• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விந்தை மருந்துகள்

2012_september_periyarpinju-10
செப்டம்பர்

மனித உடலுக்கு மருந்தாக அமைவதில் உணவுக்கே முதலிடம் என்பதை அறிந்திருப்பீர்கள். சில குறிப்பிட்ட காய், கனிகள் சில குறிப்பிட்ட நோய்க்கு மருந்தாக இருக்கின்றன. அதனால்தான் மருத்துவர் மருந்துகளோடு காய், கனிகளையும் சாப்பிடச்சொல்கிறார். அந்த வகையில் இந்த மருந்துகள் வியப்பிலும் வியப்பானவையாக உள்ளன. மனித உடலின் உறுப்புகளைப் போன்ற வடிவம் கொண்ட காய், கனிகள் அந்த உறுப்புகளுக்கே நலம் சேர்ப்பவையாக இருக்கின்றன என்பதை அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. அந்த ஆய்வு சொல்லும் வியப்பான செய்திகளைப் பாருங்கள்.

கேரட் – கண்கள்

ஒரு கேரட்டை குறுக்குவாட்டில் வெட்டிப் பார்த்தால் அது ஒரு கண்ணைப் போலவே தோற்றமளிக்கும். கண்பார்வைக்கு எந்த அளவுக்கு இந்த கேரட் உதவி செய்கிறது என்பது வியப்பைத் தரும் செய்தியாகும். பிடாகரோடின்  என்னும் தாவர வேதியியல் பொருளிலிருந்து கேரட் தனது ஆரஞ்சு நிறத்தைப் பெறுகிறது. இந்த பிடாகரோடின் கண்புரை நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. 65 வயதைக் கடந்த நால்வரில் ஒருவரை பாதிக்கும், முதுமையுடன் தொடர்புடைய கண் பார்வைச் சீரழிவு ஏற்படாமல் பாதுகாக்கவும் செய்கிறது.

வால்நட் – மூளை

வால்நட் பருப்பில் உள்ள சுருண்ட மடிப்புகள் மனித மூளையைப் போல் தோற்றமளிப்பதாகும். ஒமேகா 3 என்னும் நல்ல கொழுப்புச் சத்து குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருக்கும் ஒரே பருப்பு வகை  இது. முதுமை மறதி, நினைவ7ற்றல் இழப்பு, மனத் தளர்ச்சி எனப்படும் டெமென்சியா நோயைத் தவிர்க்கவும் இது உதவும். அல்செமியர்ஸ் நோயுடன் தொடர்புடைய இரத்த உரைவுக் கட்டிகளை இந்த வால்நட் சத்து கரைக்கிறது என்று என்று ஒரு அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

 

தக்காளி – இதயம்

சிகப்பு நிறத்தில் இருக்கும் தக்காளி பொதுவாக, நமது இதயத்தைப் போலவே  நான்கு அறைகளைக் கொண்டிருக்கும். மாரடைப்பு மற்றும் பல புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும் லிகோபின் என்ற தாவர வேதிப் பொருள் அதிக அளவில் தக்காளியில் உள்ளது. அமெரிக்காவில் 40,000 பெண்களிடம் மேற்கொண்ட ஓர் ஆய்வில்,  அதிக அளவு லிகோபின் அளவு இருந்த பெண்களில்  30 விழுக்காட்டினருக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பு சத்தின் பாதிப்பை எதிர்க்க இந்த லிகோபின் உதவுகிறது என்று சோதனைகள் காட்டுகின்றன. இதய ரத்தநாள நோய்களை லிகோபின் தடுக்கிறது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரம் இருப்பதாக கனடா நாட்டு ஆய்வின் முடிவுகள்  தெரிவிக்கின்றன.

திராட்சை – நுரையீரல்

காற்றுச் சிற்றறைகள் என்று அழைக்கப்படும் சின்னஞ்சிறு தசைத் தொகுப்புகளை கொண்ட பகுதிகளாக மூச்சுக் காற்று சென்று வரும் நமது நுரையீரல் அமைந்துள்ளது.  பார்ப்பதற்கு திராட்சைக் கொத்துகள் போல இருக்கும் இந்தக்  கட்டமைப்புதான் உயிர்காற்றை நுரையீரலில் இருந்து ரத்தத்திற்கு செலுத்துகிறது. 23 – 24 வார அளவில் மட்டுமே வளர்ந்த கருவால் பிறக்கும் குறைப் பிரசவக் குழந்தைகள் மூச்சு விட சிரமப்படுவதற்கு இதுவே காரணம். திராட்சை போன்ற பழங்களை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நுரையீரல் புற்று நோய் மற்றும் காற்றேற்ற விரிவு நோய் பாதிப்பைக் குறைக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. திராட்சைகளில் உள்ள பரேந்தோசினிடின் என்ற வேதிப்பொருள் ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்மாவின் தீவிரத்தைக் குறைவதாகவும் தெரியவந்துள்ளது.

