• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சாமிகளின் இறப்பும் பிறப்பும் – 4

2012_november_pinju-17
நவம்பர் 2012

மனிதரிடம் அடிவாங்கும் சாமிகள் . .

காதலித்த குற்றத்துக்காக மக்கள் மதுரை வீரனைச் சாமியாக்கிக் கும்பிட்டது சரி. ஆனால் அதை மதுரை திருமலை மன்னர் ஏன் எதிர்க்கவில்லை? அதையும்கூட அவர் தன் அதிகாரத்தால் தடுத்திருக்கலாம்தானே?

தடுத்தால் தன் மீது மக்களின் கோபம் இன்னும் அதிகமாகுமல்லவா? சாமியாக்கிக் கும்பிட்டால் அப்படியே மக்களின் கோபம் தணிந்து போகும் என்று நினைத்துத்தான் மன்னர் (கண்டுக்காம) விட்டுவிட்டார். சாமி கும்பிட்டால் கோபம் தணியும் அல்லவா?

அதனாலதான் ஆட்சியில் இருப்பவர்கள் எப்போதும் மக்கள் சாமி கும்பிட்டுப் பக்தியாக இருப்பதை ஆதரிக்கிறார்கள். கோவில்களுக்குச் செலவு செய்யப் போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். பழைய மன்னர் ஆட்சி ஆனாலும் சரி, இப்போதைய மந்திரிகள் ஆட்சி ஆனாலும் சரி. தங்கள் மீது மக்கள் கோபம் கொள்ளாமல் எப்படியாவது அவர்களது கவனம் சாமி பக்கம் திருப்பி அமைதியாக இருந்தால் சரி என்றுதான் ஆட்சி செய்பவர்கள் நினைப்பார்கள்.

ஆனால் இன்று மதுரைவீரன் சாமியை சக்கிலியர் ஜாதிக்காரர்கள் மட்டும் கும்பிடவில்லை. பிற ஜாதிக்காரர்களும் கூட கும்பிடுகிறார்கள். அது ஏன்?

செத்தது சக்கிலியர்தான். ஆனால் கொன்றது பிற ஜாதிக்காரர்கள் ஆச்சே. கொன்றவர் களுடைய கனவில் எல்லாம் மதுரைவீரன் வந்து இப்படி அநியாயமாகக் கொன்னுட்டிங்களே பாவிகளா.. என்று கேட்டிருப்பான் அல்லவா? அவனை வெட்டிய அந்தக் கடைசி நிமிடத்தில் _ அவன் உயிர் பிரிகிற அந்த இறுதி நொடியில் _ அவன் பார்த்த பார்வை அவனை வெட்டியவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் அல்லவா? அது அவர்கள் மனசில் ஏற்படுத்திய பயத்தைப் போக்கிக் கொள்ளவும் தப்புப் பண்ணிட்டமே என்கிற குற்ற உணர்வை மறைத்துக் கொள்ளவும் தான் பிற ஜாதியரும் மதுரை வீரனைக் கும்பிடுகிறார்கள்.

அப்படியே அவர்களின் பிள்ளைகளும் கும்பிட்டார்கள். இன்றுவரை அப்படி பல பிறஜாதிக் குடும்பங்களும் பழக்கப்படி கும்பிட்டு வருகிறார்கள். இன்று கும்பிடுபவர்களுக்கு தாங்கள் ஏன் ஒரு சக்கிலியச் சாமியைப் போய்க் கும்பிடுகிறோம் என்று தெரியாது. ஆனால் குடும்ப வழக்கம் என்று கும்பிட்டு வருவார்கள்.
ஆக மதுரைவீரன் கதையிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது?

இந்த ஏழைச்சாமிகள் எல்லாம் கற்பனையான சாமிகள் அல்ல. உண்மையில் கொஞ்ச காலத்துக்கு முன்னால் நம் நாட்டில் வாழ்ந்த மனிதர்கள்தான். அவர்கள் கொல்லப்பட்டதால் கும்பிடப்படுகிறார்கள். மதுரைவீரன் வாழ்ந்த காலம் மதுரையை திருமலை நாயக்கர் ஆண்டு வந்த காலம்தான். ஆகவே அவர் 1634அய் ஒட்டிய வருடங்களில் வாழ்ந்த மனிதர்தான், இன்று சாமியாக நிற்கிறார்.

