• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மின்சார மரம்

2015_jan_37
ஜனவரி

பிஞ்சுகளே, உங்கள் பெற்றோர்களிடம் நீங்கள் தினமும் ஏதாவதொரு கட்டணம் கட்ட வேண்டும் என்று பணம் கேட்டால், பாட்டி, தாத்தா என்ன சொல்லுவார்கள்? பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?

தினமும் அந்த பீஸ் இந்த பீஸ் என கேட்டுக்கிட்டு இருக்கிறாயே என்பார்கள்தானே. இனி யாராவது உங்களிடம் அப்படிச் சொன்னால், ஆமாம், பணம் மரத்திலும் காய்க்கும் என்று சொல்லுங்கள். மரத்திலிருந்து மின்சாரம் பெறும் முறையினைக் கண்டறிந்துள்ளனர் பிரான்ஸ் நாட்டினர்.

பெரிய பெரிய காற்றாடிகளை அமைத்து காற்றாலை மின்சாரம் பெறுவதைப் பார்த்திருப்பீர்கள் – படித்திருப்பீர்கள். இதன் குறுகிய வடிவமே மரத்திலிருந்து மின்சாரம் பெறும் முறையாகும்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நியூ விண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்களால் உருவாக்கப்பட்டு, காற்று மரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 25 அடி உயரம் கொண்ட காற்று மரத்தில் 100 இலைகள் இருக்கும். சின்னக் சின்னக் காற்றாலைகள்தான் இங்கே இலைகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. காற்றில் இந்தக் காற்றாலைகள் சுழலும்போது மரமானது மின்சாரத்தை உற்பத்தி செய்துவிடுகிறது.

இந்தக் காற்று மரம் குறித்து இதன் நிறுவனர் ஜெரோம் லாரிவியர், பெரிய காற்றாலைகளுக்குக் குறிப்பிட்ட வரையறைகள் உண்டு. அதிகமாகக் காற்று வீசும் இடங்களில் மட்டுமே அவை பயன் தரும். ஓர் ஆண்டில் அய்ந்து அல்லது ஆறு மாதங்கள் மட்டுமே பயன் கிடைக்கும். காற்று மரத்தில் அப்படி அல்ல. நெரிசலான நகரத்தின் வணிக வளாகங்களின் வாசலில்கூட இந்த மரத்தினை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

சுமார் ஒன்றரை அடி உயரத்திலிருக்கும் இலைகள் என்னும் பிளாஸ்டிக் சுழல் பிளேடுகளில் காற்று உள்ளே சென்றதும் இவை சுற்றி, விசையானது மின்சாரமாக மாற்றப்படும். இயற்கையான இலைகளிலிருந்தே நார் எடுத்து இந்த மரத்துக்கு இலைகளை உருவாக்கும் திட்டம் உள்ளது. காற்று மரத்தை மொட்டை மாடிகள், சாய்வான வீட்டுக் கூரைகளிலும் அமைப்பதுடன், இதிலேயே சூரிய மின்சாரத்தை உருவாக்கும் தகடுகளைப் பதித்து இரண்டு வகைகளில் பயன்பெறலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், 2015ஆம் ஆண்டு விற்பனைக்கு வர உள்ள இந்த மரத்தின் தற்போதைய விலை 22 லட்சம் ரூபாயாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் விலை குறையும் வாய்ப்பு உள்ளதாகவும், நல்ல காற்று வரும் இடத்தில் அமைத்த ஓர் ஆண்டிலேயே முதலீடு செய்த பணத்தை எடுத்துவிடலாம் என்றும் ஜெரோம் கூறியுள்ளார்.

18
உலக நாடுகள் - கோமோரோஸ்(COMOROS)உலக நாடுகள் - கோமோரோஸ்(COMOROS)4th January 2015
உலக அளவில் சாதித்த பிஞ்சுகள்4th January 2015உலக அளவில் சாதித்த பிஞ்சுகள்

மற்ற படைப்புகள்

2015_jan_36
ஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

புத்துலகின் தொலைநோக்காளர் – 2

Read More
2015_jan_46
ஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

விண்ணில் நடக்கும் கயிறு இழுக்கும் போட்டி

Read More
2015_jan_43
ஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் – 19

Read More
2015_jan_40
சிறார் கதைஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

மன அழகு

Read More
2015_jan_15
ஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

செவ்வாய் கிரகத்தில் ஏரி

Read More
2015_jan_20
ஜனவரி
5th January 2015 by ஆசிரியர்

பார்த்துச் சொல்லு 10 வேறுபாடுகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p