 

பாலாடைக்கட்டி – எலும்புகள்

எம்மெந்தால் போன்ற பாலாடைக் கட்டி உங்கள் எலும்புகளுக்கு  நன்மை பயப்பது மட்டுமன்றி, அதன் உள் கட்டமைப்பில் எலும்புகளைப் போலவும் தோன்றுகிறது.  பலமான எலும்புகளுக்குத் தேவையான, முதுமையில் எலும்புகள் மெலிந்து போவது, முறிவது ஆகியவற்றைத் தடுப்பதுமான  கால்சியம் சத்து இதில் அதிக அளவு உள்ளது. பாஸ்பேட்டுடன் சேர்ந்து இந்த கால்சியம் எலும்புகளுக்கு முக்கியமாக பலம் அளிப்பதுடன், தசைகள் ஆற்றல் பெறவும் உதவுகிறது. குழந்தைப்  பருவத்தில் போதுமான அளவு கால்சியம் சத்து உணவில் சேர்த்துக் கொள்வது பலமான எலும்புகள் அமைவதற்கு இன்னியாமையாதது ஆகும். நாள்தோறும் எடுத்துக் கொள்ளும் கால்சியம் அளவை 800 மில்லிகிராமிலிருந்து 1,200 மில்லிகிராமம் அளவுக்கு உயர்த்தி உண்ணும் பதின்ம வயதினரது எலும்பின் அடர்த்தி 6 விழுக்காடு அதிகரிக்கிறது என்று  நியூயார்க் கொலம்பியா பல்கலைக் கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இஞ்சி – வயிறு

இஞ்சி  பார்ப்பதற்கு தோற்றத்தில் வயிற்றைப் போலவே இருக்கும்.   உணவு செரிமானத்துக்கு இஞ்சி பெரும் அளவில் உதவுகிறது. வயிற்றுப் பொருமலைப் போக்கவும், குமட்டலைக் கட்டுப்படுத்தவும் சீனர்கள் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக இஞ்சியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். வயிற்றுப் போக்கை நிறுத்தவும் அது உதவுகிறது. மனஅழுத்தத்தைப் போக்கும்.

வாழை ‍ புன்னகை

ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டவுடன் உற்சாகம் பெறும் உங்கள் முகத்தில் புன்னகை தவழ்கிறது. டிரிப்டோபேன் என்ற புரத சத்து வாழைப்பழத்தில் இருக்கிறது. வாழைப்பழம்  செறிமானமானவுடன், இந்த டிரிப்டோபேன்  என்ற புரதசத்து செரோடோனின் என்ற ஒரு வேதிப் பொருளாக மாறுகிறது. மூளையில் இருக்கும் மனநிலையைக் கட்டுப்படுத்தும்  வேதிப் பொருள்களில் மிகவும் முக்கியமானது இது. மிகுந்த மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகவும் இந்த செரோடனின்  செயல்படுகிறது. இது அதிக அளவில் இருக்கும்போது மகிழ்ச்சி நிறைந்த மனநிலை நிலவும்.

காளான் – காது

ஒரு காளானை குறுக்குவாட்டில் இரண்டாக வெட்டிப் பார்த்தால், அது மனிதர்களின் காதைப் போலவே தோற்றம் அளிக்கும்.  உங்கள் உணவுடன் காளான்  சேர்த்துக் கொண்டால் உங்களின் கேட்கும் ஆற்றல் கூடும்.  வைட்டமின் னு  சத்து உள்ள  நமது உணவுப் பொருள்கள் மிகமிகச் சிலவே; அவற்றுள் ஒன்று காளான். மூளைக்கு ஒலியைக் கொண்டு செலுத்தும் காது எலும்புகள் உள்ளிட்ட எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு இந்த வைட்டமின் சத்து இன்றியமையாதது.  புற்றுநோய் போல் தோன்றும்.

புற்றுநோயை நீக்கும் முட்டை கோஸ்

முட்டைக் கோசின் மீது இருக்கும் சின்னஞ்சிறு பச்சை முனைகள் பார்ப்பதற்கு நூற்றுக்கணக்கான புற்றுநோய் செல்களைப் போலவே இருக்கின்றன. புற்றுநோயைப் போல் தோற்றமளிக்கும் இந்த காய் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது என்று விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். வாரம் ஒரு முறை முட்டைகோசை உட்கொண்டால், விந்துப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை 45 விழுக்காடு அளவு குறைக்கிறது என்று அமெரிக்க தேசிய புற்றுநோய்க் கழகத்தில் ஒரு குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

– இணையத்திலிருந்து  த.க.பாலகிருஷ்ணன்

20
பிஞ்சுகள் பக்கம்9th September 2012
வரைந்து பழகுவோம்9th September 2012வரைந்து பழகுவோம்

மற்ற படைப்புகள்

environment
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

சூழல் காப்போம்-5

Read More
ஓர் இளைஞன்
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

ஓர் இளைஞன்

Read More
2012_september_periyarpinju-20
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

உலகின் உயரிய நகரங்கள் – மாஸ்கோ

Read More
பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே...
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே…

Read More
சுடோகு
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

சுடோகு

Read More
மழலையும் மழைத்துளியும்
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

மழலையும் மழைத்துளியும்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p