• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நீரிழிவினைக் கட்டுப்படுத்தும் நாவல் பழம்

2014_jul_36
ஜூலை

எளிமையும் வலிமையும் கொண்ட அருமையான பழம் நாவல் பழமாகும்.

நாவல் பழம் சாப்பிட்டால் நாவின் நிறம் கருமையாக மாறும். நாக்கு வறண்டு தண்ணீர் தாகம் அதிகமாகும். நாவின் தன்மையை மாற்றுவதால் நா + அல் (நாவல்) என்றனர். வழக்கில் பல இடங்களில் நவாப்பழம் என்றும், நாகப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது.

கோடை விடுமுறை தொடங்கும்போது நாவல் மரத்தில் ஏறி, கிளைகளைப் பிடித்து ஆட்டி உலுக்கி, விழும் பழங்களை நண்பர் கூட்டத்துடன்  எடுத்துச் சாப்பிடும்போது இருக்கும் சுவையே தனிச்சுவைதான்.

கனிமங்கள், புரதங்கள், சுண்ணாம்புச் சத்துடன் அதிக அளவு இரும்புச் சத்தையும் கொண்டுள்ளது நாவல் பழம்.

உடம்பில் ஏற்படும் நோயின் தாக்கத்தைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்ட நாவல் பழம் சிறுநீரகத்தையும் சீராகச் செயல்பட வைக்கும். செரிமானக் கோளாறுகளை நீக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்து பசியைத் தூண்டும் இயல்புடையது. ரத்தக் கொதிப்பு மற்றும் நீர்க்கடுப்பிற்கும் சிறந்தது.

இதயத் தசைகளை உறுதிப்படுத்தும். கல்லீரல் பிரச்சினைகள், குடற்புண், மூலநோய் மற்றும் மண்ணீரல் பாதிப்புகளுக்கும் சிறந்தது. இரத்தத்தைச் சுத்திகரித்து விருத்தி செய்யும். பித்தத்தைத் தணிக்கும். நாக்கு மற்றும் பல் ஈறுகளைச் சுத்தம் செய்யும். சிறுநீர்ச் சுருக்கினைக் குணமாக்கி, உடம்புக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி தரும்.

மனித உடம்பில் கணையத்தின் தன்மை துவர்ப்புச் சுவையின் தன்மையைக் கொண்டதாகும். இந்தக் கணையத்திலிருந்துதான் இன்சுலின் சுரக்கிறது. கணையத்தில் துவர்ப்பின் ஆதிக்கம் குறையும்போது இன்சுலின் சுரப்பு குறைகிறது. இன்சுலின் குறையும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளுக்கோசைட் உள்ளது. இதன் செயல்பாடு உடம்புக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயலினைத் தடுக்கிறது. எனவே, நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று லக்னோவில் உள்ள நீரிழிவு நோய் ஆராய்ச்சி மய்யத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாவல் பழத்தில் நீளவாட்டில் பெரியதாக இருப்பதில் இனிப்புச் சுவை அதிகம் இருக்கும். உருண்டை வடிவில் இருக்கும் பழமே மருத்துவ குணம் உடையது.

இத்தகு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள நாவல் பழத்தினை அளவுடன் சாப்பிட்டு, அதன் அளவில்லாப் பயன்களைப் பெற்று மகிழ்வோம்.

9
பிரபஞ்ச ரகசியம் -13பிரபஞ்ச ரகசியம் -135th July 2014
கிம்பெர்லே வைரச் சுரங்கம் (Kimberley Diamond Mine)5th July 2014கிம்பெர்லே வைரச் சுரங்கம் (Kimberley Diamond Mine)

மற்ற படைப்புகள்

2014_jul_54
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

கை நீட்டம்மா….. கை நீட்டு!

Read More
2014_jul_15
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

நான் அருண் பேசுகிறேன்(2)

Read More
2014_jul_52
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

உலக நாடுகள்

Read More
2014_jul_11
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

நிலாவில் வீடு கட்ட வா!

Read More
2014_jul_22
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

நீச்சல்

Read More
2014_jul_2
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

தன்னம்பிக்கை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p