• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

அறிதுயில் அத்தண்ணா (கதை கேளு கதை கேளு)

25
கதை கேளு கதை கேளுபிஞ்சு 2026மே 2026

விழியன்

காட்டில் அந்தச் சத்தம் கேட்கின்றதா? காட்டில் எல்லா விலங்குகளுக்கும் ஒரு திறமை இருந்தது.

மான் – ஓடும்

குரங்கு – மரத்தில் தாவும்

அணில் – முந்திரி சேமிக்கும்

இதெல்லாம் சாதாரணம். ஆனால் அண்ணன் கரடி அத்தண்ணாவுக்கு ஒரு தனித் திறமை இருந்தது.

தூங்குவது! ஆமாம் ஆமாம் தூங்குவது! உங்க வீட்டு, எங்க வீட்டு தூக்கமில்லை. அந்த சத்தம் தூக்கும்போது வரும் குறட்டை சத்தம்தான்.

T T T

குளிர்காலம் தொடங்க இருந்தது.

“இந்த ஆண்டு நான் பெரிய தூக்கம் போடப்போறேன்!” என்று கரடி அத்தண்ணா அறிவித்தது. அணில் கேட்டது: ”எவ்வளவு நேரம்?” கரடி பெருமையாகச் சொன்னது:

“அது சாதாரண தூக்கம் இல்ல. அறிதுயில்!”

“அறிதுயில் என்றால் என்ன?” என்று முயல் கேட்டது.

“குளிர்காலம் முழுக்க தூங்குவது. கரடிகளின் பெரிய குளிர்தூக்கம்!” என்றது கரடி அத்தண்ணா. அது குகைக்குள் சென்று படுத்துக் கொண்டது. ஆனால் அத்தண்ணா தூங்கியது அறிதுயில் அல்ல, அதற்கும் மேலே! அது தூங்க ஆரம்பித்து அய்ந்து குளிர்காலம் வந்து போய்விட்டது.

முதல் குளிர்கால முடிவில் இது நடந்தது.

குகைக்குள் முயல் வந்தது. “அத்தண்ணா… எழுந்திரு!”

கரடி சற்று திரும்பியது. அதன் குறட்டை:

புர்ர்ர்ர்ர்…

டம் டம் டம்…

டிங் டிங் டங்…

புர்புர்ர்ர்…!

முயல் பயந்து ஓடிவிட்டது.

T T T

இரண்டாவது குளிர்கால முடிவில் குரங்குகள் வந்தன.

அவை தட்டம், டப்பா, மரக்கட்டை எல்லாம் அடித்தன.

“சத்தம் போட்டா எழுந்திடும் அத்தண்ணா!”

கரடி திரும்பி குறட்டை விட்டது.

புர்ர்ர்ர்ர்…

டம் டம் டம்…

டிங் டிங் டங்…

புர்புர்ர்ர்…!

குரங்குகள் ஒன்றை ஒன்று பார்த்தன.

“இது நம்ம இசைக்கே இசை போட்டுட்டு இருக்கு! கிளம்புங்க” என்று கிளம்பின.

T T T

அத்தண்ணா தூங்கும்போது காடு அமைதியாக இருக்காது.

அது ஒரு முழு குறட்டை இசைக்கச்சேரி! குகையை நன்றாக அடைத்துவிடுவார்கள். அதனால் கரடிக்கு இன்னும் சுகமாகத் தூக்கம் வந்தது.

T T T

மூன்றாவது குளிர்கால முடிவில் பறவைகள் திட்டம் போட்டன.

கரடி அத்தண்ணா இன்னும் தூங்கிக் கொண்டே இருந்தது. அதன் குறட்டை காட்டை முழுவதும் அதிரச்செய்தது.

புர்ர்ர்ர்ர்…

டம் டம் டம்…

டிங் டிங் டங்…

புர்புர்ர்ர்ர்ர்ர்…!

மரங்களில் இருந்த பறவைகள் எல்லாம் பறந்து எழுந்தன.

“இப்படி குறட்டை விட்டா நம்மால தூங்க முடியாது!” என்றது கிளி.

“அதை எழுப்பணும்!” என்றது மைனா.

அப்போது இரண்டு காகங்கள் பறந்து வந்தன. அவை இரட்டையர்கள். அவற்றின் பெயர்கள் கிச்சா மற்றும் பச்சா. ”எங்களுக்கு ஒரு யோசனை இருக்கு,” என்றது கிச்சா.

“மந்திரம் சொல்லி எழுப்பலாம்!” என்றது பச்சா.

இரண்டு காகங்களும் கரடியின் காதருகில் வந்து நின்றன.

அவை மெதுவாகச் சொல்லின

“கரடி கரடி எழுந்திரு…

ஒன் டூ த்ரி எழுந்திடு…

கரடி கரடி எழுந்திரு…

ஒன் டூ த்ரி எழுந்திடு… !”

எல்லா பறவைகளும் அமைதியாக காத்திருந்தன.

கரடி சற்று அசைந்தது.

“எழுந்துட்டான்!” என்று எல்லோரும் கத்தினார்கள்.

ஆனால் அடுத்த கணம்… கரடி திரும்பி இன்னும் பெரிய குறட்டை விட்டது.

புர்ர்ர்ர்ர்…

டம் டம் டம்…

டிங் டிங் டங்…

புர்புர்ர்ர்…!

கிச்சா, பச்சா இருவரும் வெளியே வந்தன. “மந்திரம் வேலை செய்யல!” என்றது கிச்சா. “இவன் தூக்கம் மந்திரத்தையும் கடந்து போச்சு! நாங்க அண்டார்டிக்கா போகிறோம்” என்றது பச்சா.

