• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குட்டிக் கதை – உழைப்பின் மகிமை

2013_sep_pinju-27
செப்டம்பர்

நாம மூனு பேருமா சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா அந்தப் பாறையை வெட்டி எடுத்துட்டா, நிச்சயமா அதுக்குக் கீழே தண்ணி இருக்கும். கொஞ்சம் தயவு பண்ணுங்கய்யா.

வேலப்பன் தன் இரு மகன்களிடமும் கெஞ்சினார்.

அட போப்பா, இந்த வட்டாரத்துலே எல்லாக் கெணறும் வருஷத்துக்கு முன்னேயே வத்திப்போச்சு. ஏதோ அதிருஷ்டம் நம்மளது மட்டும் நாலு மாசம் முன்னாலதான் வத்திப்போச்சு. இனிமே பாறையெல்லாம் வெட்டி எடுத்தாக்கூட, தண்ணி கெடைக்குமுன்னு நிச்சயமே இல்ல. வெட்டி வேலைக்கு நாங்க இல்லே என்ற இருவரையும் ஏக்கத்தோடு பார்த்தார் வேலப்பன்.

சுத்த சோம்பேறி மகன்கள், சாப்பிடறதும் ஊர் சுத்தறதும்தான் வேலை. அந்த வட்டாரத்திலுள்ள எல்லாக் கிணறுகளும் ஒரு வருடத்துக்கு முன்னரே வற்றியபோதிலும், வேலப்பனின் பாட்டன் காலத்துக் கிணறு மட்டும் வற்றாமல் இருந்தது. அதுவும் நாலு மாதங்களாக வற்றிவிட்டது. கிணற்றின் அடியிலுள்ள பெரிய பாறையை வெட்டி நீக்கினால், நிச்சயமாக அதன் கீழே ஊற்றுப் பெருக வாய்ப்புண்டு  என வேலப்பன் உறுதியாக நம்பினார். எங்கேயோ அடைப்பு இருப்பதால்தான் கிணறு வற்றியிருக்குமென நினைத்தார். அறுபது வயதான அவரால் தனியாக அந்தப் பாறையை வெட்டி நீக்க முடியாததால்தான், தன் மகன்களின் உதவியை வேண்டினார். உழைத்தே வாழ்ந்த அவருக்குச் சோம்பேறிகளாக இரண்டு மகன்கள். நிலம் காய்ந்து கிடப்பதைக் கண்ட அவர் மனம் இரத்தக் கண்ணீர் சிந்தியது.

அவர் ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு கடப்பாறை, மண்வெட்டி, கூடையுடன் கிணற்றுக்குள் இறங்கி, தனியாளாக தினமும் சிறிது சிறிதாகப் பாறையை வெட்டி நீக்க ஆரம்பித்தார். விடியற்காலை இறங்குபவர், அந்தி மாலைவரை உழைத்தார். அவரது மகன்களும், ஏன், சில அயல் நிலத்துக்காரர்களும்கூட அவரை ஏளனமாகப் பார்த்தபடி, கெழவனுக்கு ஏன் இந்த வெட்டி வேலை என்று சொன்னதைப் பற்றியும் அவர் கவலைப்படவே இல்லை.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடுமையாக உழைத்தார். எட்டுக்கு எட்டடி நீளமும் அகலமும், பத்தடிக்கு மேல் ஆழமுள்ள பாறையை அவர் ஒருவரே சிறிது சிறிதாக வெட்டி நீக்கினார்.

ஒருநாள் ஒரு மூலையில் ஈரப்பதம் கண்டவுடன், அந்த இடத்தில் கடப்பாறையால் தன் வலிமை முழுவதையும் திரட்டி, ஒரு பெரிய பாறைத்துண்டை வெட்டி அகற்றியதும், அந்த இடத்திலிருந்த ஒரு பெரிய ஊற்று உடைப்பெடுத்துப் பெருகி, தண்ணீர் மிக வேகத்துடன் பீச்சியடித்ததும், அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை.

ஊற்றின் கண் மிகப் பெரியதாக இருந்ததால், வெகுவேகமாக அந்தக் கிணற்றின் மேல் விளிம்புவரை நீர் உயர்ந்து நிறைந்து, வெளியே வழியவும் ஆரம்பித்தது. அவரை ஏளனம் செய்தவர்கள் வெட்கப்பட்டார்கள். வேலப்பன் எல்லோரையும் அந்தக் கிணற்று நீரை எடுத்துப் பயன்படுத்த அனுமதித்தார். அவர்களது வெள்ளாமைக்கும் பயன்படுத்த உதவினார்.

அவரது தனிமனிதப் பேருழைப்பின் சாதனையால், அந்த வறண்ட வட்டாரம் செழிக்க ஆரம்பித்ததை அறிந்த மாவட்ட ஆணையர், நேரில் வந்து வேலப்பனைப் பாராட்டி, அய்ம்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும் அளித்தார். மேலும், ஒரு பெரிய குடிநீர்த் தொட்டியை அமைத்து, குடிநீர்க் குழாய்களின் வசதிக்கும் உடனடியாக ஆணையிட்டார்.

வேலப்பனின் உழைப்புக்குப் பெரும் ஊதியமும் கிடைத்து, பெரும்புகழும் கிடைத்து, ஊருக்கு நன்மையும் கிடைத்ததைக் கண்ட இரு மகன்களும், தந்தையின் பெருமையையும், உழைப்பின் மகிமையையும் பூரணமாக உணர்ந்து கொண்டவர்களாய், ஆளுக்கொரு மண்வெட்டியுடன் வயலை நோக்கி நடந்தனர்.

– கே.பி.பத்மநாபன்

21
பிரபஞ்ச ரகசியம் - 3  பனிக்கட்டியால் ஆன உலகம்பிரபஞ்ச ரகசியம் - 3 பனிக்கட்டியால் ஆன உலகம்4th September 2013
சாகச நிகழ்ச்சிகளைப் பார்த்து சாதித்தவர்4th September 2013

மற்ற படைப்புகள்

2013_sep_pinju-1
செப்டம்பர்
4th September 2013 by ஆசிரியர்

அறிஞர்களின் வாழ்வில்

Read More
2013_sep_pinju-38
செப்டம்பர்
5th September 2013 by ஆசிரியர்

புள்ளிகளை இணை : புதுப்படம் வரை

Read More
2013_sep_pinju-36
செப்டம்பர்
4th September 2013 by ஆசிரியர்

கால் பந்தாட்டம் (Foot Ball)

Read More
2013_sep_pinju-25
செப்டம்பர்
5th September 2013 by ஆசிரியர்

உலக நாடுகள் – பெனின்

Read More
2013_sep_pinju-42
செப்டம்பர்
4th September 2013 by ஆசிரியர்

அறிஞர் அண்ணா பிறந்த நாள் : செப்டம்பர் 15

Read More
2013_sep_pinju-30
செப்டம்பர்
4th September 2013 by ஆசிரியர்

சாமிகளின் பிறப்பும் இறப்பும் – 13

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p