• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெரிய தண்டனை

2015_feb_11
பிப்ரவரி

அரிசி மூட்டைகள் ஆயிரக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பெரிய அறை.

அந்த அறைக்குள் ஆட்கள் திடீரென வருவதும், சில மூட்டைகளைத் தூக்கிச் செல்வதும், பின் அறையை மூடிவிடுவதுமாக இருப்பார்கள்.

அவை அனைத்துமே கள்ளக் கடத்தலுக்கும், கலப்படம் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் அரிசி மூட்டைகள்.

அந்த அறைக்குள் இரண்டு எலிகள் இருந்தன. அவை மூட்டைகளைக் கடித்து ஓட்டையிட்டு அரிசியைத் தின்று வாழ்ந்து வந்தன.

அந்த மூலை இந்த மூலைக்கு ஓடுவதும், மூட்டைகளின் மீது ஏறிக் குதித்து விளையாடுவதுமாய்க் காலம் கழித்தன.

ஒரு நாள் மூட்டைகளைத் தூக்க வந்தவர்களில் ஒருவன் மூட்டை ஓட்டையிடப்பட்டு, கிழிந்து அரிசி கொட்டியிருப்பதைக் கண்டான். முதலாளி, இந்த இடத்திலே எலி இருக்குங்க என்றான்.

அப்படின்னா, கருவாட்டுத் துண்டு ஒன்னை மாட்டி எலிப்பொறியைக் கொண்டு வந்து வை. இன்னைக்கே செய்… இல்லேன்னா, எல்லா மூட்டையையும் கடிச்சுப் பாழாக்கிடும்! எனக் கனத்த குரலில் அதிகாரத்துடன் கூறினான், பதுக்கல் முதலாளி.

மூட்டைகளின் அடியில் ஒளிந்திருந்த எலிகள், இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தன.

முதலாளியும், கூலி ஆளும் வெளியே போனார்கள்.

சற்று நேரத்தில் திரும்பி வந்த கூலி ஆள், கருவாடு மாட்டிய எலிப்பொறியை மூட்டைகளின் அடியில் _ ஒரு மூலையில் வைத்துவிட்டுக் கிளம்பினான்.

கருவாட்டு வாசம் மூக்கைத் துளைத்தது.

ஒரு எலி மற்றொரு எலியைப் பார்த்து, மூட்டையைக் கடித்து அரிசியைத் தின்ற நம்மைப் பிடிக்கத்தான் கருவாடு பொருத்திய எலிப்பொறி வைத்திருக்கிறார்கள். அவசரப்பட்டு நீ போய் அதில் மாட்டிக் கொள்ளாதே என்றது.

அட… எத்தனை நாளைக்குத்தான் வெறும் அரிசியையே தின்பது?… கருவாடு சுவையாக இருக்குமே! என்றது மற்றொரு சுட்டி எலி.

வேண்டாம்… அது நம்மைப் பிடித்து அழிக்க மனிதன் செய்திருக்கும் சூழ்ச்சி. நீ போய் அதில் மாட்டிக் கொள்ளாதே! என்றது நட்பு எலி.

அதன் பேச்சைச் சட்டை செய்யாத சுட்டி எலி, அது அசந்த நேரத்தில் தாவிக் குதித்து ஓடி, கருவாடு பொருத்திய எலிப்பொறிக்குள் சென்று, கருவாட்டை நுகர்ந்து பார்த்தது.

வாய் ஊறியது. சட்டென்று தன் கூரிய பல்லால் கருவாட்டுத் துண்டைப் பிடித்து இழுத்தது.

டமார் என, பெரிய சத்தம்.

சுட்டி எலி உள்ளே மாட்டிக் கொண்டது.

சத்தம் கேட்ட மற்றொரு எலி, நாம் சொன்னதைக் கேட்காமல் போய் மாட்டிக் கொண்டது சுட்டி எலி என்பதைப் புரிந்துகொண்டது. எலிப்பொறி இருக்கும் இடத்திற்கு மெதுவாகச் சென்று பார்த்தது.

