• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சாமிகளின் பிறப்பும் இறப்பும் – 13

2013_sep_pinju-30
செப்டம்பர்

நல்லதும் கெட்டதும் தரும் சாமி

நாம் குரங்குகளாக ஒரு காலத்தில் காட்டில் அலைந்து கொண்டிருந்தோம். முன்னங்கால்களைத் தூக்கிப் பிறகு நட்டமாக நடக்கத் தொடங்கினோம். முன்னங்கால் இரண்டும் பிறகு கைகளாகிக் கீழே தொங்கின. கைகளே இல்லாதபோது கையெடுத்துக் கும்பிட சாமிகளும் பூமியில் இல்லை. சாமியில்லாத பூமியில் ரொம்ப காலம் மனிதர்கள் வாழ்ந்தார்கள். பின்னர் கூட்டம் கூட்டமாக இனக்குழுக்களாக வாழத் தொடங்கினார்கள்.

வேட்டையாடிச் சாப்பிட்ட காலம் அது. மனித மூளை இப்போது இருப்பதைப்போல அவ்வளவு சுறுசுறுப்பாகவும் கூர்மையாகவும் வளர்ச்சி பெறாத காலம். கைகளைப் பயன்படுத்தி மனிதன் உழைக்கத் தொடங்கினான். கைகளின் உழைப்பால் நரம்புகளும் நரம்பு மண்டலத்தின் தலைமைச் செயலகமான மூளை என்கிற உறுப்பும் உருவானது. இயற்கையோடு இயற்கையாக மனிதர்கள் வாழ்ந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனிக்கத் தொடங்கினார்கள். மெல்ல மெல்ல மூளை வேலை செய்கிறது. சிந்தனை, உணர்வு எல்லாம் வளர்கிறது.

அப்போது, காடுகளில் மலைகளில் நீர் கிடைக்கும் இடங்களைச் சுற்றித்தான் வாழ்க்கை. பூச்சிக்கடி வண்டுக்கடிகளுக்கு நடுவே அப்பாவிகளாக மனித வாழ்க்கை துளிர்விட்டது. அந்தக்காடு திடீரெனத் தீப்பற்றி எரியும். விலங்குகளும் மனிதர்களும் பதறி ஓடுவார்கள். மின்னல் வெட்டியதால் தீப்பிடித்தது. மின்னல் மேலே வானத்திலிருந்து வந்தது. நாள்கணக்கில் காடு எரிந்து கொண்டே இருக்கும். மனிதர்களால் காட்டுத்தீயை அணைக்க முடியுமா? அதுவும் அந்தக் காலத்தில். பின்னர் இடிச்சத்தம் கேட்கும். அதுவும் மேலேதான். மழைபெய்யும். பலநாள் விடாமல் பெய்யும் மழையில்தான் காட்டுத் தீ அணையும். மழையும் மேலே இருந்துதான் வந்தது. பகலில் சூரியன் சுட்டெரிக்கிறது. அதுவும் மேலேதான் இருக்கிறது. இரவில் நிலா ஒளி தருகிறது. அதுவும் மேலேதான் இருக்கிறது.

நல்லதும் கெட்டதும் எல்லாமே மேலே இருந்துதான் வருகிறது என்று அன்றைய மனிதன் நினைத்தான். ஆகவே மேலே ஏதோ ஒரு சக்தி இருப்பதாக அவன் கற்பனை செய்தான். அன்றைய மனிதர்களான ஆண்களும், பெண்களும் மேலே இருக்கும் அந்தச் சக்தியைச் சமாதானப்படுத்தி நல்லதை மட்டும் கீழே அனுப்பினால் போதும் என்று சொல்ல ஆசைப்பட்டார்கள். சமாதானப்படுத்துவது எப்படி என்பது அடுத்த பிரச்சினை. அன்றைய மனிதர்கள் மிருகங்களைச் சமாதானப்படுத்தத் தங்களிடம் இருந்த ஆடு மாடுகளைத் தூக்கிப் போடுவார்கள். அந்த மிருகம் ஆடு மாடுகளைத் தின்று சமாதானமாகி மனிதர்களை விட்டுவிடும்.
அதே பாணியில் மேலே இருக்கும் சக்தியைச் சமாதானப்படுத்த ஆடுகளைத் தூக்கிக் கொண்டு உயரமான மலை உச்சிகளுக்குப் போனார்கள். உலகமெங்கும் மலைகளில் சாமி கோவில்கள் இருப்பதன் ரகசியம் புரிகிறதா? ஆனால், மலைக்குப் போனாலும் வானம் எட்டவில்லை. என்னடா செய்யிறது என்று மனிதர்கள் மலையில் நின்று யோசித்தார்கள். காடுகள் எரிந்து புகை மேலே போவதைப் பார்த்தார்கள். ஆகவே, ஆடு மாடுகளைத் தீயில் போட்டு எரித்தார்கள். ஆட்டுப் புகை மேலே வானத்துக்குப் போனது. சரி, மேலே உள்ள சக்தி சமாதானமாகி நல்லது செய்யும் என்று இவர்கள் சமாதானப்பட்டார்கள்.

