• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நோய் கொடுக்கும் நொறுக்குத் தீனிகள்

2013_may_6
மே

– சிகரம்

குழந்தைகள் வாழ்வு என்பது பெற்றோரையே பெரிதும் சார்ந்தது. அவர்களின் பாதுகாப்பு, நலம், வளர்ச்சி, பழக்கம், பண்பு என்று பலவும் பெற்றோரையும் மற்றோரையும் பொறுத்தே அமைகிறது. எனவே, குழந்தைகளை வளர்ப்பதில் இவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்; திட்டமிட்டும் செயல்பட வேண்டும்.

குழந்தை பிறந்த 6 மணி நேரத்திற்குள் குழந்தையின் தாய் தனக்குச் சுரக்கும் பாலை (சீம்பால்) தவறாது, வெளியேற்றி வீணாக்காது குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்துவிட்டாலே குழந்தையின் வாழ்நாள் முழுக்க நோய் தடுக்கும் ஆற்றலை அது குழந்தைக்கு வழங்குகிறது.

அடுத்து ஆறுமாத காலத்திற்கு தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு உணவாகக் கொடுக்க வேண்டும். வேறு உணவுகள் கொடுக்கக் கூடாது; தேவையும் இல்லை. தாய்ப்பால் கிடைக்காத நிலையில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாற்றுணவு தரவேண்டும்.

ஆறு மாதத்திற்குப் பிறகு வேகவைத்த உருளைக் கிழங்கு, முட்டை, வேகவைத்த பருப்பு, கீரை இவற்றை மசித்துக் கொடுக்கலாம். முதல் ஒரு வருடத்திற்கு மருத்துவரின் ஆலோசனையின்படியே உணவுகளை வழங்குவது நலம். ஒரு வயது வரை குழந்தை தான் என்ன உண்ண வேண்டும் என்று எதையும் கேட்பதில்லை. பெற்றோர்தான் தேர்வு செய்து, மருத்துவர் கூறுவதைக் கேட்டுத் தரவேண்டும்.

ஒரு வயதுக்குமேல் குழந்தைகள் உணவுகளை அதுவே தேடும். அப்போது இன்னும் விழிப்பாக பெற்றோர் செயல்பட வேண்டும். காரணம், அருகில் கிடைப்பதையெல்லாம் வாயில் வைக்கும். மண், துரும்பு, சிறு பொருட்கள் என்று எது கிடைத்தாலும் வாயில் போடும். இதைக் கண்காணிக்க வேண்டும்; இதுபோன்ற பொருள்கள் அருகில், அதன் கையில் கிடைக்காமல் செய்வதோடு, குழந்தை புழங்கும் இடங்களைத் தூய்மையாக வைக்க வேண்டும்.

இதில் கவனக் குறைவாக பெற்றோர்கள் இருக்கும் போதுதான் வயிற்றுடல் பிரச்சினைகளும் வயிற்றுப் போக்கும் வருகிறது. நீர், நெருப்பு, கூரிய பொருட்கள் அருகில் இல்லாமல் பொறுப்புடன் பார்க்க வேண்டும். சூடான பொருட்களைக் குழந்தைகள் தொடும் இடத்தில் வைக்கக் கூடாது.

இரண்டு வயதுக்கு மேல் குழந்தைகள் உணவைத் தேடிச் சென்று எடுக்கும். எனவே, சிறுவயது முதலே உடலுக்கு உகந்த உணவுகளைக் கொடுத்துப் பழக்க வேண்டும். குழந்தை பெரிதும் விரும்புகிறது என்பதாலும், அதன் மீதுள்ள பாசத்தாலும், இனிப்பு, சாக்லெட், பிஸ்கெட், அய்ஸ்கிரீம் போன்ற பொருட்களைக் கொடுத்துப் பழக்கக்கூடாது.

முதலில் இவற்றின் ருசி கண்டுவிட்டால், பின் அவற்றையே அதிகம் உண்டு, நல்ல சத்தான உணவுகளைக் குழந்தைகள் புறக்கணிக்க அல்லது வெறுக்கத் தொடங்கும். 95% குழந்தைகள் உடல்நலம் கெட இதுவே காரணம்.

சிறுவயதில் குழந்தைக்கு உணவை எப்படிப் பழக்குகிறோமோ அதுவே அவர்கள் வாழ்நாள் எல்லாம் வரும். எனவே, திட்டமிட்ட, சத்தான, சமச்சீரான, உடலுக்கு உகந்த உணவைத் தரவேண்டும். நோயின் ஊற்றுக்கண் (தோற்றுவாய்) நொறுக்குத் தீனிகள் என்றால் அது முழு உண்மை.

