கோடைக் காலத்தில் வாகனங்களை எப்படிப் பாதுகாப்பது?
எல்லாருக்கும் தேர்வு முடிஞ்சி விடுமுறை விட்டு இருப்பாங்க. இந்த மாதம் என்ன மாதம் என்று நினைவு இருக்கிறதா? எதற்கு ஏப்ரல் – மே விடுமுறை விடுகிறார்கள்? ஏன்னா, அப்போ வெயில் அதிகமா இருக்கும்! அதனால, அப்போ விடுமுறை விடறாங்க!
வெய்யிலில் இருந்து நாம எப்படி பாதுகாப்பாய் இருக்கணும், என்ன சாப்பிடணும், எங்கெல்லாம் போகணும்னு எல்லாருக்கும் நல்லாத் தெரியும். நாம மட்டும் பாதுகாப்பாய் இருந்தால் போதுமா? நாம நம்ம வீட்ல வச்சுப் பயன்படுத்துற வாகனங்களை கோடைக்காலத்துல எப்படி வச்சிக்கணும்னு சொல்லப்போறேன். நீங்க படிச்சிட்டு உங்க பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் சொல்லுங்க. சரியா?
இரு சக்கர வாகனம் Bike, முச்சக்கர வாகனம் (ஆட்டோ), நாற்சக்கர வாகனம் மகிழுந்து (Car) பெரும்பாலும் ஏதேனும் ஒன்று நம் வீட்டில் இருக்கும். அல்லது நாம் தினமும் பயன்படுத்தும் வாகனமாக இருக்கும். ஆமாம் தானே!
வண்டிக்குப் பெட்ரோல் போடும்போது அளவு கொஞ்சம் குறைத்துப் போடச் சொல்லுங்க. டேங்க் முழுதும் எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவும் போடக்கூடாது சரியா, டாங்க் முழுதும் நிரம்பி இருந்தா பிரஷர் அதிகமாகி ஓவர்லோடு ஆகி வெடிக்கும் சூழலோ, பற்றி எரியும் சூழல் வரும் வாய்ப்பு உள்ளது.
அடுத்து நீண்ட தூரம் வண்டியில போகும்போது வண்டி சூடாக இருக்கும். அப்ப பெட்ரோல் போடக்கூடாது; பெட்ரோல் வாசனை வரும்போது கண்டிப்பா போடக்கூடாது.
ஒரு வேலை Full Tank பெட்ரோல் போடற சூழல் வந்தா அதிகமான வெய்யிலில் வண்டியை நிறுத்த வேணாம் சரியா?
இதெல்லாம் Bike வச்சிருக்கறவங்களுக்கு!
லைட்டர் எல்லாருக்கும் தெரியும். ஒரு சிலர் பயன்படுத்துவாங்க. அவங்க கார்ல போகும்போது, கார்லயே லைட்டரை வச்சிட்டு போகக்கூடாது ஓகேவா, அடிக்கிற வெய்யில்ல லைட்டருக்குள் அழுத்தம் அதிகமாகி சில நேரம் வெடிக்கிற சூழல் வந்துடும்.
கண் கண்ணாடி போடுகிறவர்கள் அல்லது கூலிங்கிளாஸ் போடுபவர்கள் கண்ணாடியை டேஷ்போர்டில் வைக்கக்கூடாது. இந்தக் கண்ணாடியில் இருக்கும் லென்சு மூலமாக வெப்பம் பட்டு, கண்ணாடி உருகத் தொடங்கிடும்.
பவர் பேங்க்கை (Power Bank) மகிழுந்திலேயே கார்லயே வச்சிட்டு போயிட்டா வெப்பத்துல லித்தியம் பேட்டரி வெடிச்சு எரிய வாய்ப்பு இருக்கு.
வாசனைத் திரவியம் (பர்ஃப்யூம் பாட்டில்) கண்ணாடியில்லயா? அதைக் கூட கார்ல வச்சிட்டு போகக்கூடாது. வெப்பம் அதிகம்படும் போது வெடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
இப்போது, நான் சொன்ன செய்திகள் எல்லாம் சாதாரணமாக இருந்தாலும், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். நான் சொன்ன பல தகவல்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இருந்தாலும் அவற்றை நினைவூட்டுகிறோம்.<

