• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மாணவர்கள் ஒரு பாடத்தில் மட்டும் கவனம் வைப்பது ஏன்?

2013_sep_pinju-34
செப்டம்பர்

ஒரு குழந்தை கணக்குப் பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டதாகவும் மொழி, வரலாறு போன்ற பாடங்களில் ஆர்வம் குறைந்தும் காணப்படும். இன்னொரு குழந்தை வரலாற்றுப் பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டதாகவும் பிற பாடங்களில் ஆர்வம் குறைந்தும் காணப்படும், இதற்குக் காரணம் அவர்களின் நுண்ணறிவாகும்.

மனிதனின் நுண்ணறிவு பல கூறுகளால் ஆக்கப்பட்டது. நுண்ணறிவைப் பற்றிய உளவியல் கோட்பாடு ஒன்றின்படி நம் அனைவரின் நுண்ணறிவும் இரண்டு கூறுகளால் ஆக்கப்பட்டது என கொள்ளப்படுகிறது. வாழ்வதற்குத் தேவையான அடிப்படை அறிவை வழங்கும் பொதுக் காரணி ஒன்றும், ஏதேனும் ஒரு சிறப்புத் தன்மைக்குக் காரணமான  சிறப்புக் காரணி ஒன்றும் நம் நுண்ணறிவில் உள்ளது. இதன்படி, பள்ளி சென்று படிப்பதற்குப் பொது நுண்ணறிவுக் காரணியும் அதோடு ஏதோ ஒரு படத்தில் சிறந்து விளங்கக் காரணமாக சிறப்புக் காரணியும் எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்கும். அதன் காரணமாகவே எல்லாப் பாடங்களையும் படிப்பதோடு கணக்கு, அறிவியல் அல்லது மொழிப்பாடம் என ஏதோ ஒன்றில் மாணவர்கள் அதிக ஆர்வமும் தனித்திறமையும் பெற்று விளங்குகிறார்கள். சில குழந்தைகள் எந்தப் பாடத்திலும் ஆர்வமில்லாமல் ஓவியம், இசை, நடனம், சமூக சேவை என வேறு ஏதேனும் விஷயங்களில் ஆர்வம் கொண்டிருக்கலாம்.

குழந்தைகளின் ஆர்வத்தைக் கண்டறிய உளவியல் நாட்டச் சோதனைகள் பல உருவாக்கப்பட்டுள்ளன. இந்நாட்டச் சோதனைகள் குழந்தைகள் என்ன துறையில் அல்லது பாடத்தில் ஆர்வம் உள்ளவர்களாக விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறியும் திறன் படைத்தவை. அதைப் போன்ற நாட்டமுள்ள பாடங்களில் கவனம் செலுத்திப் படித்தால் பிற்காலத்தில் என்னென்ன பணிக்குச் செல்லலாம்  என்று தெரிந்து கொள்ள வசதியாக பணி விவர அகராதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளில் தங்கள் குழந்தைகள் எட்டாம் வகுப்புப் படிக்கும் போதே இச்சோதனைகளுக்கு அவர்களை உட்படுத்தி ஆர்வங்களைக் கண்டறிந்து விடுகிறார்கள். பின்பு, அதற்கேற்ற படிப்புகளையும் வேலைகளையும் தேர்ந்தெடுக்க குழந்தைகளுக்குப் பெற்றோர் உதவி செய்கிறார்கள்.

சிலர் நன்றாக நிறைய பேசும் இயல்பு கொண்டவர்களாக இருப்பர். அவர்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் நாலு பேரிடம் பேசிக் கொண்டிருக்கவே விருப்பப்படுவர்.

பேசாமல் இருக்கச் சொன்னால் அவ்வாறிருக்க அவர்களால் முடியாது. அதைப் போன்றே பேசாமல் அமைதியாக இருக்கும் சுபாவம் கொண்டவர்களை கலகலவெனப் பேசக் கட்டாயப்படுத்தினால் அது அவர்களால் முடியாது. இதைப் போன்றதே பொறியியல் துறைகளில் ஆர்வமில்லா ஒருவரை அத்துறை சார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதும். தற்போது பெற்றோர்கள் நாட்டில் என்ன துறையை எல்லோரும் தேர்ந்தெடுத்துப் படித்தார்களோ அதே துறையைத் தம் குழந்தைகளையும் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள்.

அவ்வாறு கட்டாயப்படுத்துவது முட்டாள்தனம். எந்தத் துறையைச் சார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்தாலும் அதில் முன்னேற வாய்ப்புகள் உள்ளன. அதைப் புரிந்து கொள்ளாமல் ஆர்வமில்லா குழந்தையை இலட்சக்கணக்கில் பணத்தை நன்கொடையாகக் கொடுத்து குறிப்பிட்ட பாடப்பிரிவில் சேர்த்து விட்டாலும் அவர்களால் அதில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி  பெற முடியாது. சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்!

_ நன்றி: அணுஅறிவியல் துளி

//

21
சாமிகளின் பிறப்பும் இறப்பும் - 13சாமிகளின் பிறப்பும் இறப்பும் - 134th September 2013
கால் பந்தாட்டம் (Foot Ball)4th September 2013கால் பந்தாட்டம் (Foot Ball)

மற்ற படைப்புகள்

2013_sep_pinju-42
செப்டம்பர்
4th September 2013 by ஆசிரியர்

அறிஞர் அண்ணா பிறந்த நாள் : செப்டம்பர் 15

Read More
2013_sep_pinju-15
செப்டம்பர்
5th September 2013 by ஆசிரியர்

சுடோகு

Read More
2013_sep_pinju-36
செப்டம்பர்
4th September 2013 by ஆசிரியர்

கால் பந்தாட்டம் (Foot Ball)

Read More
செப்டம்பர்
4th September 2013 by ஆசிரியர்

சாகச நிகழ்ச்சிகளைப் பார்த்து சாதித்தவர்

Read More
2013_sep_pinju-32
செப்டம்பர்
5th September 2013 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2013_sep_pinju-35
செப்டம்பர்
5th September 2013 by ஆசிரியர்

பிஞ்சுகளின் பக்கம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p