• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

எண்ணும் எழுத்தும் கண்ணம்மா

2013_apr_66
ஏப்ரல்

ஒன்றும் ஒன்றும் இரண்டம்மா
உணர்வாய் தமிழே உயர்வம்மா
என்றும் இதுவே சிறப்பம்மா
எழுதி எழுதிப் பரப்பம்மா!

இரண்டும் ஒன்றும் மூன்றம்மா
இதயம் அன்பில் ஊன்றம்மா!
முரண்டு பிடிப்பது தீங்கம்மா
முத்தமிழில் பேர் வாங்கம்மா!

மூன்றும் ஒன்றும் நான்கம்மா
மூத்தோர் சொல்செவி வாங்கம்மா!
தோன்றும் நன்மை உனக்கம்மா
தூயோர் சொன்ன கணக்கம்மா!

நான்கும் ஒன்றும் அய்ந்தம்மா
நற்கலை பயிலத் துவங்கம்மா!
காண்போர் வாழ்த்து வருமம்மா
காலம் பெற்றுத் தருமம்மா!

அய்ந்தும் ஒன்றும் ஆறம்மா
அனுதினம் பள்ளி சேரம்மா!
முந்தும் திறமை பாரம்மா
முக்கியம் இதுவே கூறம்மா!

ஆறும் ஒன்றும் ஏழம்மா
அகிலம் புகழ்ந்திட வாழம்மா!
சேரும் செல்வம் உனக்கம்மா
செய்வாய் உதவி பிறர்க்கம்மா!

ஏழும் ஒன்றும் எட்டம்மா
இயலும் முன்னேற்றம் எட்டம்மா!
கூழும் குடித்துக் காட்டம்மா
கொள்கைப் பிடிப்பை நாட்டம்மா!

எட்டும் ஒன்றும் ஒன்பதம்மா
ஏற்ற உணவை உண்பதம்மா
கூட்டும் நலத்தை உண்மையம்மா!
கூடி வாழ்தல் நன்மையம்மா!

ஒன்பதும் ஒன்றும் பத்தம்மா
உயரிய ஒழுக்கம் வித்தம்மா!
மண்ணில் வாழ்வது சிறப்பம்மா
மகிழ்வு பெறுவது பொறுப்பம்மா!

எண்ணும் எழுத்தும் கண்ணம்மா
இதனை உணர்வாய் கண்ணம்மா!
மண்ணும் உன்னால் விண்ணம்மா
மாற்றிடும் நீ நல்ல பெண்ணம்மா!

–  நீரை. அத்திப்பூ

17
சாமிகளின் பிறப்பும் இறப்பும்-8சாமிகளின் பிறப்பும் இறப்பும்-82nd April 2013
அறிந்துகொள்வோமே?4th May 2013

மற்ற படைப்புகள்

2013_apr_27
ஏப்ரல்
2nd April 2013 by ஆசிரியர்

தோல்வியா? துவளாதீர்!

Read More
ஏப்ரல்
2nd April 2013 by ஆசிரியர்

விடுகதைகள்

Read More
2013_apr_15
ஏப்ரல்
2nd April 2013 by ஆசிரியர்

ஆஸ்திரேலியாவின் அழகு நகரம் சிட்னி

Read More
2013_apr_7
ஏப்ரல்
2nd April 2013 by ஆசிரியர்

வேகமும் விவேகமும்

Read More
2013_apr_30
ஏப்ரல்பழகுமுகாம்
2nd April 2013 by ஆசிரியர்

பெரியார் பிஞ்சு பழகு முகாம் 2013

Read More
2013_apr_70
ஏப்ரல்
28th March 2013 by ஆசிரியர்

அம்புட்டுதேன்…

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p