• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கணக்கில் புலியா? நீங்களும் உலக சாதனையாளர்தான்!

2014_sep_57
செப்டம்பர்

கணிதப் பாடத்தை அதிக ஈடுபாட்டோட செய்து விரைந்து சரியான விடை கண்டுபிடிப்பவர்களை கணக்கில் புலி எனச் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீங்க. கணக்குப் புலிகள் எல்லாம் கவனமா இதைப் படிங்க.

உலக அளவில் கணிதத்தில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன. இந்தப் போட்டி பன்னாட்டுக் கணித அமைப்பினால் நடத்தப்பட்டு வருகிறது. இறுதிப் போட்டிக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் முதன்மை பெறுபவருக்கு பன்னாட்டு விருது வழங்கப்படும்.

இந்த ஆண்டு போட்டி தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் நடைபெற்றுள்ளது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். போட்டியில், ஈரான் நாட்டைச் சேர்ந்த மரியம் மிர்சாகனி முதல் பரிசைத் தட்டிச் சென்று உலக சாதனையாளராகி உள்ளார். ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இது போன்ற பரிசினை வெல்வது இதுவே முதல் முறையாகும் என்பதால் ஈரான் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மரியம் மிர்சாகனி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்  உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மரியம் மிர்சாகனி கணிதப் பேராசிரியையாக உள்ளார். பன்னாட்டுக் கணித அமைப்பு நடத்திய போட்டியில், கணித நுட்பங்களை பல்வேறு வரம்புகளில் தொழில்நுட்பத்திறன், தொலைநோக்குப்  பார்வை ஆகிய சேர்க்கைகள் உள்ளடக்கிய அறிக்கையை ஆய்வுக் கட்டுரையாகச் சமர்ப்பித்துள்ளார். இந்த ஆய்வுக் கட்டுரை நடுவர் குழுவால் முதல் பரிசுக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கணிதத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் இந்தப் பேராசிரியை 2013ஆம் ஆண்டு அமெரிக்கா கணித சங்கம் நடத்திய ஷாட்டர் பரிசுக்கான விருதையும், 2009ஆம் ஆண்டு புளுமெந்தால் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுப்பதாகவும், மற்ற பெண் அறிவியல், கணித ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையும் என்று கூறியதுடன், வரும் காலங்களில் போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் மரியம் மிர்சாகனி.

14
தள்ளிப் போட்டால் தள்ளப்படுவோம்!தள்ளிப் போட்டால் தள்ளப்படுவோம்!31st August 2014
நம்ம தாத்தா31st August 2014நம்ம தாத்தா

மற்ற படைப்புகள்

2014_sep_67
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

அநாதை

Read More
2014_sep_55
செப்டம்பர்
3rd September 2014 by ஆசிரியர்

வானவில்

Read More
2014_sep_14
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

திராட்சைப் பழம்

Read More
2014_sep_52
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

குரங்குகள் பலவிதம்!

Read More
2014_sep_61
செப்டம்பர்
31st August 2014 by ஆசிரியர்

குள்ளக் குதிரை(Shetland Pony)

Read More
2014_sep_5
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

உணவைப் பாதுகாப்போம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p