• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஜாதியைச் சாய்ப்போம்

2013_aug_4
ஆகஸ்ட்

ஜாதி  தமிழ்ச் சொல் அல்ல. எனவே, அது தமிழர்க்கு உரியது அல்ல. இது சமஸ்கிருதச் சொல். எனவே, இதை உருவாக்கியவர்கள் அம்மொழிக்கு உரிய ஆரியப் பார்ப்பனர்கள் என்பதை பிஞ்சுகள் முதலில் நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

எது நேர்மைக்குப் புறம்போ; எது அறிவிற்கு ஒவ்வாததோ; எது மனித நேயத்திற்கு எதிரானதோ அது தமிழருடையது அல்ல என்று உறுதிபடச் சொல்லலாம். காரணம், தமிழர்கள் அறிவிற்குகந்த நேர்மையான பகுத்தறிவு வாழ்வு வாழ்ந்தவர்கள்.

அத்தகு வாழ்வில் ஆரியர் புகுந்து, சூழ்ச்சியும், மோசடியும் செய்து மூடநம்பிக்கைகளை நுழைத்த பின்பே தமிழர் வாழ்வு தடம் புரண்டது. கடவுளும், மதமும், ஜாதியும், சடங்கும் அவர்களின் தன்னலத்திற்கும், ஆதிக்கத்திற்கும் அவர்கள் உருவாக்கியவை; இன்னும் அவர்களால் உரமூட்டப்படுபவை!

ஜாதியென்றால் என்ன? எந்தக் குழந்தைக்கும் அதுபற்றித் தெரியாது? நீ எந்த ஜாதி என்று பிஞ்சுகளிடம் கேட்டால் சிரிப்பார்கள்; விழிப்பார்கள்!

பெரியவர்களிடம் நீங்கள் என்ன ஜாதி என்று கேட்டால் சொல்வார்கள். ஜாதியென்றால் என்னவென்று கேட்டால் விழிப்பார்கள்!

ஆக ஜாதி என்றால் என்னவென்றே தெரியாமல், நான் இன்ன ஜாதியென்று பரம்பரையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
அது மட்டுமல்ல, ஜாதி என்றால் என்ன என்பது அதை உருவாக்கிய ஆரியப் பார்ப்பனர்களுக்கே தெரியாது. காரணம், ஜாதி என்று ஒன்று இல்லை. அதற்கென்று புறத்தோற்றத்திலோ அல்லது மரபணு அடிப்படையிலோ  எந்த அடையாளமும் இல்லை.

பின் ஜாதி எப்படி வந்தது?

பிஞ்சுகள் நன்றாக அறிந்து உள்ளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆரியப் பார்ப்பனர்கள் தங்களை உயர்ந்த ஜாதியாகக் காட்டவும், ஆதிக்கம் செலுத்தவும், சிறுபான்மையினரான தங்களுக்குப் பாதுகாப்பு தேடிக்கொள்ளவும் இதைச் செய்தனர்.

தாங்கள் மட்டுமே உயர்ந்த ஜாதி, மற்றவர்களெல்லாம் கீழ்ஜாதி என்றனர். பிரம்மாவின் முகத்தில் பிறந்த நாங்கள் பிராமணர்; தோளில் பிறந்தவர்கள் ஷத்திரியர், இடுப்பில் பிறந்தவர் வைசியர், காலில் பிறந்தவர் சூத்திரர் என்று விளக்கம் கொடுத்தனர்.

முகத்திலும், காலிலும், இடுப்பிலும், தோளிலும் குழந்தை பிறக்குமா? பிறக்காது. இப்படிப்பட்ட பொய்யைச் சொல்லி பிரிக்கப்பட்டதே ஜாதி! ஆக ஜாதிப் பிரிவு என்பது பொய் என்பது புரிகிறதா?

சூத்திரச் ஜாதி மேலும் பல ஜாதியாக செய்யும் தொழிலால் பிரிந்தது. அப்படி வந்ததே பறையர், படையாட்சி போன்ற ஜாதிகள்.

ஆரியப் பார்ப்பனர்கள் அயல் நாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்கள். எனவே, நம்மை அடக்கி, ஆதிக்கம் செலுத்த நம் ஒற்றுமையைக் குலைக்க (சிதைக்க) ஜாதியை உருவாக்கினர்.

நமக்குள் பிரிந்து மோதிக் கொள்வதால் அவர்களுக்குப் பாதுகாப்பாக ஆனதோடு, நம்மை ஆதிக்கம் செலுத்தவும் வழி கிடைத்தது. இதை நிலைநாட்ட கடவுளையும் மதத்தையும் கற்பித்தனர்.

ஆக, ஜாதி என்பது உண்மையில்லை. ஆரியர்களின் தன்னலத்திற்காக அவர்களால் உருவாக்கப்பட்டதே ஜாதி என்ற உண்மையைப் புரிந்து நமக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நாமெல்லாம் தமிழர்கள் என்ற ஒரே ஒற்றுமையில் இருக்க வேண்டும். தமிழர் என்பது நமக்கு இன அடையாளமாயினும், எல்லா மனிதர்களையும் நாம் நேசிக்க வேண்டும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே நம் கொள்கை; நம் வாழ்க்கை முறை.

தந்தை பெரியார் அவர்கள் அதனால்தான் ஜாதி, மதம், கடவுள் நம்பிக்கையை ஒழிக்கப் பாடுபட்டார். அவர் உலகம் முழுக்க ஒரே குடும்பம் என்று எண்ணினார்.

பெரியார் சிந்தனைகளை பிஞ்சுகள் படித்து அறிய வேண்டும். அவர் கொள்கையைப் பின்பற்றி, மனித நேயம் காக்க வேண்டும். ஜாதி உணர்வை ஒழிக்க வேண்டும்!

– சிகரம்

12
கட்.. கடா.. கட்.. தந்தியின் கதைகட்.. கடா.. கட்.. தந்தியின் கதை24th July 2013
உலக நாடுகள் பெலிஸ்(Belize)24th July 2013உலக நாடுகள் பெலிஸ்(Belize)

மற்ற படைப்புகள்

2013_aug_63
ஆகஸ்ட்
1st August 2013 by ஆசிரியர்

முறையாகப் பல் துலக்குவது எப்படி?

Read More
2013_aug_18
ஆகஸ்ட்
24th July 2013 by ஆசிரியர்

சிங்கத்தையே எதிர்கொள்ளும் ஒட்டகச்சிவிங்கி(GIRAFFE)

Read More
2013_aug_46
ஆகஸ்ட்
2nd July 2013 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2013_aug_48
ஆகஸ்ட்
1st July 2013 by ஆசிரியர்

உலகப் புகழ் ஓவியர் – ஓவியம்

Read More
ஆகஸ்ட்
1st July 2013 by ஆசிரியர்

துத்தநாகம்(Zinc)

Read More
ஆகஸ்ட்
1st July 2013 by ஆசிரியர்

தெரிந்து கொள்வோம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p