• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஆரோக்கிய உணவு

2013_dec_30
டிசம்பர்

வழ.. வழன்னு பேசாம வாழைப்பழம் சாப்பிடுங்க…!

பிஞ்சுகளே,

மாலையில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் படித்து முடித்த களைப்பில் வருவீர்கள். டப்பாவில் அளவுடன் எடுத்துச் செல்லும் மதியச் சாப்பாட்டினைச் சாப்பிட்டுப் பசியுடன் இருப்பீர்கள்.

அப்போது, உங்கள் பெற்றோரிடம் காசு வாங்கிச் சென்று கடைகளில் பாக்கெட்களில் காற்றுடன் உப்பியிருக்கும் நொறுக்குத் தீனிகளை வாங்கிச் சாப்பிடுவதில் பெரும்பாலான பிஞ்சுகள் ஆர்வம் காட்டுகின்றனர். சிலர், காலையில் வீட்டிலிருந்து செல்லும்போதே காசு வாங்கிச் சென்று, மாலை வீட்டிற்கு வரும்போது வாங்கி வந்து விடுகின்றனர்.

இந்த நொறுக்குத் தீனிகளால் உடல்நலத்திற்குக் கேடு என்பதைப் பலமுறை சொல்லியுள்ளோம். அப்படியெனில் என்னதான் சாப்பிடுவது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். உடலுக்கு வலிமையும் ஆரோக்கியமும் தரக்கூடிய கொய்யா, வாழை, திராட்சை போன்ற பழவகைகள், பச்சைப் பயிறு, கொண்டக் கடலை போன்ற பயிறு வகைகளையும் அவற்றால் நம் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்வோம்.

அரேபிய மொழியில் பனானா என்பதற்கு விரல் என்று பொருள். ஆரம்பத்தில் வாழைப்பழங்கள் விரல் நீளம்தான் இருந்துள்ளன. அரேபிய அடிமை வியாபாரிகள் தங்கள் வியாபாரத்துடன் சேர்த்து வாழைப் பழங்களையும் விற்பனை செய்தனர். அவர்கள் வைத்த பெயர்தான் பனானா என்று சொல்லப்படுகிறது.

சுவையான வாழைப்பழம் முக்கனிகளில் (மா, பலா, வாழை) ஒன்றாகும். அனைத்துக் காலங்களிலும் கிடைக்கக் கூடியது. உலகத்திலுள்ள மக்களால் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடப்படும் பழம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. மிகுந்த வெப்பமும் நீரும் உள்ள இடங்களில் வாழை செழித்து வளரும்.

பயன்கள்

சுக்ரோஸ், ஃப்ரூட்கோஸ் மற்றும் குளுக்கோஸ் என்ற மூன்று வகையான இயற்கைச் சர்க்கரைச் சத்துகள் வாழைப்பழத்தில் உள்ளன. 2 வாழைப் பழங்கள் சாப்பிட்டால் 90 நிமிடங்கள் வேலை செய்யத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.

நம் உடலில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கவோ அல்லது சரி செய்யவோ உதவும் பழமாக வாழைப்பழம் உள்ளதால் தினமும் சாப்பிட வேண்டும்.

வாழைப்பழத்தில் இருக்கும் புரதச்சத்தான டிரிப்டோபன் சோர்வு நீங்கி உற்சாகம் பெறச் செய்கிறது. இதில் உள்ள இரும்புச் சத்து ரத்தத்தில் ஹியூமோகுளோபின் உருவாக உதவுகிறது. எனவே, ரத்த சோகை நோயுடையவர்களுக்கு ஏற்றது. அதிக அளவில் பொட்டாசியமும் குறைந்த அளவில் உப்புச்சத்தும் இருப்பதால் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது.

இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. வைட்டமின் பி நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது. இதன் மென்மைத் தன்மை சிறுகுடலைப் பாதுகாத்து, வயிற்றில் உருவாகும் அதிக அளவு அமிலச் சத்தைச் சமன்செய்து எரிச்சலையும் குறைக்கிறது.

வாழைப் பழத்தில் பல வகைகள் இருக்கின்றன. எனினும் எது எளிதில் கிடைக்கிறதோ அதனை வாங்கிச் சாப்பிடலாம். அப்புறம் ஒரு முக்கியமான தகவல், தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டா புற்று நோயே வராதாம்.

21
அறிஞர்களின் வாழ்வில்...அறிஞர்களின் வாழ்வில்...28th November 2013
விந்தைச் செய்திகள்28th November 2013விந்தைச் செய்திகள்

மற்ற படைப்புகள்

2013_dec_12
டிசம்பர்
27th November 2013 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2013_dec_43
டிசம்பர்
28th November 2013 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் 6

Read More
2013_dec_25
டிசம்பர்
28th November 2013 by ஆசிரியர்

சாமிகளின் பிறப்பும் இறப்பும் – 18

Read More
2013_dec_52
டிசம்பர்
27th November 2013 by ஆசிரியர்

தங்கம்(Gold – Au)

Read More
2013_dec_23
டிசம்பர்
28th November 2013 by ஆசிரியர்

வள்ளுவரின் குறள் எனது வாழ்வை வளப்படுத்தியது! ஆசிரியர் தாத்தா பிறந்த நாள் 02.12.2013

Read More
2013_dec_2
டிசம்பர்
27th November 2013 by ஆசிரியர்

கண்கட்டி வித்தை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p