• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அறிவோம் பொம்மைக் கரடி : கோலா (Koala)

2014_jan_6
ஜனவரி

கிழக்கு ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் சிறிய விலங்கு கோலா. பொம்மை போன்ற உருவ அமைப்பைக் கொண்டிருப்பதால் பொம்மைக் கரடி என்றும், மரத்திலேயே வசிப்பதால் மரக்கரடி என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் native bear, monkey bear என்றும் சொல்லப்படுகிறது. குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. வாலில்லாத தடித்த உடல் இதன் தனித்த அடையாளமாக எளிதில் கண்டுபிடிக்க உதவுகிறது.

கோலா கரடியின் அறிவியல் பெயரான பாஸ்கோலரக்டோஸ் (Phascolaractos) கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். Phascolarctidae குடும்பத்தைச் சேர்ந்தது.

தாருக் மொழியில் குலா (Gula) என்பதே கோலா என்றானது. கோலாக் கரடிகள் தண்ணீர் குடிப்பதில்லை. தனக்குத் தேவையான தண்ணீரை அது சாப்பிடும் யூகலிப்டஸ் மரங்களின் இலைகளிலிருந்தே பெற்றுக் கொள்கின்றன.

பெண் கோலாக்களுக்கு யூகலிப்டஸ் இலையிலிருந்து கிடைக்கும் தண்ணீரே போதுமானது. பெரிய ஆண் கோலாக்கள் மரப் பொந்துகளில் இருக்கும் நீரையும், தரையில் இறங்கி வந்து கிடைக்கும் நீரையும் குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொள்கின்றன. தினமும் 400 கிராம் யூகலிப்டஸ் இலைகளை 5 அல்லது 6 தடவையாகச் சாப்பிடுகின்றன.

ஸ்பூன் வடிவ கருப்பு நிற மூக்கினையும் பஞ்சு போன்ற காதுகளையும் 4-லிருந்து 15 கிலோ எடையையும் கொண்டதாக இருக்கும். 13லிருந்து 18 ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியன.

பெண் கோலாக்களின் மூக்கு சிறிது வளைந்து காணப்படும். கோலாக்களின் மூளை மற்ற பாலூட்டிகளை ஒப்பிடும்போது 60 சதவிகிதம் சிறியது. உணவை மென்று சாப்பிடும் முன்பு வாயில் ஒதுக்கி வைக்கும் இயல்புடையன. ஆஸ்திரேலியாவில் காணப்படும் 600 வகையான யூகலிப்டஸ் மரங்களுள் 30 வகையான மரங்களின் இலைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுகின்றன.

கோடைக்காலத்தில் உறுதியான தாழ்ந்த மரக்கிளையில் தொங்கிக் கொண்டு ஓய்வு எடுக்கும்.   குளிர்காலத்தில் பந்து போல சுருண்டு படுத்துக்கொள்ளும். வேறு மரத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் மட்டுமே மரத்தைவிட்டுக் கீழே இறங்கும்.

பிறந்த பின் ஓர் ஆண்டுவரை தாயின் பாதுகாப்பில்தான் இருக்கும்.

பெரிய மலைப்பாம்புகள் (Pythons), Dingos, பறவைகள், பெரிய ஆந்தைகள், வாலுள்ள கழுகுகள் இளம் கோலாக்களை இரையாக உட்கொள்கின்றன.

ஆஸ்திரேலியாவில் மிருகக்காட்சி சாலைகளில் காணப்படும் கோலாக்கள் பால், தேநீர், ரொட்டி முதலியவற்றைச் சாப்பிடுகின்றன. வீடுகளில் செல்லப் பிராணியாகவும் வளர்க்கப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவின் முக்கியமான அடையாளச் சின்னமாக கோலாக்கள் திகழ்கின்றன.

30
புதிர்க் கணக்குபுதிர்க் கணக்கு31st December 2013
தெரியுமா?31st December 2013தெரியுமா?

மற்ற படைப்புகள்

2014_jan_22
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

வள்ளுவர் குரல்….

Read More
2014_jan_57
ஜனவரி
25th December 2013 by ஆசிரியர்

அறிவியல் பொங்கல்

Read More
2014_jan_9
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

விளையாட்டு

Read More
2014_jan_4
ஜனவரி
31st December 2013 by ஆசிரியர்

மேதைகளின் வாழ்வில்

Read More
2014_jan_66
ஜனவரி
31st December 2013 by ஆசிரியர்

புதிர்க் கணக்கு

Read More
2014_jan_34
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

உலக நாடுகள் போட்ஸ்வானா(Republic of Botswana)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p