• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சதுரங்கத்தில் சாதித்த பிஞ்சு

2014_sep_68
செப்டம்பர்

கியூபா

அகில இந்திய அளவிலான 2ஆவது சதுரங்கப் போட்டி கிங் செஸ் பவுண்டேசன் சார்பில் ஆகஸ்ட் 15 முதல் 17 ஆம் தேதி முடிய சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 500 பேர் இதில் பங்கேற்றனர்.

திருச்சி திருவெறும்பூர் பி.ஹெச்.இ.எல். தமிழ்ப் பயிற்று மொழி நடுநிலைப் பள்ளியில் 3ஆம் வகுப்புப் பயிலும்  பெரியார் பிஞ்சு பு.வி.கியூபா,  8 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் விளையாடி, இந்திய அளவில் 7 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.

சிறு வயதிலேயே சதுரங்க விளையாட்டில் இவரது திறமையைக் கண்ட பெற்றோர் முறையாகப் பயிற்சியளிக்கத் தொடங்கினர். சிந்திக்கின்ற ஆற்றல் தாய்மொழிக் கல்வியில்தான் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் கியூபா அமிர்தாத்ரோபி என்ற அமைப்பின் சார்பில் அக்டோபர் 2013ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 7 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் கலந்துகொண்டு மாநிலத்திலேயே முதலாவதாக வெற்றி பெற்றுள்ளார்.

2013ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2014 பிப்ரவரி வரை 10க்கும் மேற்பட்ட சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பாதுகாப்பான குடை

ஜப்பானில் மினுமினுக்கும் புதிய குடை விற்பனைக்கு வந்துள்ளது. இரவு நேரங்களில் மழை பெய்யும்போது இந்தக் குடையினைப் பிடித்துச் சென்றால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். எப்படி என்கிறீர்களா?

ஒளியைப் பிரதிபலிக்கும் ஒரு பொருள் குடையின் விளிம்பில் வைத்துத் தைக்கப்பட்டுள்ளது. இந்த ஒளியானது 200 அடி தூரம் வரை ஒளிரும் தன்மையுடையது. இது போக்குவரத்து விபத்துகளிலிருந்து பயன்படுத்துவோரைப் பாதுகாக்கும்தானே.

இந்த ஒளிரும் மின்மினிக் குடையானது டபேடா என்னும் சில்க் துணியினால் தயாரிக்கப்படுகிறது. பார்ப்பதற்கு சாதாரண குடையைப் போலத்தான் காட்சியளிக்கும்.

ஜப்பான் நாட்டின் போக்குவரத்துப் பாதுகாப்புச் சங்கம் இந்தக் குடை தயாரித்த நிறுவனத்தைப் பாராட்டியுள்ளதாம்.

13
அநாதைஅநாதை1st September 2014
குரங்குகள் பலவிதம்!1st September 2014குரங்குகள் பலவிதம்!

மற்ற படைப்புகள்

2014_sep_65
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் 15

Read More
2014_sep_61
செப்டம்பர்
31st August 2014 by ஆசிரியர்

குள்ளக் குதிரை(Shetland Pony)

Read More
2014_sep_9
செப்டம்பர்
3rd September 2014 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2014_sep_1
செப்டம்பர்
2nd September 2014 by ஆசிரியர்

புதிய வரவுகள்

Read More
2014_sep_57
செப்டம்பர்
31st August 2014 by ஆசிரியர்

கணக்கில் புலியா? நீங்களும் உலக சாதனையாளர்தான்!

Read More
2014_sep_22
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

குண்டு எறிதல்(Shop Put)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p