• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பூக்கள் – தெரியுமா?

2015_jan_5
ஜனவரி

கிளிப் பூ (Parrot Flower) தாய்லாந்தில் காணப்படுகிறது. பறக்கும் கிளி வடிவத்தில் காணப்படும் இந்தப் பூவின் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு வண்ணங்களில் அமைந்து பஞ்சவர்ணக் கிளியை நினைவுப்படுத்துவது-போல உள்ளது (Impatiens psittacina).

உதடுகள் ஏதோ முணுமுணுப்பதைப் போல மிக அழகாக சிவப்பு வண்ணத்தில் காணப்படும் இந்த இதழ் சைகோடிரியா எலாட்டா என்னும் தாவரத்தினுடையது. மழை அதிகம் பெய்யும் கொலம்பியா, கோஸ்டாரிகா, பனாமா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் இதற்கு ஹூக்கர்ஸ் லிப்ஸ் Hooker’s lips என்ற பெயரும் உண்டு. இரு இதழ்களுக்கு நடுவிலிருந்து குட்டிக் குட்டிப் பூக்கள் பூக்கின்றன.

உலகின் மிகப் பெரிய மலராக ரஃப்லெசியா அர்னோல்டி (Rafflesia Arnoldi) கருதப்படுகிறது. இந்தோனேசியா, சுமத்ரா தீவுகளில் அரிதாகக் காணப்படும் இந்தப் பூ மூன்று அடி விட்டத்தையும் 10 கிலோ வரை எடையையும் கொண்டதாகும். அழகாகப் பூத்துக் கண்ணுக்கு விருந்தளிக்கும் இந்தப் பூ அழுகிய இறைச்சி போன்ற வாசனையைக் கொண்டுள்ளதால் கார்ப்ஸ் பூ (Corpse Flower) என்றும் அழைக்கப்படுகிறது. பூவின் நடுவில் உள்ள கிண்ணம் போன்ற குழியில் 10 லிட்டர் தண்ணீர்வரை பிடிக்குமாம். ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த இந்தத் தாவரத்திற்குத் தனியாக இலை, தண்டு கிடையாது.

வட அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் பிளீடிங் ஹார்ட் பூக்கள் காணப்படுகின்றன. சிவப்பு, வெள்ளை மற்றும் பிங்க் நிறங்களில் இவை கண்களைக் கவர்கின்றன.

வெளியில் அழகான பிங்க் மற்றும் இளஞ்சிவப்பு இதழ்கள் நெருக்கமாக அமைந்து உள்ளே மென்மையான வெள்ளை இதழ்களைக் கொண்டுள்ள துலிப் பல்ப்ஸ் மலரைப் பார்க்கும்போது அய்ஸ் கிரீம் சாப்பிடத் தோன்றுகிறதா?

டைட்டன் ஆரம் (Amorphophallus Titanum)  என்று அழைக்கப்படும் இந்தப் பூ கிளையில்லாத தாவர வகையினைச் சேர்ந்தது. மூன்று அடி உயரம் வரை இருக்கும் இந்தப் பூவானது அழுகிய இறைச்சி வாசனையைக் கொண்டிருப்பதால் ரஃப்லெசியா போன்றே இதுவும் கார்ப்ஸ் பூ (Corpse Flower) என அழைக்கப்படுகிறது. இந்த மணம் பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்ந்து இழுக்குமாம்.

களைச்செடி என நம் நாட்டில் வெட்டி எறியப்படும் இந்தப் பூ ஆங்கிலத்தில் (Galinsoga Parviflora) என அழைக்கப்படுகிறது. மூக்குத்தியைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதால் மூக்குத்திப் பூ எனவும் அழைக்கப்படுகிறது. தென் அமெரிக்காவில் இந்தப் பூ மசாலாவில் பயன்படுத்தப்படுகிறது.

22
கேள்வி = அறிவுகேள்வி = அறிவு4th January 2015
கண்டுபிடிப்புகள்4th January 2015கண்டுபிடிப்புகள்

மற்ற படைப்புகள்

2015_jan_44
ஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

ஆரோக்கிய உணவு – ஆப்பிள் பழம்

Read More
2015_jan_40
சிறார் கதைஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

மன அழகு

Read More
2015_jan_38
ஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

உலக அளவில் சாதித்த பிஞ்சுகள்

Read More
2015_jan_37
ஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

மின்சார மரம்

Read More
2015_jan_33
ஜனவரி
5th January 2015 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2015_jan_43
ஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் – 19

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p