• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

டைட்டானியம் (Ti)

2014_jan_63
ஜனவரி

  1. கிரேகார் (W. Gregor) என்னும் இங்கிலாந்து நாட்டு மத போதகரால் டைட்டானியம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
  2. 1791இல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உலோகத்திற்கு மெனாக்சின் (Menaccin) என்றும், கனிமத்திற்கு மெனாக்கோனைட் என்றும் பெயர் வைத்தார். தற்போது அந்தக் கனிமம் இல்மெனைட் என்றும் தனிமம் டைட்டானியம் என்றும் அழைக்கப்படுகிறது.
  3. மார்டின் கலாப்ரோத் (Klaproth) என்ற ஜெர்மன் நாட்டு வேதியியல் அறிஞர் 1975இல் ஹங்கேரி நாட்டிலிருந்து கிடைத்த ரூடைல் என்ற கனிமத்திலிருந்து பிரித்தெடுத்த தனிமத்திற்கு டைட்டானியம் என்று பெயரிட்டார்.
  4. தூய டைட்டானியத்தை 1895ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு வேதியியல் அறிஞர் ஹென்றி மோய்சன் கண்டுபிடித்தார். எனினும், 1917இல் ஹண்டர் (Hunter) என்ற அமெரிக்கரால் மேலும் தூய்மையூட்டப்பட்ட டைட்டானியம் கண்டுபிடிக்கப்பட்டது.
  5. டைட்டானியம் குறைவான அடர்த்தியும், மிகுந்த வலிமையும் கொண்ட பிரகாசமான வெண்ணிற உலோகமாகும்.
  6. பூமியில் அதிக அளவில் கிடைக்கும் தனிம வரிசையில் டைட்டானியம் 9ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
  7. அதிக அளவில் ஆஸ்திரேலியாவிலும், அடுத்தபடியாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றது.
  8. நம் நாட்டில் கேரளக் கடற்கரை மணலில் இல்மனைட் என்ற கனிமமாகக் கிடைக்கிறது.
  9. பூமியின் நிலப்பரப்பைவிட கடலின் தரை மட்டங்களில் அதிக அளவில் கிடைக்கின்றது.
  10. டைட்டானியப் பூச்சு செய்யப்பட்ட தகடுகள் 10 ஆண்டுகள் கடல் நீருக்குள் இருந்தாலும் சிறிய அளவில்கூட துருப்பிடிப்பதில்லை.
  11. டைட்டானியம் மின்சாரத்தைக் கடத்தாததால், மின்காப்புச் சாதனங்கள் மற்றும் செராமிக் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றது.
  12. உயர் வேகத்தில் செல்லும் நவீன விமானங்களை வடிவமைக்கப் பயன்படுகிறது.
  13. பூமியைவிட சந்திரனில் டைட்டானியம் ஆக்சைடு அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
  14. டைட்டானியத்தையும் நிக்கலையும் சேர்த்து உருவாக்கப்பட்ட கலப்பு உலோகம் நிட்டினால் எனப்படுகிறது.
  15. நிட்டினால் அதன் பழைய உருவத் தோற்றத்தை நினைவில் வைத்துக் கொண்டு, உருமாற்றத்திற்கு உட்பட்ட பின்பு மீண்டும் பழைய தோற்றத்தை அடைவதால் நினைவு உலோகம் (Memory Metal) என்றும் அழைக்கப்படுகிறது.
  16. 1962ஆம் ஆண்டு வில்லியம் ஜெ. பக்லர் (Buckler) என்னும் அமெரிக்கரால் நிட்டினால் கண்டுபிடிக்கப்பட்டது.
  17. இடம் பெயர்ந்த மூட்டுகளைச் சரி செய்து முறையாகக் கிண்ணத்தில் பொருத்த மருத்துவத்துறையில் நிட்டினால் பயன்படுத்தப்படுகிறது.
  18. தோல் மற்றும் துணிகளுக்குச் சாயமிடுதலிலும் கண்ணாடி, பீங்கான் செயற்கை ரத்தினங்கள் உற்பத்தியிலும் பயன்படுகிறது.
  19. கல்பனா சாவ்லா பயணித்த விண்கலத்தில் டைட்டானிய தகடு பெயர்ந்து விழுந்ததன் காரணமாக விண்கலம் தீப்பிடித்துச் சிதறி கல்பனா சாவ்லா உட்பட 8 விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர்.

17
தெரியுமா?தெரியுமா?31st December 2013
உலக நாடுகள் பிரேசில்(Brazil)28th January 2014உலக நாடுகள் பிரேசில்(Brazil)

மற்ற படைப்புகள்

2014_jan_14
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

ஆரோக்கிய உணவு எல்லாருக்கும் ஏற்ற கொய்யாப் பழம் சாப்பிடுங்க…! (Guava)

Read More
2014_jan_57
ஜனவரி
25th December 2013 by ஆசிரியர்

அறிவியல் பொங்கல்

Read More
2014_jan_62
ஜனவரி
31st December 2013 by ஆசிரியர்

எது மனிதாபிமானம்?

Read More
2014_feb_1
ஜனவரி
31st January 2014 by ஆசிரியர்

குரங்கின் காற்றாடி!

Read More
ஜனவரி
24th December 2013 by ஆசிரியர்

புதிர்க் கணக்கு விடை

Read More
2014_jan_22
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

வள்ளுவர் குரல்….

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p