குதியுந்து பாட்டி (Motor Cycle) ( ஓவியம் வரையலாம்)

மோட்டார் சைக்கிளைத் தமிழில் குதியுந்து என்று அழைப்பர். குதியுந்து என்பது சிறிய அளவிலான இரு சக்கரங்கள் கொண்ட இருவர் பயணம் செய்யக் கூடிய வாகனம். கார்களைவிட விலை குறைவாகவும் இயக்குவதற்கு எளிதாகவும், நிறுத்துவதற்கு வசதியாகவும் இருப்பதனால் சாமானிய மக்களும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். தானியங்கி கியர் அமைப்பு காரணமாக போக்குவரத்து நெரிசலான சாலைகளில் கூட பயணப்படுவதற்கு எளிதாக உள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த குதியுந்தைப் பெரியார் பிஞ்சு வாசகர்களே! நாம் எவ்வாறு ஆங்கில எழுத்துகள் உதவியுடன் அழகாக வரையலாம் என்பதைக் காணலாம். இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் O, D, P, V, U மற்றும் A.
வாங்க வரையலாம்.





