• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

அன்னையைப் போற்று! மே-10 அன்னையர் நாள் (சிறார் பாடல்)

1
சிறார் பாடல்பிஞ்சு 2026மே 2026

அன்னை என்றே உரைத்தாலே

அன்பு என்றே பொருளாகும்;

தன்னைத் தியாகம் செய்வதிலே

தாய்க்கிங் கீடாய் எவருண்டு?

 

தென்னை இளநீர் பெறுதற்கும்

தினமும் நீரை ஊற்றுகிறோம்;

அன்னை நாளும் காக்கின்றாள்;

அதற்கே ஈடாய் என்செய்தோம்?

 

பொன்னை மணியைத் தள்ளிடுவாள்;

புசிக்கும் உணவை மறந்திடுவாள்;

தன்னை மறந்து மழலையினைத்

தாங்கி அணைத்தே மகிழ்ந்திடுவாள்;

 

உன்னைப் போல அழகாக

உலகில் இங்கே எவருண்டு?

என்றே மகிழ்வாள் அன்னையவள்

எந்தக் குழந்தை ஆனாலும்;

 

மன்னன் குழந்தை ஆனாலும்

மற்ற குழந்தை ஆனாலும்

தன் குழந்தை போல்கருதும்

தாயின் தாய்மைக் கீடேது?

 

என்ன விலைதான் கொடுத்தாலும்

இனிய தாயின் அன்புக்கு

மண்ணு லகத்தில் ஈடான

மற்றோர் பொருளே இல்லையன்றோ?

 

கன்னம் தன்னில் முத்தமிட்டுக்

கனிவாய் நம்மை அணைக்கின்ற

அன்னை தன்னைப் போற்றிடுதல்

அனைவ ருக்கும் முதற்கடமை!

 

அன்னை இறக்கும் வரையினிலே

அவரைப் பாது காத்தல்தான்

என்றும் நமது பணியென்றே

இன்றே உறுதி பூண்டிடுவோம்!!

 – கே.பி. பத்மநாபன்

கோவை.

2
முதற்பணி!28th October 2026
AI உலகில் நான் ஏன் படிக்க வேண்டும்? (அறிவியல் வளர்ச்சி)28th October 2026AI  உலகில் நான் ஏன் படிக்க வேண்டும்? (அறிவியல் வளர்ச்சி)

மற்ற படைப்புகள்

13
ஜனவரி 2026நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

அளவுக்கு அதிகமானால் அதுவே கேடாகும்!(நினைவில் நிறுத்துவோம்)

Read More
9
இதுதான் ஆங்கிலம்ஜனவரி 2026பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

நம்மால் முடியும்!(இதுதான் ஆங்கிலம்)

Read More
12
நூல் மதிப்புரைபிஞ்சு 2026மே 2026
28th October 2026 by Periyar Pinju

6000 வகை தட்டான்கள் (நூல் மதிப்புரை)

Read More
Pinju February 2026 – Pages-3
பிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

செ.நு. இரட்டையர்: உங்கள் உடல்நலனைப் பாதுகாக்கும் டிஜிட்டல் நிழல்

Read More
அக்டோபர் 2025சிறார் பாடல்பிஞ்சு 2025
27th August 2026 by Periyar Pinju

வானவில்லும் வாழ்வும்!(சிறார் பாடல்)

Read More
28
சிறார் பாடல்பிஞ்சு 2026பிப்ரவரி 2026
16th September 2026 by Periyar Pinju

புத்தகமாம் புத்தகம்(சிறார் பாடல்)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p