• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கொரில்லா என்றொரு விலங்குண்டு….

2013_may_38
மே

நீங்கள் இங்கிலீஷ் சினிமாக்களில் பார்த்திருக்கலாம். பெரும்பாலும் குழந்தைகளை மய்யமாக வைத்துத் தயாரிக்கும் அந்த சினிமாக்களில் இந்த கொரில்லாக்கள் கட்டாயம் இருக்கும். நாம் செய்யும் சேட்டைகளையெல்லாம் செய்யும் இவை கிட்டத்தட்ட நம்ம மனித இனம்போலவே இருக்கும் ஓர் விலங்கு. அதனால்தான் திட்டும் போது இதனைச் சிலர் நினைவுபடுத்துகிறார்கள். இவற்றைப் பற்றி புன்னகைதேசம் முகநூல் பகுதியில் சில தகவல்களை அளித்திருக்கிறார்கள். அதனை நம் பிஞ்சுகளுக்காக இங்கே தருகிறோம்.

நன்கு வளர்ந்த கொரில்லாக்கள் சுமார் 6 அடி உயரமும் 150 கிலோ எடையும் இருக்கும். கொரில்லாக்கள் இரண்டு கைகளையும் விரித்தால் சுமார் 8 அடிகள் வரை நீளும். இவை பொதுவாக நான்கு முதல் எட்டு மனிதர்களின் பலத்திற்குச் சமமான பலத்தினைப் பெற்றிருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண் கொரில்லாக்களைவிட உருவத்தில் பாதி அளவுதான் இருக்கும்.

கொரில்லாக்கள் மனிதர்களைப் போல் கை மற்றும் கால்களில் தலா பத்து விரல்களையும், கண்கள் மனிதர்களைப் போல் முன்னோக்கிய பார்வையும், 32 பற்களையும் பெற்றிருக்கும். ஆனால் கால்களை விட கைகள் மிக நீளமாகவும் அதிக தசைகளையும், கைகளில் உள்ள விரல்களை போல் கால்களிலும் இருக்கும். Adult கொரில்லாக்களின் (Age-15) முதுகில் உள்ள ரோமங்கள் வெளிர்நிறத்தில் மாறிவிடும்.

கொரில்லாக்களால் மனிதர்கள் போல் கைகளை ஊன்றாமல் நடக்க முடியும். ஆனால், அவை அவ்வாறு நடக்க விரும்புவதில்லை. இவைகளுக்குக் கோபமும் எரிச்சலும் வரும்போது மட்டுமே கைகளைத் தூக்கி நெஞ்சில் அடித்து பயங்கரமாக சத்தமிடும்.

கொரில்லாக்கள் பொதுவாக 50 வருடங்கள் வரை உயிர்வாழும். இதன் குட்டிகள் மிகச் சிறியவையாக 2 கிலோ எடையே இருக்கும். குட்டிகள் பொதுவாக 3 வருடங்கள் வரை தாயைச் சார்ந்தே வாழும். ஆண் கொரில்லாக்கள் 12–13 வருடத்திலும் பெண் கொரில்லாக்கள் 11–12 வருடத்திலும் பருவ வயதை எட்டும். கூட்டம் கூட்டமாக வாழும் இவை இளம் வயது கொரில்லாக்களுக்கு உணவு சேகரிக்கும் முறை,  குழந்தைப் பராமரிப்பு, தங்கும் வீடு கட்டும் முறை போன்றவற்றைக் கற்றுக் கொடுக்கும்.

கொரில்லாக்கள் உடல் அசைவுகள், சத்தம், முக மாற்றத்தின் மூலமாக பேசிக்கொள்ளும். மனிதர்களின் சத்தத்தைப் போல் சத்தம் போடமுடியாது, ஆனால், நாம் கற்றுக் கொடுத்தால் செய்கைகளையும், நாம் பேசும் மொழியையும் அறிந்து செயல்படும்.

கொரில்லாக்கள் மிகவும் புத்திசாலியானது. அவை நம்மைப்போல எல்லாவிதமான உணர்வுகளையும் (Emotions) பகிர்ந்துகொள்ளும். அதாவது அன்பு, கோபம், அச்சம், மகிழ்ச்சி, பொறாமை, பெருமை, வெட்கம், பெருந்தன்மை  மற்றும் கவலை ஆகிய உணர்வுகளைப் பகிரும் தன்மை இதற்குண்டு. கொரில்லாக்கள் நம்மைப்போல் சிரிக்கும், சத்தம் போட்டு அழும். ஆனால், அழும்போது கண்ணீர் வராது.

கொரில்லா குடும்பத்தில் ஒரு Silverback, பிரச்சினை செய்யாத தன்மையுடைய பலம் வாய்ந்த ஒரு ஆண் கொரில்லா, வயதுக்கு வாராத ஒரு ஆணும் (8–13 years old) மூன்று அல்லது நான்கு வயதுக்கு வந்த பெண் கொரில்லாவும், 5–8 வயதுக்கு வராத பெண் கொரில்லாக்களும் இருக்கும். சிலநேரங்களில் குடும்பங்கள் இதைவிடச் சிறியதாகவும், பெரியதாகவும் இருக்கலாம். சில நேரம் இளம் ஆண் கொரில்லாக்கள் கூட்டமாகவும், தனியாகவும் சுற்றிக் கொண்டிருக்கும்.

கொரில்லாக்கள் இரவு நேரம் (13 மணி நேரமும்) மதிய வேளைகளில் சிறிது நேரமும் தூங்கும். மற்ற நேரங்களில் உணவைத் தேடி உண்டுகொண்டிருக்கும். இவை பொதுவாக கிழங்கு, பழம், இலை, தழை, எறும்பு, கரையான் போன்றவற்றையும் உண்ணும். தூங்குவதற்கு வசதியாக சிறிய மரங்களில் படுக்கைகளைத் தயார் செய்து கொள்ளும், படுக்கைகள் மெத்தை போன்று இருக்கும்.

கொரில்லாக்கள் மிகவும் அமைதியானவை. இவைகளின் முதல் எதிரியே மனிதன்தான்,  இன்றும் ஆப்ரிக்காவில் இவை உணவுக்காக வேட்டையாடப்படுகின்றன. பிற விலங்குகளைப் பிடிக்க இவற்றைக் கண்ணியில் பயன்படுத்துகிறார்கள். சில ஆண்டுகளில் விலங்கியல் பூங்காங்களுக்காக பிடிக்கப்படும் குட்டி கொரில்லாவுக்காக அதன் முழு குடும்பமும் அழிக்கப்பட்டுவிடும். ஏனென்றால், முழு குடும்பமும் அந்தக் குட்டிக்காகப் போராடுவதால்தான்.

17
பெற்றோர் பக்கம்பெற்றோர் பக்கம்5th May 2013
பார்படோஸ்5th May 2013பார்படோஸ்

மற்ற படைப்புகள்

2013_may_52
மே
5th May 2013 by ஆசிரியர்

பார்படோஸ்

Read More
மே
4th May 2013 by ஆசிரியர்

THAT’S ENGLISH

Read More
2013_may_22
மே
5th May 2013 by ஆசிரியர்

சாமிகளின் பிறப்பும் இறப்பும்-9

Read More
2013_may_20
மே
5th May 2013 by ஆசிரியர்

ஓய்வு அறியாத சிறுநீரகம்

Read More
2013_may_33
மே
5th May 2013 by ஆசிரியர்

உலகப் புகழ் ஓவியர் – ஓவியம்

Read More
மே
5th May 2013 by ஆசிரியர்

விடுகதைகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p