சரி, இன்னும் சில ஏழைச்சாமிகள் கதையைப் பார்த்துவிட்டு அப்புறம் அந்தப் பணக்காரச் சாமிகளின் பிறந்தநாள் என்னா ஏது என்று பார்க்கப் போகலாம். எல்லாச் சாமிகளின் பிறந்தநாளும் நம்ம அறிவியலின் கையில், வரலாற்றின் கையில் இருக்கிறதல்லவா?

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முத்தாலம்மன் என்று ஒரு அம்மன் சாமி இருக்கிறது. இன்று பல ஜாதிகள் அதைக் கும்பிட்டாலும் கவுண்டர் ஜாதிக்காரர்களின் சாமிதான் அது. முத்தாலம்மனின் கதை என்ன? கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் அந்தப் பகுதியில் முத்தாலம்மன் என்கிற பெண் வாழ்ந்து வந்தாள். அவள் மேல்சாதியான கவுண்டர் சாதியில் பிறந்தவள்.

இளம்பெண். அதே ஊரைச் சேர்ந்த கீழ்ச்ஜாதி என்று ஒதுக்கப்பட்ட பறையர் சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞனைப் பார்க்கிறாள், பேசுகிறாள், சிரிக்கிறாள், பழகுகிறாள். அப்புறம் என்னா? லல லல லல லலாதான். லவ் வந்துவிட்டது. காதலித்தார்கள். இளைஞர்களுக்கு ஜாதி கிடையாதல்லவா? ஊர்ப்பெரிசுகள் தானே ஜாதி என்கிற இழவைக் கட்டிக் கொண்டு அழுவார்கள்? ஆகவே முத்தாலம்மா ஒரு முடிவெடுத்தாள்.

தன் காதலனை இழுத்துக் கொணடு ஊரை விட்டு ஓடிவிட்டாள். இழுத்துக்கிட்டு ஓடிட்டா என்பது ஊர்ப் பெரிசுகளின் வாக்கு. நம்மைப் பொறுத்தவரை அவர்கள் மனம் விரும்பி இணைந்தார்கள். ஊரைப் பகைத்துக் கொண்டு அங்கேயே இருக்க முடியாது என்பதற்காக வேறு ஊருக்குப் போய்விட்டார்கள். அங்கே போய்க் கல்யாணம் செய்து கொண்டு நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்கள்.

ஜாதி சும்மா இருக்குமா?

சினிமாவில் வரும் வில்லனாக நிஜ வாழ்க்கையில் ஜாதி அவர்களைக் குண்டாந் தடிகளோடு துரத்தியது. தேடிக்கண்டுபிடித்து அவள் காதலனை அங்கேயே வெட்டிப்பலி கொடுத்தார்கள். அவளை மட்டும் ஊருக்கு இழுத்து வந்தார்கள். ஊர் எல்லையில் இருந்த குளக்கரையில் வைத்து அவளை குண்டாந்தடியால் அடி அடி என்று அடித்தே கொன்றுபோட்டார்கள். ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. பெண்கள், குழந்தைகளெல்லாம் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்கள். ஆனாலும் ஜாதிப் பெரியவர்களை எதிர்த்து யாராலும் பேச முடியவில்லை. அப்போதுதான் போலீஸ், கோர்ட், சட்டம் என்று ஜனநாயகம் வரவில்லையே? தடி எடுத்த தடியர்கள் கையில்தான் எல்லாம் இருந்தது.

