• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலகப் புகழ் பெற்றவர்கள்

2013_jun_44
ஜூன்

சமிக்ஞை விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 – 1963]

போக்குவரவு மிகுந்துள்ள நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்திற்குப் பெரும் துணையாக இருப்பது சிக்னல் விளக்குகளே! இவ்விளக்குகளை முதன்முதலாக வடிவமைத்துச் செயல்படுத்தியவர்தான் கேரெட் மோர்கன் (Garrett Morgan) என்ற மேதை. தீயணைப்பு வீரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் புகைமூட்டத்திலிருந்து வீரர்கள் எளிதில் தப்பிச் செல்ல (Gas Mask) என்ற முகக் கவசத்தைக் கண்டுபிடித்த பெருமையும் இவரையே சாரும்.

இளமைப் பருவம்:

இவர் 1877ஆம் ஆண்டு அய்க்கிய அமெரிக்க நாட்டில் கென்டுகி மாகாணத்தில் உள்ள பாரிஸ் நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் சிட்னி (Sydney) மற்றும் எலிசபெத் ஆவர். அவர்கள் அடிமைகளாக வாழ்ந்தமையால் குடும்பம் வறுமையில் வாடியது. மோர்கன் தனது பள்ளிப் படிப்பை அய்ந்தாம் வகுப்பிற்கு மேல் தொடரும் வாய்ப்பை இழந்தார். தன் 14ஆம் வயதில் வேலை தேடி வேற்று இடம் செல்ல முயற்சித்தார். முதன்முதலாக ஒஹியோ மாகாணத்தில், சின்சினாட்டி (Ohio-Cincinnati) நகரில் ஒரு நிலக்கிழாருக்கு உதவியாளராகச் சென்று பணியாற்றினார்.

தனது அன்றாடச் செலவுகள் போக மீதமுள்ள பணத்தைச் சேமித்து தன் படிப்பைத் தொடர்ந்தார். இந்த நிலையில் 1895ஆம் ஆண்டு தையல் இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் பணியில் இணைந்தார். இங்ஙனம் இவரது தேடுதல் வேட்டை தொடர்ந்தது _ அறிவு எல்லைகள் விரிந்தன. தையல் இயந்திரங்களைப் பழுதுபார்த்து வந்த இவர் அவ்வியந்திரங்களின் இயக்கத்தை முழுமையாக உணர்ந்த பொறியாளராக உயர்ந்தார். 1907ஆம் ஆண்டில் இதன் அடிப்படையில் ஆடைகளை வடிவமைக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இவருள் இருந்த நுண் ஆற்றல் இவ்வண்ணம் சிறிது சிறிதாக வெளிப்பட்டது.

விபத்தும் விளைவும்:

1911ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியூயார்க் நகரின் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் நடந்த தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்களிடம் போதுமான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாத நிலை; படுமோசமான இழப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை. இந்த நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற முதன்முதலில் முகமூடிக் கவசத்தைக் (Gas Mask)  கண்டுபிடித்து மக்கள் துயர் துடைக்க வழிவகுத்தார்.

இந்த முகக் கவசத்தின் முன்பகுதியில் அமைந்த இரண்டு சுவாசக் குழாய்கள் தரையைச் சென்றடையும் வரை வடிவமைக்கப்பட்டிருக்கும். கட்டடத்தில் சூழ்ந்துள்ள புகை மேல் எழும்பும்போது தரைப் பகுதியில் உள்ள காற்றை எளிதில் சுவாசிப்பதற்கு ஏற்றாற்போல் இக்கவசம் அமைந்திருக்கும். அதனால் தீயணைப்பு வீரர்கள் எளிதில் தம் பணியைத் தொடர ஏதுவாகும். இப்பாதுகாப்புக் கவசத்திற்கு 1914ஆம் ஆண்டில் இவர் வடிவமைப்பு  உரிமை பெற்றார்;

நடைமுறைப் பயன்பாடு:

இவர் வாழ்ந்த க்ளீவ்லாண்ட் நகரில் உள்ள ஓர் ஏரியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அய்ம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நச்சுவாயுவால் தாக்கப்பட்டனர். இச்செய்தி மோர்கனிடம் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த இவர் தனது சகோதரரின் துணையுடனும் வேறு பல உதவியாளர்களுடனும் சுரங்கப் பாதை அமைக்கும் இடத்திற்குப் பாதுகாப்புக் கவசங்களுடன் விரைந்தார்.

