• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பிஞ்சுகள் பக்கம்

அக்டோபர்

கோடைப் பண்பலையில் ஓர் உரையாடல்

தென் மாவட்ட மக்களுக்காக கொடைக் கானலில் இருந்து ஒலிபரப்பாகும் கோடைப் பண்பலை 100.5இல் புதன்கிழமை இரவு 8 மணிக்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கான விடை தேடும் வினாக்கள் என்னும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.

நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்குபவர், மறைபொருளாகக் கேட்கும் 3  கேள்விகளுக்கு சரியான விடை சொல்ல வேண்டும். 28.8.2013 அன்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி இ.சுரபி. இதோ அந்த உரையாடல்: அறிவிப்பாளர்: வணக்கம் சுரபி, என்னிடம் ஒரு தலைவர் ஒளிந்துள்ளார்.

சுரபி: வணக்கம். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா?

அறிவிப்பாளர்: ஆமாம்.

சுரபி: அவர் எந்த ஊரில் பிறந்தார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து உள்ளாரா?

அறிவிப்பாளர்: ஊரைச் சொன்னால் விடையைச் சொல்லி விடுவீர்கள். அதனால் அவர் பிறந்த தேதியை மட்டும் கூறுகிறேன். செப்டம்பர் 17ஆம் தேதி.

சுரபி: விடையைச் சொல்கிறேன். அவர் தந்தை பெரியார் அவர்கள்.

அறிவிப்பாளர்: விடையை எப்படிச் சரியாகச் சொன்னீர்கள்.

சுரபி: எங்கள் பள்ளியில் பெரியார் அவர்களின் 135ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் 1.9.2013 அன்று பெரியார் பிஞ்சு சார்பாக வினாடி வினா நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதற்குரிய புத்தகத்தை அய்ந்து நாட்களாகப் படித்து வருகிறேன். அதனால் விடையைக் கூறி விட்டேன்.

– தகவல்: ம.மு.அன்புக்கரசன்,
பெரியகுளம்

 


படிப்பு

 

படிப்பதற்கு இருக்க வேண்டியது ஆர்வம்
இருக்கக்கூடாதது கர்வம்
வானத்துக்கு எல்லை இல்லை
கடலுக்கு எல்லை இல்லை
அதுபோல, கல்விக்கு முடிவு இல்லை.

– ச.அன்னபூரணி, ஏழாம் வகுப்பு,
ஆர்.சி.நடுநிலைப் பள்ளி, மதுரை.

 


அப்பா: ஏண்டா, எங்கிட்ட காசு வாங்கிறய்ல… போதாதா? அம்மாகிட்ட வேற எதுக்குடா வாங்குற?… இங்க பாரு… வாழ்க்கையில சிக்கனமா இருந்து பழகணும்… பலூனை அளவுக்கு மீறி ஊதினா வெடிச்சிரும், இல்லையா?

 

மகன்: பலூன் வெடிச்சிட்டா, அதுக்காக அதை வீசி எறிஞ்சிற மாட்டேன்… வெடிச்ச பலூனுக்குள்ள வெரலை விட்டு ஊதிக் காத்தடைச்சா, குட்டி குட்டி பலூன் நாலஞ்சு வந்திருமே!

– தேன் தினகரன், அயப்பாக்கம்


பெரியார்

 

இவர் ஆடை கருப்பு
ஆனால் அவர் உள்ளம் வெண்மை
பூந்தோட்டத்தின் காவல்காரன் அவர்
அதில் பூக்கும் பூக்கள்தான் நாங்கள்
வேடந்தாங்கல் சரணாலயம் நீங்கள்
பல மைல் கடல் தாண்டி கடந்து வரும் பறவைகள் நாங்கள்
அன்போ நீங்கள்
அறமோ நாங்கள்
சொல்லச் சொல்ல இது முடியாது
கேட்கக் கேட்கக் கசக்காது

– எஸ்.சந்திரகிரிபுர சதீஷ்

//

18
புள்ளிகளை இணை : புதுப்படம் வரைபுள்ளிகளை இணை : புதுப்படம் வரை5th September 2013
பிஞ்சுகளின் பக்கம்1st October 2013பிஞ்சுகளின் பக்கம்

மற்ற படைப்புகள்

2013_oct_47
அக்டோபர்
1st October 2013 by ஆசிரியர்

கோ கோ

Read More
2013_oct_16
அக்டோபர்
1st October 2013 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் – 4

Read More
2013_oct_26
அக்டோபர்
1st October 2013 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
2013_oct_53
அக்டோபர்
1st October 2013 by ஆசிரியர்

அறிஞர்களின் வாழ்வில்…

Read More
2013_oct_19
அக்டோபர்
30th September 2013 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
அக்டோபர்
30th September 2013 by ஆசிரியர்

பிஞ்சுகள் பக்கம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p