ஆட்டம் பிறந்தது (சிறார் பாடல்)

மாமா பாடினார் பாட்டு
மகிழ்ந்தேன் நான்அதைக் கேட்டு
ஆட வேண்டும் என்றார்
அங்கே யேஅவர் நின்றார்
தங்கையும் அங்கே வந்தாள்
தைதை அபிநயம் தந்தாள்
அக்கா குரலும் கேட்டது
அவர்கை தாளம் போட்டது
உடனே பிறந்தது ஆட்டம்
ஒடி வந்தது கூட்டம்.
– முனைவர் முரசு நெடுமாறன்