அப்படியே நடந்து கொண்டிருந்தது. பின்னர் ஒருநாள், நீங்க அனுப்புற புகை மேலே உள்ள சக்திக்காக நீங்க அனுப்புறதுதான் என்பது அந்தச் சக்திக்கு எப்படித் தெரியும்? என்று ஒருவன் கேள்வியைப் போட்டான். மக்களுக்குக் குழப்பமாகி விட்டது. அப்போ என்ன செய்யிறது? என்று அவனிடமே கேட்டார்கள். அப்படி வாங்க வழிக்கு என்று சந்தோசத்துடன் அவன் ஒருவழி சொன்னான்.

மேலே உள்ள சக்திக்குப் புரிகிற மொழி எனக்குத் தெரியும். நீங்க ஆடுமாடுகளைத் தீயிலே போடும்போது நான் அந்த மொழியில் சுக்லாம் பரதரம். யதா… ததா…என்று மந்திரம் சொல்வேன். அப்பத்தான் அது மேலே உள்ள சக்திக்குப் புரியும். எனக்கு அதுக்கு உண்டான சன்மானத்தைக் கொடுத்தா போதும் என்று சொன்னான். ஜனங்கள் ஒப்புக் கொண்டார்கள். பிறகு மந்திரம் சொல்லி ஆடு மாடுகளைத் தீயிட்டுக் கொளுத்தும் சடங்காக அது மாறியது. அதற்கு யாகம் என்று பெயர் வந்தது. அந்த வழிபாட்டு முறைக்கு பிராமண மதம் என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது. ரொம்ப காலம் இது ஓடிக்கொண்டிருந்தது.

காலப்போக்கில் மனிதர்கள் விவசாயத்தைக் கண்டுபிடித்தார்கள். உண்மையில் பெண்கள்தான் விவசாயத்தைக் கண்டுபிடித்தார்கள். விவசாயம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் வேட்டையாடுதல் முடிந்து ஆடுமாடுகளை வளர்க்கும் மேய்ச்சல் காலம் இருந்தது.

விவசாயம் செய்ய ஆடுமாடுகள் ரொம்ப முக்கியமாகத் தேவைப்பட்டன. நிலத்தை உழுவதற்கும் தேவை. சாணம் போட்டு

நிலத்தைப் பண்படுத்தவும் கால்நடைகள் தேவை. ஆகவே, அப்படி இருக்கிற ஆடுமாடுகளை எல்லாம் தீயில் போட்டுக் கொளுத்துகிற மதம் சரியில்லை. இப்போது சரிப்பட்டு வராது என்று விவசாயிகள் முடிவு செய்தார்கள்.

ஆடு மாடுகளைக் கொளுத்துகிற சாமி வேண்டாம். ஆடு மாடுகளைக் காப்பாத்துகிற சாமிதான் இப்போது தேவை என்று முடிவு செய்து புதுச்சாமி உண்டாக்கினார்கள்.

மேல்நாடுகளில் இயேசு கிறிஸ்துவை நல்ல மேய்ப்பாளராக உருவாக்கினார்கள். நம் நாட்டில் புல்லாங்குழல் ஊதி மாடுகளை மேய்க்கிற கிருஷ்ண பகவானை உண்டாக்கினார்கள்.

கிறிஸ்துவ மதமும் வைஷ்ணவ மதமும் தோன்றின. இவை எப்படிப் பணக்காரச் சாமிகளாக மாறின என்பதைப் பார்க்கலாம்.

– ச.தமிழ்ச்செல்வன்

(தொடரும்)

18
சாகச நிகழ்ச்சிகளைப் பார்த்து சாதித்தவர்4th September 2013
மாணவர்கள் ஒரு பாடத்தில் மட்டும் கவனம் வைப்பது ஏன்?4th September 2013மாணவர்கள் ஒரு பாடத்தில் மட்டும் கவனம் வைப்பது ஏன்?

மற்ற படைப்புகள்

2013_sep_pinju-25
செப்டம்பர்
5th September 2013 by ஆசிரியர்

உலக நாடுகள் – பெனின்

Read More
2013_sep_pinju-35
செப்டம்பர்
5th September 2013 by ஆசிரியர்

பிஞ்சுகளின் பக்கம்

Read More
2013_sep_pinju-42
செப்டம்பர்
4th September 2013 by ஆசிரியர்

அறிஞர் அண்ணா பிறந்த நாள் : செப்டம்பர் 15

Read More
2013_sep_pinju-34
செப்டம்பர்
4th September 2013 by ஆசிரியர்

மாணவர்கள் ஒரு பாடத்தில் மட்டும் கவனம் வைப்பது ஏன்?

Read More
2013_sep_pinju-38
செப்டம்பர்
5th September 2013 by ஆசிரியர்

புள்ளிகளை இணை : புதுப்படம் வரை

Read More
2013_sep_pinju-36
செப்டம்பர்
4th September 2013 by ஆசிரியர்

கால் பந்தாட்டம் (Foot Ball)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p