• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஆசிரியர் தாத்தா பிறந்த நாள்:டிசம்பர் 2

2014_dec_47
டிசம்பர்

அய்யாவுடன் முதல் சந்திப்பு

பெரியார் தாத்தாவுடன் சிறுவனாக ஆசிரியர் கி.வீரமணி

என்னுடைய இயற்பெயர் சாரங்கபாணி. என் ஆசிரியர் அவர்கள் அவரிடம் டியுஷன் படித்த எல்லா மாணவர்களுக்கும் தமிழர் இனவுணர்வு, மொழி உணர்வைத் தூண்டி, குடிஅரசு, திராவிட நாடு வார இதழ்களை அவர் வரவழைத்துப் படித்ததோடு எங்களிடமும் தருவார்.

தமிழ்ப் பெயர் பெற்றேன்

மாணவத் தோழர்கள் பலரும் பெயர் மாற்றங்கள் செய்து கொண்டு அப்படியே அழைத்துக் கொண்டோம். அவர் சுப்பிரமணியம், திராவிடமணியானார். நான் சாரங்கபாணி, வீரமணி என்று அழைக்கப் பெற்றேன். அண்ணாவின் திராவிட நாடு ஏட்டில் வந்த கலிங்கராணியில் வீரமணி ஒரு பாத்திரம்! பாலவேலாயுதம் இளவழகன் ஆனார். ஜெய்சந்திரன் வெற்றித்திங்கள் ஆனார்! இப்படிப் பலப்பல! இப்படிக் கொள்கை உணர்வுடன் வளர்ந்த மாணவர்களை எங்கள் ஆசான் திராவிடமணி ஊக்கப்படுத்தினார்.

அரங்கேற்றம்

காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா திராவிட நாடு ஏடு தொடங்கி நடத்திய அந்தக் காலத்தில் தந்தை பெரியார் அவர்கள், திராவிட நாடு ஏட்டுக்குக் கழகத் தோழர்கள் நன்கொடை அளிக்க வேண்டுமென ஒரு வேண்டுகோள் கடிதத்தினை எழுதி, அவரே ரூபாய் நூறும், அச்சுயந்திரப் பொருட்களும் நன்கொடை அளித்திருப்பதையும் குறிப்பிட்ட கடிதம் அய்யா அவர்கள் கையெழுத்திலேயே முதற்பக்கத்தில் வெளிவந்தது.

அந்நிலையில் திராவிட நாடு ஏடு சிறப்பாகத் தொடர்ந்து வெளிவர இயக்கத் தோழர்கள் பல ஊர்களில் நிதி திரட்டி, பொதுக்கூட்டம் போட்டு அண்ணாவை அழைத்து நிதியளித்தனர். கடலூரில் இந்த ஏற்பாட்டினை திராவிடமணி முன்னின்று செய்தார். 112 ரூபாய் (நூற்றுப் பன்னிரெண்டு) பணமுடிப்பு (அப்போது அது பெருந்தொகைதான்) திரட்டிப் பொதுக்கூட்டத்தில் தந்தார். கடலூர் (O.T.) செட்டிக் கோவில் மைதானத்தில் 1943-இல் அப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அண்ணாவுக்கு முன் பூவாளூர் பொன்னம்பலனார் பேசினார். அன்று என்னை அந்த மேடையில் உள்ள மேஜையின் மீது ஏற்றி, என் ஆசிரியர் அரங்கேற்றம் செய்தார். பொதுமேடையில் நான் பேசியது. மனப்பாடம் செய்ததுதான் என்றாலும் தட்டுத் தடுமாற்றம் இன்றிப் பேசிக் கைத்தட்டல்கள் பலமுறை வாங்கினேன்.

* * *

அய்யாவைச் சந்தித்தேன்

1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி..

கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் தென்னார்க்காடு மாவட்டத் திராவிடர் மாநாடு. அதனைத் திறந்து வைக்க  அய்யா பெரியார் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

இளவயதிலேயே என்னைப் பகுத்தறிவுக் கொள்கையில் நாட்டம் கொள்ளச் செய்த என்னுடைய ஆசிரியர் திரு.ஆ.திராவிடமணி பி.ஏ., அவர்கள் பெருமுயற்சியால்தான் அம்மாநாடு கூட்டப்பட்டது.

