• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சைபீரியாவின் முத்து பைக்கால் ஏரி

2014_may_27
மே

உலகின் மிகப் பெரிய ஏரியான பைக்கால் ஏரி ரஷ்ய நாட்டின் சைபீரியப் பகுதியில் அமைந்துள்ளது. உலகில் நீர்ம வடிவில் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீரில் 20 சதவிகிதம் இந்த ஏரியில்தான் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 31,722 ச.கி.மீட்டர் (12,248 சதுர மைல்) பரப்பளவினைக் கொண்ட இந்த ஏரியின் நீளம் 636 கி.மீட்டர், அகலம் 79 கி.மீட்டர், ஆழம் 1,642 மீட்டர் ஆகும். பைக்கால் ஏரி தோன்றி சுமார் 25 முதல் 30 மில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஏரியைச் சுற்றி மலைகளும் காடுகளும் காணப்படுகின்றன. 27 தீவுகளை உள்ளடக்கிய பைக்கால் ஏரியின் பெரிய தீவாக ஓல்கான் (Olkhon) தீவு உள்ளது. 72 கி.மீட்டர் நீளம் உடைய ஓல்கான் தீவு உலகின் மூன்றாவது நீளமான ஏரிசூழ் தீவு (Lake-bound Island) என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது.

330க்கும் அதிகமான ஆறுகளிலிருந்து பைக்கால் ஏரிக்குத் தண்ணீர் வருகிறது. அவற்றுள் செலங்கா ஆறு (Selenga River), பர்குசின் ஆறு (Barguzin River), அப்பர் அங்காரா ஆறு (Upper Angara River), டுர்கா ஆறு (Turga River), சர்மா ஆறு (Sarma River), நேஷ்னயா ஆறு (Snezhnaya River) ஆகியன குறிப்பிடத்தக்க ஆறுகளாகும். ஏரி நிறைந்து தண்ணீர் வடியும்போது அங்காரா ஆற்றின் வழியாக வெளியேறுகிறது.

1085 வகையான தாவர இனங்களும் 1,550 மிருக இனங்களும் ஏரியில் காணப்படுகின்றன. இதில் 80 சதவிகிதம் இந்த ஏரியில் மட்டுமே காணப்படுபவையாகத் திகழ்வது இதன் சிறப்பம்சமாகும். இவற்றில் பல உயிரினங்கள் உலக அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலினுள் உள்ளன. ஏரியின் ஆழமான பகுதிகளிலும் எண்ணற்ற அபூர்வ உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தொடர்ந்து ஆதிமனிதர்கள் முதல் மன்னர் பரம்பரை வரை வாழ்ந்து வந்துள்ள இந்தப் பகுதியில் 1200க்கும் மேற்பட்ட தொல்வரலாற்றுச் சின்னங்கள் காணப்படுகின்றன.

பைக்கால் ஏரியின் செல்லப்பெயர் சைபீரியாவின் முத்து (The Pearl of Siberia) என்பதாகும். மேலும், (Older sister of sister Lakes) ஏரிகளின் மூத்த சகோதரி என்றும் அழைக்கப்படுகிறது. யுனெஸ்கோவினால் 1996இல் உலக வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவது இதன் சிறப்பினை  பெருமையினை வெளிப்படுத்தும்.

16
ENGLISH PAGEENGLISH PAGE7th May 2014
சுடோகு விடை8th May 2014சுடோகு விடை

மற்ற படைப்புகள்

2014_may_45
மே
7th May 2014 by ஆசிரியர்

குழிப் பந்தாட்டம் (GOLF)

Read More
2014_may_20
மே
8th May 2014 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
2014_may_48
மே
4th May 2014 by ஆசிரியர்

ஆரோக்கிய உணவு

Read More
2014_may_10
மே
3rd May 2014 by ஆசிரியர்

காற்றே…. காற்றே…. நீ…

Read More
2014_may_9
மே
7th May 2014 by ஆசிரியர்

உலகப் பெரும் நூலகங்கள்

Read More
2014_may_1
மே
7th May 2014 by ஆசிரியர்

பிஞ்சுகளின் சிந்தனைக்கு………..

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p