• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலகப் புத்தக நாள் : ஏப்ரல் 23 : உலகப் பெரும் நூலகங்கள் 10

2014_apr_52
ஏப்ரல்

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் அறிவுத் தேடலுக்கும் பயன்படுபவை நூலகங்கள். கிராமங்கள், நகரங்களுக்கேற்ப நூலக அமைப்பும் நூல்களின் எண்ணிக்கையும் இருக்கும். உலக அளவில் மிகப் பெரிய அளவில் திகழ்ந்து அறிவுப் பசிக்கு விருந்தளித்து வரும் நூலகங்களைத் தெரிந்து கொள்வோம்.

பிரிட்டிஷ் நூலகம்

1753ஆம் ஆண்டு கட்டப்பட்டது. லண்டனில் (பிரிட்டன்) உள்ளது. நூல்கள், பிற மொழி நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், மாத, வார, நாளேடுகள், இசை வெளியீடுகள்… என 15 கோடியே 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.

லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்

அமெரிக்கக் காங்கிரசால் 1800ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நூலகம் வாஷிங்டனில் உள்ளது. அய்க்கிய அமெரிக்காவின் தேசிய நூலகமாகத் திகழும் இதில் சுமார் 15 கோடிக்கும் அதிகமான தொகுப்புகள் உள்ளன.

நியுயார்க் நூலகம்

1895இல் அமெரிக்காவின் நியுயார்க் நகரத்தில் நிறுவப்பட்டது.  இங்கு சுமார் 5 கோடியே 31 லட்சம் நூல்கள் இடம் பெற்றுள்ளன.

ரஷ்யன் ஸ்டேட் நூலகம்

1862ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த நூலகம் ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ளது. 247 மொழிகளில் புத்தகங்கள் இடம் பெற்றிருப்பது இந்நூலகத்தின் சிறப்பாகும். சுமார் 4 கோடியே 44 லட்சம் நூல்களைக் கொண்டுள்ளதுடன் இசை மற்றும் பல வசதிகளையும் பெற்றுத் திகழ்கிறது.

நேஷனல் லைப்ரரி ஆஃப் ரஷ்யா

1795ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்நூலகம் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்னுமிடத்தில் உள்ளது. இங்கு சுமார் 3 கோடியே 65 லட்சம் நூல்கள் உள்ளன.

நேஷனல் டயட் லைப்ரரி

1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நூலகம் ஜப்பானின் டோக்கியோ நகரில் அமைந்துள்ளது. 3 கோடியே 56 லட்சம் நூல்கள் இடம் பெற்றுள்ளன.

டோரன்டோ பப்ளிக் லைப்ரரி

1884ஆம் ஆண்டு கனடாவின் டோரான்டோ நகரில் தொடங்கப்பட்ட இந்நூலகம் 3 கோடியே 20 லட்சம் நூல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

நேஷனல் லைப்ரரி ஆஃப் சீனா

சீன நாட்டில் பீஜிங் நகரத்தில் 1909ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 3 கோடியே 12 லட்சம்  புத்தகங்கள் இங்கு உள்ளன.

பைப்லோதிகு நேஷனல் தி பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் 1461ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நூலகத்தில் 3 கோடியே 10 லட்சம் புத்தகங்கள் உள்ளன.

ராயல் டேனிஷ் லைப்ரரி

1648ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நூலகம் டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் 3 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் செயல்பட்டு வருகிறது.

19
அடிப் பந்தாட்டம்(Base Ball)அடிப் பந்தாட்டம்(Base Ball)31st March 2014
வைப்பர் கண்டுபிடித்த பெண்மணி31st March 2014வைப்பர் கண்டுபிடித்த பெண்மணி

மற்ற படைப்புகள்

2014_apr_41
ஏப்ரல்
31st March 2014 by ஆசிரியர்

சீனா விசன் 2050

Read More
2014_apr_57
ஏப்ரல்
18th February 2014 by ஆசிரியர்

அறிவே ஆளுது!

Read More
2014_apr_20
ஏப்ரல்
31st March 2014 by ஆசிரியர்

அடிப் பந்தாட்டம்(Base Ball)

Read More
2014_apr_58
ஏப்ரல்
18th March 2014 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2014_apr_29
ஏப்ரல்
31st March 2014 by ஆசிரியர்

கடல் நாய்(Ross Seal)

Read More
2014_apr_76
ஏப்ரல்
31st March 2014 by ஆசிரியர்

வெள்ளி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p