. அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காத அப்படிப்பட்ட குழந்தை, தனது தோழி மோனிகா வற்புறுத்திச் சொன்னதால் பள்ளிக்குச் சென்று நன்றாகப் பள்ளிப் படிப்பை முடித்து வெளிநாட்டுக் கல்லூரியில் படித்து, அங்கேயே வேலைவாய்ப்புப் பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறார்.

“நன்றி என்பது பயன் அடைந்தவர்கள் காட்ட வேண்டியது தவிர உதவி செய்தவர்கள் எதிர்பார்ப்பது சிறுமைக் குணம்” என்ற தந்தை பெரியார் அவர்களின் பொன்மொழிக்கு ஏற்ப அவரிடம் பேட்டி கேட்கும்போது, ‘இந்த நிலைக்கு வருவதற்கு மோனிகாதான் காரணம். மோனிகா மட்டும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை என்றால், நான் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன். மோனிகா அவர்களுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். இது ஒரு சிறிய உதவி தான் ஆனாலும் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு’ என்கிறார்.

இதுபோன்ற பல்வேறு கதைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.

நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துத் தங்களுடைய அனுபவங்களை ‘பெரியார் பிஞ்சு’ இதழுக்கு எழுதி அனுப்புங்கள்.

குழந்தைகளின் சிந்தனைகளை எழுத்து வடிவில் கொண்டுவருவதற்குப் பயிற்சி அளிக்கும் புத்தகம் எழுதும் இயக்கத்திற்குப் பெரியார் பிஞ்சுகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.<

நூல்: நல்லெண்ணமும் நல்வாழ்க்கையும்

ஆசிரியர்: யாழினி வி

பக்கங்கள்: 68, விலை ரூ.75

வெளியீடு: சுஃபியா ப்பளிகேஷன்ஸ், பிளாட் எண் 21/ஏ, இந்திரா நகர், கிஸ்கிந்தா மெயின் ரோடு, மேற்கு தாம்பரம், சென்னை-600045, செல்: 8667528774.

 

 

1
கணினிகளின் பந்தயம் (அறிவியல் வளர்ச்சி)கணினிகளின் பந்தயம் (அறிவியல் வளர்ச்சி)28th October 2026
முதற்பணி!28th October 2026

மற்ற படைப்புகள்

sdfdsaf
ஜனவரி 2026திருக்குறள்பிஞ்சு 2026
8th September 2026 by Periyar Pinju

திருக்குறள் அரசியல் – பொருட்பால்

Read More
15
ஜனவரி 2026துன்னுகுச்சீட்டுபிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

விக்கல் வருவது ஏன்? How it Works(துன்னுகுச்சீட்டு)

Read More
9
அறிவியல் வளர்ச்சிபிஞ்சு 2026மார்ச் 2026
16th September 2026 by Periyar Pinju

AI ஏமாற்றுக்காரர்களிடம் எச்சரிக்கை வழிகாட்டி!(அறிவியல் வளர்ச்சி)

Read More
சின்னக்கைச் சித்திரம்பிஞ்சு 2026மார்ச் 2026
21st September 2026 by Periyar Pinju

சின்னககைச் சித்திரம்

Read More
சுடோகுபிஞ்சு 2026மார்ச் 2026
16th September 2026 by Periyar Pinju

கடந்த இதழ் சுடோகு விடை;

Read More
ஏப்ரல் 2026ஓவியம் வரையலாம்பிஞ்சு 2026
28th October 2026 by Periyar Pinju

மேசைக் கடிகாரம் TABLE CLOCK (ஓவியம் வரையலாம்)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p