அன்று இரவே அய்யா அவர்கள் இரயில் மூலம் கடலூர் வந்தார்கள். வந்தவர்களை திருப்பாதிரிப்புலியூரில் சத்திரம் ஒன்றில் தங்க வைத்திருந்தார்கள். அன்னை மணியம்மையார் அவர்களும் உடன் இருந்தார்கள்.

இரவில் தோரணங்கள், கொடிகள் கட்டிய ஒட்டிய அயர்வும், உறக்கமும் ஒருபக்கம் இருந்தபோதிலும் அய்யா அவர்களைப் பார்க்கப் போகிறோம். எப்போது  விடியும் என்ற ஆவல் என் உறக்கத்தினை ஓடோடச் செய்தது.

பொழுது விடிந்ததும் நண்பர் திரு.ஏ.பி.ஜனார்த்தனம் எம்.ஏ., அவர்கள் அய்யாவைப் பார்க்க என்னை அழைத்துப் போனார்.

அய்யா அவர்கள் தங்கியுள்ள சத்திரத்தை நெருங்கினோம். எனக்கு ஆசை ஒரு பக்கம். என்னை அறியாத திகில் கொண்ட அச்சம் ஒருபுறம்.

அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தேன். இந்தப் பையன் நம் கழகத்தில் ஈடுபட்டுள்ளவன். நண்பர் திராவிடமணியின் தயாரிப்பு. மேடைகளில் நன்றாகப் பேசுகிறான் என்று அய்யாவுக்கு அறிமுகப்படுத்தினார் தோழர் ஏ.பி.ஜே. நான் அய்யாவைப் பார்த்துக் கொண்டே ஊமையாக நின்றிருந்துவிட்டு மீண்டும் வணக்கம்கூறி வெளியே வந்துவிட்டேன்.

மறுநாள் மாநாட்டினைத் திறந்து வைத்து சிங்கம் கர்ஜிப்பது போல் அய்யா அவர்கள் உரையாற்றினார். எதிரிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும் இடையே நடந்த மகத்தான மாநாடு அது. அன்று அய்யா அவர்கள் வெளியிட்ட கருத்தைவிட பேசியமுறைதான் பிஞ்சு மனத்தில் ஆழமாய்ப் பதிந்து நின்றது!

அடுத்துப் பேசிய அண்ணா அவர்கள் என் பேச்சை வைத்தே தொடங்கினார்.

இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் என்றார். அய்யா அதைக் கேட்டுப் பலமாகச் சிரித்தார். மாநாட்டுப் பந்தல் அதிரக் கையொலி!

மதிய உணவு இடைவேளையில் என்னைப் பார்த்த அய்யா, அன்புடன், நீ என்ன படிக்கிறாய்? என்று கேட்டார். அய்ந்தாம் வகுப்பு என்றேன். நன்றாகப் படி என்று தட்டிக் கொடுத்தார்கள்.

ஆசிரியர் தாத்தா கி.வீரமணி எழுதிய
அய்யாவின் அடிச்சுவட்டில் நூலிலிருந்து…

14
பிரபஞ்ச ரகசியம் - 18பிரபஞ்ச ரகசியம் - 185th December 2014
அன்று.... இன்று....!14th December 2014அன்று.... இன்று....!

மற்ற படைப்புகள்

2014_dec_31
டிசம்பர்
5th December 2014 by ஆசிரியர்

நீல எருது(NILGAI)

Read More
2014_dec_2
டிசம்பர்
5th December 2014 by ஆசிரியர்

பெற்றோர் அறிவுதான் பிள்ளையின் அறிவா?

Read More
2014_dec_42
டிசம்பர்
14th December 2014 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2014_dec_47
டிசம்பர்
8th December 2014 by ஆசிரியர்

ஆசிரியர் தாத்தா பிறந்த நாள்:டிசம்பர் 2

Read More
2014_dec_28
டிசம்பர்
5th December 2014 by ஆசிரியர்

தூது செல்லும் ‘மின்னணுப் புறா’

Read More
2014_dec_82
டிசம்பர்
5th December 2014 by ஆசிரியர்

நம்ம பூட்டன் – பூட்டி எலி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p