• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அறிவைப் பயன்படுத்திய முதல் உயிரினம் நீள்வரல் தேவாங்கு(Aye-Aye)

2014_feb_23
பிப்ரவரி

உலகில் முதன்முதலில் அறிவைப் பயன்படுத்திய விலங்கு என்ற பெருமைக்குரியது Aye-Aye. இதன் பரிணாம வளர்ச்சிதான் இன்றைய மனிதனின் அறிவுத்திறன் என்று சார்லஸ் டார்வின் கூறியுள்ளார்.

முதுகெலும்புள்ள பாலூட்டி இனத்தைச் சேர்ந்த Aye-Aye மடகாஸ்கர் தீவினில் மட்டுமே காணப்படுகிறது. Animalia வகையினுள் Daubentoniidae குடும்பத்தில் Mammalia பிரிவினைச் சேர்ந்தது.

அணிலைப் போன்ற கால் விரல்களையும் வண்ண முடியையும் நீண்ட வாலையும் பெற்று, பூனையைப் போன்ற தலை அமைப்பையும் கண்களையும் காதுகளையும், மூக்கையும் பெற்றுள்ளன.

Aye-Aye தேவாங்கு போன்ற உருவத்தைப் பெற்று நீண்ட விரல்களைக் கொண்டுள்ளதால் நீள்விரல் தேவாங்கு என்று இங்கு பெயரிடப்பட்டுள்ளது.

இதன் முன்பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் இயல்புடையன. 3 அடி நீளம் உடைய இதன் வால் பெரும்பாலும் உடல் நீளத்திற்கு இணையாக அமைந்திருக்கும்.

காலின் மூன்றாவது விரல் மற்ற விரல்களைவிட மெலிந்து இருக்கும். இது மரங்களைத் தட்டிப் பார்த்து அதன் உள்ளே இருக்கும் பூச்சிகளைத் தெரிந்துகொள்ள உதவுகிறது.    நீளமாக இருக்கும் 4ஆவது விரல் மரக்கிளைகளின் இடையிலிருக்கும் சிறுசிறு பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிட உதவுகிறது.

மரத்தின் உச்சியிலேயே இருக்கும் இவை, மரத்தின் கிளையில் கோள வடிவில் கூடு கட்டிக் கொள்ளும். பகல் முழுவதும் மரத்தில் தூங்கிக் கொண்டே இருக்கும். இருட்டிய பிறகு தனக்குத் தேவைப்படும் இரையைத் தேடிச் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளும்.

கொட்டை, பழம், விதை, புழு பூச்சிகள், வண்டுகள், தேன், பூஞ்சை ஆகியவற்றைச் சாப்பிடும். நீள்விரல் தேவாங்கு அனைத்துண்ணி வகையினைச் சார்ந்ததாகும். நுண்ணிய செவித்திறன் கொண்டன. தோட்டங்களுக்குச் சென்று தேங்காய், மாங்காய், கரும்பு போன்றவற்றையும் சாப்பிடும். இவற்றின் பல் தேங்காய் சாப்பிட ஏதுவாக அமைந்துள்ளது.

நீள்விரல் தேவாங்கினைப் பார்த்தால் மரணம் ஏற்படும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக வேட்டையாடப்பட்டு இன்று மிக அரிதான விலங்கினங்களுள் இதுவும் ஒன்றாக உள்ளது.

15
ஆழ்கடலின் அடியில் இருப்பதென்ன?ஆழ்கடலின் அடியில் இருப்பதென்ன?31st January 2014
உடல்நலம் காக்கும் பப்பாளி31st January 2014உடல்நலம் காக்கும் பப்பாளி

மற்ற படைப்புகள்

2014_feb_14
பிப்ரவரி
31st January 2014 by ஆசிரியர்

தவற்றை எண்ணி வருந்தாதீர்

Read More
2014_feb_71
பிப்ரவரி
28th January 2014 by ஆசிரியர்

உலகம் ஒரு புத்தகம்

Read More
2014_feb_11
பிப்ரவரி
28th January 2014 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2014_feb_72
பிப்ரவரி
28th January 2014 by ஆசிரியர்

ENGLISH PAGE

Read More
2014_feb_8
பிப்ரவரி
31st January 2014 by ஆசிரியர்

தெரியுமா?

Read More
2014_feb_39
பிப்ரவரி
31st January 2014 by ஆசிரியர்

உலகின் அதிசய ரயில் தடங்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p