• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கார்ட்டூன் பார்ப்பது தவறா?

2014_apr_1
ஏப்ரல்

– சிகரம்

தொலைக்காட்சி! பெயருக்கு ஏற்ப பலதை இதில் தொலைக்கின்றோம். நேரத்தைக் தொலைக்கின்றோம்; பார்வையைத் தொலைக்கின்றோம்; பணிகளைத் தொலைக்கின்றோம்; பாசத்தைத் தொலைக் கின்றோம்; பாதுகாப்பைத் தொலைக்கின்றோம்; பண்பாட்டைத் தொலைக்கின்றோம்; பணத்தைத் தொலைக்கின்றோம் _ விளம்பர ஈர்ப்பில்; நலத்தைத் தொலைக்கின்றோம். பிஞ்சுகளாகிய நீங்களோ இளமையையே தொலைக்கின்றீர்கள்.

பள்ளிக்கூடத்தில் செலவிடும் நேரம் போக, பல பிஞ்சுகள் தங்கள் நேரத்தைக் கார்ட்டூன் காண்பதிலே தொலைக்கின்றனர். அது ஒரு போதையாகவே அவர்களுக்கு ஆகி, அதில் மூழ்கி, அதற்கே அடிமையாகிக் கிடக்கின்ற அவலம் அனைத்து வீடுகளிலும் காணப்படுகிறது.

தொலைக்காட்சி பார்ப்பது தப்பா? அதில் நன்மை இல்லையா? இக்கேள்விகள் உங்களுக்கு எழும்.

தொலைக்காட்சி பார்ப்பது தப்பல்ல. கார்ட்டூன் காட்சிகளையே மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருப்பதுதான் தவறு. அது நம் நேரத்தையும் கெடுத்து, கண்ணையும் கெடுக்கும்.

ஆர்வம் இருப்போர் லு  மணி நேரம் பார்க்கலாம். அதுதான் அளவு. எந்த ஒன்றிலும் அதிகம் மூழ்கினால் நாம் அதற்கு அடிமைப்பட்டோம் என்பதே அர்த்தம்.

படிப்பு, விளையாட்டு, ஆடல், பாடல், காணல், களித்தல் எல்லாம் அளவோடு, அதற்குரிய நேரத்தில் அமைவதே சரி! உகந்தது! நல்லது!

உடலுக்கு ஊட்டம் கிடைக்க கலப்புணவு கட்டாயம். அவ்வாறே, அறிவுக்கும், மகிழ்விற்கும், நலத்திற்கும் கலப்பு உணர்வு கட்டாயம். மனிதன் பல்வேறு உணர்வுகள் உடையவன். அத்தனைக்கும் தீனிபோட வேண்டும். ஒன்றிலே ஒன்றுதல் உன்மத்த நிலையாகும் _ பைத்திய நிலையாகும்.

தொலைக்காட்சியை, இணையத்தை சரியாகப் பயன்படுத்தினால், அது ஆற்றல் வளர்க்கும்; அறிவு வளர்க்கும்; சிந்தனை வளர்க்கும்; திறமை வளர்க்கும். ஆனால், அதில் ஏதாவது ஒன்றுக்கு அடிமையானால் கேடே பயக்கும்; கிறுக்கே பிடிக்கும்!

தொலைக்காட்சியிலும், இணையத்திலும் நல்லவையும் உண்டு; தீயவையும் உண்டு. பயனுள்ளவற்றைத் தேர்வு செய்து காண்பது அறிவிற்கு அழகு; சிறப்பிற்கு வழி! உயர்விற்கு உந்தும்!

கார்ட்டூன் காண்பதிலே நாள் முழுக்க அமர்ந்தால், நம் மூளை கெடுவதோடு _ அடிமையாவதோடு, கண்ணும் கெடும், நாம் செய்ய வேண்டிய பிற பணிகளும் கெடும். பெரியவர்கள் கார்ட்டூன் சேனல் வராமல் செய்வது மிகவும் நல்லது.

ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால், உடல் நலமும் கெடும்; மனநலமும் கெடும். உடல் பருமன், சர்க்கரை நோய், மூட்டுவலி போன்றவை சிறு வயதிலே வரும்.

தொலைக்காட்சி காண 1லு மணி நேரம் ஒதுக்கினால், அதில் கார்ட்டூன் 15 நிமிடம், விளையாட்டு 15 நிமிடம், செய்தி 10 நிமிடம், இயற்கைக் காட்சிகள் 10 நிமிடம், இசை 10 நிமிடம், கல்வி சார்ந்தவை 30 நிமிடம் என்று காண வேண்டும்.

வீட்டில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி. பலபேர் பார்ப்பர். நமக்கு விருப்பமானதையே பார்த்துக் கொண்டிருந்தால் மற்றவர்கள் பார்க்க முடியாது. எனவே, கலந்துபேசி, நேரம் ஒதுக்கிப் பார்ப்பது எல்லோருக்கும் உதவும்; சிக்கலைத் தவிர்க்கும்.

படுத்துக்கொண்டு தொலைக்காட்சியைப் பார்க்கக் கூடாது. தொலைக்காட்சி திரையைப் போன்று 5 மடங்கு தூரத்திற்கு அப்பாலிருந்து பார்க்க வேண்டும். அருகிலிருந்து பார்க்கக் கூடாது. இரவு வேளையில் மின் விளக்கொளியில் தொலைக்காட்சி பார்க்க வேண்டும்.  இருளில் பார்க்கக் கூடாது.

கண் என்பது நம் உறுப்புகளில் முதன்மையானது. தேவையற்று தொலைக்காட்சி முன்னும், கணினி முன்னும் காண்பது, கண்ணுக்கும் கேடு, காலத்திற்கும் கேடு. இன்றைய பிஞ்சுகள் இளம் வயதிலே கண்ணாடி அணிவதற்கு இதுவும் காரணம்.

தொலைக்காட்சியில் இசை கேட்கும்போது, செய்தி கேட்கும்போது காதால் மட்டும் கேட்டால் போதும். கண்ணைப் பாதுகாக்க உதவும்.

16
சின்னக்கை சித்திரம்சின்னக்கை சித்திரம்18th March 2014
குளிர்பான ஆபத்து31st March 2014குளிர்பான ஆபத்து

மற்ற படைப்புகள்

2014_apr_29
ஏப்ரல்
31st March 2014 by ஆசிரியர்

கடல் நாய்(Ross Seal)

Read More
2014_apr_49
ஏப்ரல்
19th February 2014 by ஆசிரியர்

பிஞ்சுகளின் சிந்தனைக்கு

Read More
2014_apr_57
ஏப்ரல்
18th February 2014 by ஆசிரியர்

அறிவே ஆளுது!

Read More
2014_apr_76
ஏப்ரல்
31st March 2014 by ஆசிரியர்

வெள்ளி

Read More
2014_apr_45
ஏப்ரல்
31st March 2014 by ஆசிரியர்

பிரபஞ்ச இரகசியம் – 10

Read More
2014_apr_26
ஏப்ரல்
31st March 2014 by ஆசிரியர்

ஆரோக்கிய உணவு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p