சாக்லெட், பிஸ்கெட், பீட்சா, சிப்ஸ், அய்ஸ்கிரீம், கேக் என்று இன்று எத்தனையோ உணவுகள் வந்துவிட்டன. வணிகநோக்கில் உடல்நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல், இவை உற்பத்தி செய்து, கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் விற்கப்படுகின்றன. இவை போன்ற செயற்கை உணவுகள் இரசாயனக் கலவையை உள்ளடக்கி இருப்பதால் உடல்நலத்திற்குப் பெரும் கேடு உருவாக்கி, நோய்களைக் கொண்டு வருகின்றன.

கெடாமல் இருக்க இரசாயனம் கலந்து, பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகளே இன்று பெருமளவில் கடைகளில் தொங்குகின்றன. அவை அனைத்துமே கேடானவை.

பழங்களைப் பச்சையாக உண்ண வேண்டுமேயன்றி பழச்சாறு என்ற பெயரில் பாட்டில் பானங்கள் பருகுவது உடல்நலத்திற்குக் கேடு. உடலுக்குக் கேடு என்பதோடு பணமும் பலமடங்கு செலவாகும்.

அய்ந்து ரூபாய் பெறுமானமுள்ளது, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, செயற்கையாக, இரசாயனம் கலந்து வரும்போது 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இச்சுரண்டலை உணர்ந்து உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். அவற்றுள் உடலுக்குக் கேடானவையே அதிகம். குறிப்பாக கொழுப்பைக் கூட்டும். உடல் பருமன் உருவாக்கும். உடல்பருமன் என்பது நோய்களின் வளர்ச்சிக்குக் காரணமாகும்.

பொதுவாகவே, உடலுக்குக் கேடு பயக்கக்கூடியவை ருசியாகவும், நன்மை பயக்கக்கூடியவை அதிக ருசியில்லாமலும் இருக்கும். எனவே, நாவிற்கு அடிமையாக ருசியைத் தேடினால் நோய்க்கு ஆளாகி நொந்து கலங்க வேண்டி வரும். நாவை உணவிலும் சரி பேச்சிலும் சரி கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இல்லையென்றால் இரண்டாலும் கேடு வரும்.

கீரை, பருப்பு, பழம், காய்கள், சிறுதானியங்கள் கட்டாயம் அன்றாட உணவில் தேவையான அளவு இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை தேவையான அளவு குழந்தைகளுக்குக் கிடைக்கும்படி பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நித்தம் ஒரு முட்டை உடல்நலத்திற்கு உகந்தது. வாழைப்பழம், பால் இவை தினம் எடுத்துக் கொள்வது நல்லது. இம்மூன்றும் குறைந்த விலையில் நிறைந்த பயன் அளிக்கக்கூடியது.

வெறும் இனிப்பைத் தருவதைவிட, வாழைப்பழத்தில் தேன் கலந்து கொடுக்கலாம். பீட்ரூட், காரட்டில் இனிப்பு செய்து தரலாம். வெல்லம் கலந்த கேழ்வரகு அடை தரலாம். கொழுக்கட்டை, சுவைப் பிட்டு  போன்றன இனிப்பையும் தரும், நலத்தையும் தரும். எனவே, நொறுக்குத்தீனிகளை நொறுக்குவோம் (வெறுப்போம்): நலம் தரும் உணவை நாடுவோம்!

15
அன்பு மடல் - 4அன்பு மடல் - 45th May 2013
விளையாட்டு - கைப்பந்தாட்டம்5th May 2013விளையாட்டு - கைப்பந்தாட்டம்

மற்ற படைப்புகள்

2013_may_2
மே
4th May 2013 by ஆசிரியர்

இதோபாரு கிலுகிலுப்பை…..

Read More
2013_may_62
மே
4th May 2013 by ஆசிரியர்

பட்டினிக்குப் பாதி! பருக நீரின்றி மீதி!!

Read More
2013_may_35
மே
5th May 2013 by ஆசிரியர்

புகைப்படக் கலையை உலகிற்கு வழங்கிய லூயிஸ் டாகுரே (1787-1851)

Read More
மே
5th May 2013 by ஆசிரியர்

விடுகதைகள்

Read More
2013_may_5
மே
5th May 2013 by ஆசிரியர்

அன்பு மடல் – 4

Read More
2013_may_10
மே
5th May 2013 by ஆசிரியர்

விளையாட்டு – கைப்பந்தாட்டம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p