• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலகின் பெரிய பனிக்குகையின் வயது 8 கோடி

2014_mar_12
மார்ச்

ஆஸ்திரியா நாட்டின் சால்ஷ் பெர்க் நகரின் பக்கத்தில் வெர்பென் எனும் பகுதியில்  கோச்கோகெல் மலைகளுக்கு அருகே உள்ளது உலகின் மிகப் பெரிய பனிக்குகையான எஸ்ரிசென்வெல்ட்(Eisriesenwelt) .

42 கி.மீ. நீளத்தையுடைய இந்தப் பனிக்குகை, முதல் ஒரு கி.மீ. தூரத்திற்கு பனிக்கட்டிகளாலும் மீதமுள்ள பகுதி முழுவதும் சுண்ணாம்புக்கல்லாலும் ஆனது. எனினும், அவை முழுவதும் பனியால் சூழப்பட்டுள்ளதே இதன் சிறப்பம்சமாகும்.

75 அடி உயரம் உடைய பனிக் கோபுரம் ஓர் இடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பனிக்குகைகள் 6 முதல் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எஸ்ரிசென்வெல்ட் பனிக்குகை 1879ஆம் ஆண்டு சால்ஷ்பெர்க் நகரத்தைச் சேர்ந்த ஆண்டோன் லாசெட் என்ற ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1912ஆம் ஆண்டு அலெக்சாண்டர் வான் மார்க் என்பவர் ஆராய்ச்சி நோக்கில் குகைக்கு வந்தார். தொடர்ந்து பல ஆய்வாளர்கள் வருகை புரிந்ததால் 1920ஆம் ஆண்டு குகையில் தனி அறைகள் ஆராய்ச்சி செய்பவர்களுக்காக அமைக்கப்பட்டன.

1955ஆம் ஆண்டு கேபிள் கார்கள் குகைக்குச் செல்ல ஏற்படுத்தப்பட்டன. குகையின் நீளம் 42 கி.மீ. இருந்தபோதிலும், 1 கி.மீ. தூரம் வரையே சுற்றுலாப் பயணிகள் சென்றுவரும் வசதி செய்யப்பட்டுள்ளது. அனுமதித்துள்ள 1 கி.மீ. பாதையைச் சுற்றிப் பார்த்து வரவே 1 மணி நேரம் ஆகுமாம்.

ஆஸ்திரியாவின் பிரபலமான சுற்றுலாத் தலமாகத் திகழும் இந்தக் குகையைப் பார்வையிட ஆண்டுக்கு 2 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.

குகை உள்ள பகுதியில் கடுமையான மழை பெய்து அங்குள்ள சால்ஜென் நதியில் வெள்ளம் ஏற்பட்டு குகைக்குள்ளும் வெள்ள நீர் பாய்ந்திருக்கலாம். பின், கடுமையான பனிப்பொழிவின் காரணமாக அந்தத் தண்ணீர் பனியாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

15
பிரமிடின் உண்மைகள்பிரமிடின் உண்மைகள்3rd March 2014
முட்டுக்கட்டை3rd March 2014முட்டுக்கட்டை

மற்ற படைப்புகள்

2014_mar_20
மார்ச்
5th March 2014 by ஆசிரியர்

சாதனைப் பெண் ஹெலன் கெல்லர்

Read More
2014_mar_13
மார்ச்
5th March 2014 by ஆசிரியர்

நிம்மதி

Read More
2014_mar_17
மார்ச்
5th March 2014 by ஆசிரியர்

விளையாட்டு

Read More
2014_mar_33
மார்ச்
27th February 2014 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2014_mar_54
மார்ச்
5th March 2014 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் – 9

Read More
2014_mar_57
மார்ச்
27th February 2014 by ஆசிரியர்

பெருமைமிகு பெண்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p