சுட்டி எலியோ, பொறிக்குள் மாட்டிய பிறகுதான் தான் செய்த தவற்றை உணர்ந்தது.

எப்படி வெளியே வருவது எனத் தெரியாமல் அந்தப் பெட்டிக்குள் இங்கும் அங்கும் தவிப்புடன் ஓடுவதும், கம்பி வழியே வெளியே எட்டிப் பார்ப்பதுமாக இருந்தது.

மற்றொரு எலி கம்பிக்கு அருகில் வருவது தெரியவும், சுட்டி எலி, என்னை எப்படியாவது காப்பாற்று… என்று பரிதாபமாய்க் கெஞ்சியது.

நான்தான் அப்பவே சொன்னேனே… வேண்டாம்… ஆபத்து… போகாதேன்னு… நீ கேக்கல்லே. மாட்டிக்கிட்டே… ஆயிரக்கணக்கான மூட்டைகளைப் பதுக்கி வைச்சு, அநியாயக் கலப்படம் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யிற இந்த முதலாளி மாட்டிக்கிட்டா, அவருடைய செல்வாக்கு, மேலிடத் தொடர்பு இதையெல்லாம் பயன்படுத்தி உடனே வெளியே வந்துடுவாரு.

ஆனா, வயித்துப் பசிக்காகக் கொஞ்சம் அரிசியத் தின்ன நீ மாட்டினா எப்படி வெளியே வர முடியும்? உனக்கு ஆசை காட்டி இந்தக் கூண்டுக்குள்ளே அடைச்சிருக்காங்க.
மூட்டையை ஓட்டை போட்டுத் தின்னது நீ செய்த சின்னத் தப்பு. அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை.

ஆனா… ஊரையே தேட்டை போட்டு, மூட்டை மூட்டையா பதுக்கி வச்சுக் கலப்படம் செய்து ஊரை ஏய்க்கிற பெரிய மனிதருக்கு யாரு தண்டனை கொடுப்பது?

இப்படித்தான் மனிதர்கள் இருக்காங்க. இது புரியாம அவசரப்பட்டு வந்து மாட்டிக்கிட்டியே! நான் என்ன செய்ய முடியும்? நானும் உன்னை மாதிரி எலிதானே… உன்னை மீட்கிற பலம் எனக்கு இல்லையே!

நாட்டை ஏய்க்கிற பெருச்சாளிகளுக்கு, நம்ம மாதிரி எலிகளைக் கொல்றது ரொம்பச் சுலபம். ஆனா, அவங்களை?… என்று அரற்றிக் கொண்டிருக்கும் போதே, கதவு திறக்கும் ஓசை கேட்டது.

அச்சப்பட்டு வாழும் அவல மனிதர்களைப் போல், பேசிக் கொண்டிருந்த எலி பயந்து ஓடி ஒளிந்தது.

கதையும் படமும்
மு.கலைவாணன்

25
தெரியுமா?தெரியுமா?27th January 2015
சோளப்பொரி நல்லதுதான் ஆனால் “பாப்கார்ன்” ........27th January 2015சோளப்பொரி நல்லதுதான் ஆனால் “பாப்கார்ன்”   ........

மற்ற படைப்புகள்

2015_feb_4
பிப்ரவரி
30th January 2015 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2015_feb_54
பிப்ரவரி
28th January 2015 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் – 20

Read More
2015_feb_8
பிப்ரவரி
27th January 2015 by ஆசிரியர்

சாய்கா ஆன்டெலோப்(Saiga Antelope)

Read More
2015_feb_14
பிப்ரவரி
31st January 2015 by ஆசிரியர்

எண்ணிப் பார் ஏழு வேறுபாடு

Read More
2015_feb_48
பிப்ரவரி
27th January 2015 by ஆசிரியர்

மின் சிக்கனம்: வரைந்த தூரிகை

Read More
2015_feb_64
பிப்ரவரி
27th January 2015 by ஆசிரியர்

நான்கே மணி நேரத்தில் உலகின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p