• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

திவ்யாவின் ஆசை (தோண்டுள்ளம்)

30
தோண்டுள்ளம்பிஞ்சு 2026மே 2026

சா கா பாரதி ராஜா

திவ்யா எப்போதும் துருதுரு என இருப்பாள். ஒரே இடத்தில் இருக்க மாட்டாள். சக தோழர்கள் வந்தாலே எப்போதும் விளையாட்டு தான். அவளுக்கு அதிகம் பிடித்தது தெரு தான். தெருவில் தானே எல்லோரும் வருவார்கள். கண்ணாமூச்சி, நொண்டி ஆட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாடுவாள்.

“பெண்ணாச்சே! ஒரே இடத்தில் அமைதியாக இருக்கிறாயா?” என அம்மா கண்டிப்பார். “போங்க அம்மா!” என்று ஓடி விடுவாள் திவ்யா.

பள்ளிக்குச் செல்லும்போது கூட்டமாகத்தான் செல்வாள். அவளுடன் சேர்ந்து செல்ல எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

அன்று பள்ளி காலை அசெம்ப்ளி கூட்டம். தலைமையாசிரியர் பேசினார். “மாணவர்களே! அனைவருக்கும் வணக்கம். நம் பள்ளியில் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்க இருக்கிறோம். இதில் சேருபவர்களுக்கு முதலுதவி கற்றுக் கொடுக்கப்படும். பல சேவைகள் செய்ய வேண்டும். யாருக்கு விருப்பம் இருக்கிறதோ வீட்டில் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும்” என்றார்.

திவ்யாவுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர வேண்டும் என்று ஆசை உருவாகியது. நண்பர்களைக் கேட்டாள். கார்த்திக், கோமதி, யாழினி ஆகியோர் சேர விருப்பம் என்றார்கள். இருந்தாலும் வீட்டில் கேட்க வேண்டும் என்றனர்.

“சரி! சரி! நானும் கேட்க வேண்டுமே! கேட்டுச் சேருவோம்” என்றாள் திவ்யா.

இரவு வந்தது. வீட்டில் அம்மாவிடம் சொன்னாள். “படிப்பு தான் முக்கியம். இதில் சேர்ந்தால் உன் படிப்பு என்ன ஆகும்? ஏற்கனவே நீ மிகவும் விளையாட்டாக இருக்கிறாய். துருதுருவென இருக்கிறாய். உன்னை எப்போதும் கண்காணிக்க முடியுமா? நீ சின்ன பெண். சேர வேண்டாம்” என்றார் அம்மா.

“அப்பா! தயவுசெய்து சேருங்கள்! எனக்கு மிகவும் விருப்பமாக இருக்கிறது” என்றாள் திவ்யா.

திவ்யாவின் விருப்பத்தை உணர்ந்து கொண்ட அவளது அப்பா “சரி! சேர்ந்து கொள்” என்றார். திவ்யாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி.

மறுநாள் திவ்யா செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்ந்தாள். அவளது நண்பர்களும் சேர்ந்தனர். எல்லோருக்கும் சீருடைகள் வழங்கப்பட்டன. வாரத்தில் இரண்டு நாள்கள் பயிற்சி வகுப்புகள் நடை பெற்றன. திவ்யா மிகவும் ஆர்வமாகச் செயல்பட்டாள்.

அவளது அம்மாவிற்கு மிகவும் வேதனையாக இருந்தது. பள்ளியிலிருந்து தாமதமாக வருகிறாள். படிப்பு பாதிக்கப்படுமோ என பயந்தார் அம்மா. ஆனால், திவ்யா மிகவும் நன்றாகப் படித்தாள். வீட்டின் தோட்டத்தில் செடிகளை வளர்க்க ஆரம்பித்தாள். குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தினாள். தண்ணீர்க் குழாய் திறந்திருந்தால் ஓடிச்சென்று குழாயை மூடுவாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. எல்லாக் குழந்தைகளும் திவ்யா வீட்டின் வாசலில் குவிந்தனர். ஆர்வமாக விளையாடினர்.

திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. சாலையில் ஒருவர் கீழே விழுந்து கிடந்தார். நாய் குறுக்கே வந்ததால், வண்டியிலிருந்து விழுந்திருக்கிறார். இரத்தம் சொட்ட ஆரம்பித்தது. எல்லோரும் ஓடி வந்தனர். அவரைத் தூக்கினர்.

இதைப் பார்த்த திவ்யா, வீட்டிற்குள் ஓடினாள். செஞ்சிலுவைச் சங்கம் அளித்த முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தாள். அந்த மனிதரின் உடலில் அடிபட்ட இடத்தைச் சுத்தம் செய்தாள். மருந்து வைத்து கட்டுப் போட்டாள். நீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினர் மக்கள்.

பின்பு, அருகிலிருந்தவரின் அலைபேசியை வாங்கி 108 எண்ணில் அழைத்தாள். அவசர ஊர்தி வந்தது. அடிபட்டவரை ஏற்றிச் சென்றது.

“ஆகா! நல்ல பெண்ணைப் பெற்றிருக்கிறீர்கள். அடிபட்டு விழுந்து கிடந்தவருக்குத் திவ்யா முதலுதவி செய்தாள். அவசர ஊர்தியை அழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாள். நல்ல குழந்தை இவள். நல்ல குணம். வாழ்வில் நல்ல நிலைக்கு வருவாள்” என அனைவரும் வாழ்த்தினர்.

அம்மாவிற்கு இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்பா புன்னகைத்தார்.

மறுநாள் பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டம். தலைமையாசிரியர் திவ்யாவை அழைத்தார். “நேற்று நீ ஒரு மனிதரைக் காப்பாற்றினாய். செய்தி எங்களுக்கும் வந்தது. உன்னால் பள்ளிக்குப் பெருமை. அதற்காக உனக்குப் புத்தகப் பரிசு” என்றார். மேலும் ஒரு  எழுதுகோலையும் பரிசாக அளித்தார்.

“நன்றி அய்யா. எழுதுகோல் எதற்காக அய்யா?” எனக் கேட்டாள் திவ்யா.

“படிப்பில் நீ முதல் மதிப்பெண் பெற்றதற்காக” என்று திவ்யாவை தட்டிக் கொடுத்து வழங்கினார் தலைமையாசிரியர்.

திவ்யாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. வெளியில் பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவின் அம்மாவிற்கோ எல்லையில்லா மகிழ்ச்சி. <

1
நம்ம ஊர் பாட்டி 9 நல்லகுறி சொல்லு தாயே!நம்ம ஊர் பாட்டி 9 நல்லகுறி சொல்லு தாயே!28th October 2026
மரநிழலில் மகிழ்வோடு இருங்கள்! (நினைவில் நிறுத்துவோம்)28th October 2026மரநிழலில் மகிழ்வோடு இருங்கள்! (நினைவில் நிறுத்துவோம்)

மற்ற படைப்புகள்

1
சிறார் பாடல்பிஞ்சு 2026மார்ச் 2026
16th September 2026 by Periyar Pinju

தேனீ பேசுகிறது

Read More
ஏப்ரல் 2026பிஞ்சு 2026வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
21st September 2026 by Periyar Pinju

வண்ணம் தீட்டி மகிழுங்கள்!

Read More
சுடோகுஜனவரி 2026பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

கணிதம் புதிர் சுடோகு

Read More
19
குறுக்கெழுத்துப் போட்டிபிஞ்சு 2026மே 2026
28th October 2026 by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி (பெரியார் குமார்)

Read More
படக்கதைபிஞ்சு 2026மார்ச் 2026
21st September 2026 by Periyar Pinju

ஏமாற்றாதே! ஏமாறாதே!(படக்கதை)

Read More
ஜனவரி 2026பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

வண்ணம் தீட்டி மகிழுங்கள்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p