மரங்களில் இருந்த பறவைகள் எல்லாம் சிரித்தன.

T T T

அணில் ஒரு யோசனை சொன்னது.

“பயங்கர வாசனை வர மாதிரி சாப்பாடு பண்ணலாம்!”.

மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு சூப் செய்தார்கள்.

அதை கரடியின் மூக்கிற்கு அருகே வைத்தார்கள். கரடி தும்மியது. எழுந்தாச்சு என எல்லோரும் நினைத்தனர்.

“அச்சூ!”

அனைவரும் சந்தோஷப் பட்டார்கள்.

“எழுந்துட்டாரு!”

ஆனால்…

கரடி திரும்பி மீண்டும் குறட்டை விட்டது.

புர்ர்ர்ர்ர்…

டம் டம் டம்…

டிங் டிங் டங்…

புர்புர்ர்ர்…!

T T T

நாட்கள் கடந்தன. குளிர் போனது. வெயில் வந்தது. மழை வந்தது. குளிர் போனது. வெயில் வந்தது. மழை வந்தது. குளிர் போனது. வெயில் வந்தது. மழை வந்தது. எத்தனை நாட்கள் தூங்கியது என்ற கணக்கே மறந்து போனது. அத்தண்ணா இன்னும் தூங்கிக் கொண்டே இருந்தது.

ஒரு நாள் கரடி விழித்தது. யாரும் எழுப்பவில்லை. “அடடா… நான் கொஞ்சம் அதிகமா தூங்கிட்டேன்னு தோணுது.” ஏனெனில் காடு மாறி இருந்தது. அது குகையில் இருந்து வெளியே வந்தது. காடு அமைதியாக இருந்தது.  அத்தண்ணா தூங்க ஆரம்பித்தபோது இருந்த சிறிய செடிகள் இப்போது பெரிய மரங்களாக வளர்ந்திருந்தன. ஆற்றின் திசையே மாறி இருந்தது! ஆனால் யாருமே காணவில்லை.

“எங்க எல்லாரும்?”

அப்போது அணில் ஓடிவந்தது.

“அத்தண்ணா! ஓடு!”

“ஏன்?”

“டைனோசர்!”

கரடி பயந்து அணிலுடன் ஓட ஆரம்பித்தது. அவை ஓடி ஓடி ஒரு புதிய காட்டை அடைந்தன.

அங்கே…

அங்கே எல்லா விலங்குகளும் இருந்தன.

முயல்

குரங்கு

மான்கள்

பறவைகள்

எல்லோரும்!

விருந்து நடந்து கொண்டிருந்தது.

கரடி நடுக்கமான குரலில் கேட்டது:

“டைனோசர் எங்கே?”

அணில் குதித்து குதித்து சிரித்தது.

“டைனோசர் இல்ல.”

“அப்போ?”

“நாங்க காடு மாற்றி வந்துட்டோம்!”

“நீ சீக்கிரமா ஓடணும்னு சொன்ன கதை!”

எல்லோரும் சிரித்தார்கள்.

அணில் சொன்னது “இது தெரிஞ்சிருந்தா எப்பவோ டைனோசர் வந்திருக்குன்னு காதில் சொல்லி இருக்கலாம் போலயே!”

மீண்டும் அத்தண்ணா சொன்னது “நான் தைரியசாலிதான். டைனோசர்னா மட்டும் கொஞ்சம் பயம்”.

விருந்து களைகட்டியது.

T T T

விருந்தில் கரடி தேன் சாப்பிட்டு விட்டுச் சொன்னது:

“சரி! இனிமே நான் இவ்வளவு அறிதுயில் போக மாட்டேன்!”

அதை கேட்டதும்…

முழு காடு ஒரே சத்தம் போட்டது:

புர்ர்ர்ர்ர்…

டம் டம் டம்…

டிங் டிங் டங்…

புர்புர்ர்ர்…!

“அடடா… இப்போ யார் தூங்கப் போறாங்க?”

காடு முழுக்க குறட்டை சத்தம். அத்தண்ணாவின் அறிதுயில் குறட்டை  முழுக் காட்டுக்கும் தொற்றிக்கொண்டது.<

1
சின்னக்கைச் சித்திரம்28th October 2026
எண்ணிப்பார் 7 வேறுபாடு!28th October 2026

மற்ற படைப்புகள்

2020_feb_v21
கதைகதை கேளு கதை கேளுபிப்ரவரி 2020
28th January 2020 by விழியன்

கமழி (ஓசோன்) ஓட்டை

Read More
2022_July_ne1
கதை கேளு கதை கேளுஜூலை 2022
5th July 2022 by விழியன்

பம்பம்டோலேய்….

Read More
ஏப்ரல் 2026பிஞ்சு 2026மாணவர் படைப்பு
28th October 2026 by Periyar Pinju

பாம்புக்குப் பால் … (மாணவர் படைப்பு – 3)

Read More
2023_may_3
கதை கேளு கதை கேளுமே 2023
4th May 2023 by விழியன்

பிடிச்சிக்கோ

Read More
24
கதை கேளு கதை கேளுடிசம்பர் 2023பிஞ்சு 2023
13th December 2023 by விழியன்

”எனக்கு மீன்களைப் பிடிக்கணும்”

Read More
28
சிறார் பாடல்பிஞ்சு 2026மே 2026
28th October 2026 by Periyar Pinju

ஆட்டம் பிறந்தது (சிறார் பாடல்)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p