• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

வெந்நீர் கடற்கரை (Hot Water Beach)

2014_oct_28
அக்டோபர்

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடற்கரையை நாடிச் செல்வோம். கடற்காற்றை அனுபவித்துக் கொண்டே நடப்போம். ஓங்கி உயர்ந்து ஓய்வின்றி வரும் அலைகளை ரசித்துக் கொண்டே தண்ணீருக்குள் இறங்குவோம். ஜில்லென்று ஓடிவரும் தண்ணீரில் கால்களை நனைத்து மகிழ்வோம்.

இதமான சூட்டுடன் கடல் தண்ணீர் இருக்கும் கடற்கரைக்குச் சென்றிருக்கிறீர்களா?

நியூசிலாந்து நாட்டில் கோரமண்டல் பெனின்சுலாவின் கிழக்குக் கடற்கரைதான் வெந்நீர்க் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.

விடியங்கா (Whitianga) வின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து 12 கி.மீட்டர் தூரத்திலும், ஆக்லாந்திலிருந்து (Auckland) 175 கி.மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது இந்த வெந்நீர்க் கடற்கரை.

இரண்டு கடல் நீரோட்டங்கள் பிரியுமிடத்தில்தான் வெதுவெதுப்பான நீராக உள்ளது. இது அண்டார்டிகா குளிர் நீரோட்டமும் பசிபிக் வெப்ப நீரோட்டமும் பிரியும் இடமாகும். புவிச் சூழலியல் மாற்றமே இங்குள்ள தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கக் காரணமாகும்.

கடற்கரையின் மணற்பரப்பில் பள்ளம் தோண்டி அந்த ஊற்றிலிருந்து வரும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். இயற்கை ஊற்றானது கடற்கரையின் எதிர்ப்புறத்தில் உள்ள ஆஃப் ஷோர் பாறை (Off-shore Rocks) அருகே காணப்படுகிறது.

இந்தத் தண்ணீரின் வெப்பநிலை 64 டிகிரி செல்சியஸ் இருக்கும். பள்ளம் தோண்ட மண்வெட்டியையும், தண்ணீரை எடுக்க வாளியையும் பயன்படுத்துகின்றனர். இவை, அருகில் உள்ள கடைகளில் வாடகைக்குக் கிடைக்கின்றன.

குறைந்த வேகத்திலான அலைகளே இங்கு காணப்பட்டாலும் சில நேரங்களில் பெரிய அலைகளும் வருவதுண்டு. பெரிய அலைகள், நீரோட்டங்கள் மற்றும் துளைகளின் மூலமாக ஆபத்துகள் வரலாம்.

லைஃப்கார்டு சேவை செயல்பட்டு வந்தாலும், நீச்சலில் அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே தண்ணீரினுள் செல்வதற்கு அறிவுறுத்தப்படுகின்றனர். வெந்நீர்க் கடற்கரையில் குளிப்பது உடம்புக்கு மிகவும் நல்லது என்ற நம்பிக்கை மக்களிடையே பரவலாக உள்ளது.

14
கயிற்றில் தொங்கினும் கற்கை நன்றே!கயிற்றில் தொங்கினும் கற்கை நன்றே!30th September 2014
அறிஞர்களின் வாழ்வில்....30th September 2014அறிஞர்களின் வாழ்வில்....

மற்ற படைப்புகள்

2014_oct_2
அக்டோபர்
1st September 2014 by ஆசிரியர்

வெண்பாவின் கலாட்டா!

Read More
2014_oct_22
அக்டோபர்
30th September 2014 by ஆசிரியர்

கழுதைப்புலி (Hyena)

Read More
2014_oct_18
அக்டோபர்
1st September 2014 by ஆசிரியர்

தெரியுமா?

Read More
2014_oct_24
அக்டோபர்
30th September 2014 by ஆசிரியர்

சம்மட்டி எறிதல் (Hammer Throw)

Read More
2014_oct_66
அக்டோபர்
1st September 2014 by ஆசிரியர்

A B C D கடி கடி

Read More
2014_oct_51
அக்டோபர்
29th September 2014 by ஆசிரியர்

சாதனைப் பிஞ்சுகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p