அனைவரும் தயங்கி வெளியே செயலற்றுப் போன நேரம் இவர் துணிவுடன், கவசத்தின் துணையுடன் உள்ளே சென்று ஒவ்வொரு பணியாளரையும் சமயோசிதமாகக் காப்பாற்றினார். மாந்த நேயம் சார்ந்த இவரது கண்டுபிடிப்பு இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் கண்டுபிடிப்பு:

இவர் வாழ்ந்த க்ளீவ்லாண்டு நகரில் சாலைப் போக்குவரத்து எண்ணற்ற வாகனங்களால் பெரும்  நெருக்கடிக்கு ஆட்பட்டது _ விபத்துகள் தொடர்ந்தன. இதனை அறிந்த இவர் முதன்முதலில் போக்குவரத்தைச் சீர்செய்ய பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை ஒவ்வொரு சாலையிலும் அமைக்கும் முறையை 1923ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.

இவரது சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்பட்ட சாலைகளில் பாதசாரிகள், வாகனங்கள் ஆகியவை முறையாகவும் _ பாதுகாப்புடனும் செல்லும் பாங்கு அனைவரையும் கவர்ந்தது-. இவரது கண்டுபிடிப்பை  உலகம் முழுதும் விற்பனை செய்ய ஜெனரல் எலக்ட்ரிகல் நிறுவனம் 40,000 டாலர்கள் சன்மானம் தந்து இவரிடமிருந்து உரிமை பெற்றுச் சென்றது. இவர் கண்ட இப்போக்குவரவு சாதனங்கள் 3 வண்ண விளக்குகளுடன் எல்லா நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிறர் நலனும் பாதுகாப்பும்:

நில், கவனி, செல் என்பது இவரது கண்டுபிடிப்பின் அடிப்படைத் தத்துவம். இதே தத்துவம் நம் வாழ்க்கைப் பயணத்தையும் வளமாக்கும். இவ்வுலகில் தோன்றிய மனிதகுலம் பகுத்தறிவு வழியில் நின்று, தனக்கு நன்மை தருவனவற்றையும், பிறருக்குப் பயன் தருவனவற்றையும் கவனித்து, உண்மையான பாதையில் சென்றால் என்றும் இனிமையும் இன்பமும் பெற்று உயரும்.

16
உலக நாடுகள்உலக நாடுகள்4th June 2013
பிரமிடுகளின் நகரம் கெய்ரோ4th June 2013பிரமிடுகளின் நகரம் கெய்ரோ

மற்ற படைப்புகள்

2013_jun_44
ஜூன்
4th June 2013 by ஆசிரியர்

உலகப் புகழ் பெற்றவர்கள்

Read More
2013_jun_35
ஜூன்
4th June 2013 by ஆசிரியர்

சாமிகளின் பிறப்பும் இறப்பும் 10

Read More
2013_jun_11
ஜூன்
4th June 2013 by ஆசிரியர்

சுவையான செய்திகள்

Read More
2013_jun_50
ஜூன்
5th June 2013 by ஆசிரியர்

குட்டிக் கதை : நல்வழி காட்டிய குழந்தைகள்

Read More
2013_jun_1
ஜூன்
4th June 2013 by ஆசிரியர்

பிஞ்சுகளின் சிந்தனைக்கு

Read More
2013_jun_45
ஜூன்
4th June 2013 by ஆசிரியர்

மாறியது எப்படி?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p