அந்தப் படுகொலையைக் கண்ணாரக் கண்ட எல்லோருக்கும் அன்று ராத்திரி தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் அந்தப் பாவப்பட்ட முத்தாலம்மனின் கண்ணீரும் ரத்தமும்தான் கனவில் வந்தது. குழந்தைகள் எல்லாம் தூக்கத்திலிருந்து திடீர் திடீரென்று விழித்துக் கதறி அழுதன. இப்படி ஒரு பெண் பாவமும் பழியும் ஊர் மேல் வந்துவிட்டதே என்று ஊரில் இருந்த சில நல்லவர்களும் தாய்மார்களும் கவலைப்பட்டார்கள். அவர்கள் கூடிப்பேசி ஒரு முடிவு செய்தார்கள். அதுதான் இனிமேல் நாம் எல்லோரும் சேர்ந்து கோவில் கட்டி முத்தாலம்மனைச் சாமியாக்கிக் கும்பிடுவோம் என்கிற முடிவு. சரி என்று கோவில் கட்டினார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு முத்தாலம்மன் என்று பேர் வைத்தார்கள். கொல்லப்பட்ட அவள் கணவனை எல்லோரும் மறந்துவிட்டார்கள். அவன்தான் பறையனாச்சே, தாழ்த்தப்பட்ட சகோதரனை யார் நினைக்கப் போகிறார்கள்?

ஆனாலும் ஜாதிப்பெரிசுகள் அப்படியே முத்தாலம்மனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவளை எப்படிக் கும்பிட வேண்டும் என்று ஒரு உத்தரவு போட்டார்கள். அதாவது அய்ப்பசி மாதம் சிறிய விழாவாக நடத்தினால் போதும். முதல் நாள் போய் சிலை செய்து எடுத்துவர வேண்டும். ஒருநாள் பகல் முழுவதும் கோவிலில் வைத்தும் அவளைக் கும்பிடலாம். அன்று இரவே அச்சிலையை எடுத்து வந்து குளத்தங்கரையில் வைத்துக் கட்டையால் அடித்து நொறுக்கிவிட வேண்டும். இதுதான் அம்மனை வழிபடும் முறை என்றார்கள். பறையனோடு ஓடிப்போய் நம்ம ஜாதிக்கவுரவத்தைக் கெடுத்தவளுக்கு இதுதான் மரியாதை என்று பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள். அன்று முதல் இன்று வரை அந்த முத்தாலம்மன் இன்னும் கட்டையால் அடிபட்டுச் செத்துக் கொண்டிருக்கிறாள். இப்போது அப்பகுதிகளுக்குப் போனாலும் பார்க்கலாம். அடித்து நொறுக்கி ஆற்றில் கரைத்துவிடும் பழக்கமாக அது இன்னும் நீடிக்கிறது.

முத்தாலம்மன் யார்? சாமியல்லவா? ஆனால் ஜாதி காரணமாக மனிதர்கள் கையால் வருடா வருடம் அடிபட்டுச் சாகிறாள்.

சாமி பெரிசா? ஜாதி பெரிசா?

ஜாதி பெரிதில்லை. தன் காதல்தான் பெரிது என்று போனவள் முத்தாலம்மன். ஆனால் காதல் பெரிதில்லை. ஜாதிதான் பெரிது என்று நம் சமூகம் இன்றும் அவளைப் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறது. இப்ப இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த அடி ஒரு பாடமாக இருக்கட்டும் என்று பெரியவர்கள் நினைத்திருக்கலாம்…

முத்தாலம்மனை ஒருநாள் சாமி என்றுதான் அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். இப்படி ஒரு நாள் சாமிகள் நம் நாட்டில் எக்கச்சக்கமாக இருக்கின்றன. பாவம் முத்தாலம்மன்.

21
கல்வியும் கடவுளும்கல்வியும் கடவுளும்29th October 2012
மீன் பற்றி சுவையான தகவல்கள்...29th October 2012மீன் பற்றி சுவையான தகவல்கள்...

மற்ற படைப்புகள்

2012_november_pinju-34
நவம்பர் 2012
2nd November 2012 by ஆசிரியர்

மூளைக்கு வேலை

Read More
2012_november_pinju-29
நவம்பர் 2012
2nd November 2012 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரங்கள்

Read More
2012_november_pinju-11
நவம்பர் 2012
2nd November 2012 by ஆசிரியர்

சுடோகு கணக்கு

Read More
2012_november_pinju-18
நவம்பர் 2012
29th October 2012 by ஆசிரியர்

நீதிக்கதை

Read More
2012_november_pinju-2
நவம்பர் 2012
29th October 2012 by ஆசிரியர்

கல்வியும் கடவுளும்

Read More
2012_november_pinju-17
நவம்பர் 2012
29th October 2012 by ஆசிரியர்

சாமிகளின் இறப்பும் பிறப்பும் – 4

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p