• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குரங்குகளின் வெந்நீர்க் குளியல்

2015_feb_12
பிப்ரவரி

குளிர் காலம் வந்ததும் நம்மில் பெரும்பாலோர் வெந்நீரில்தான் குளிப்போம். மனிதர்கள் மட்டுமல்ல, ஜப்பான் நாட்டில் உள்ள ஜோஷினெட்சு கோகன் தேசியப் பூங்காவில் இருக்கும் குட்டைவால் குரங்குகள்கூட வெந்நீரில்தான் குளிக்கின்றனவாம். குரங்குகளுக்கு யார் வெந்நீர் போட்டுக் கொடுப்பார்கள் என்று கேள்வி எழுகிறதா?

ஜோஷினெட்சு கோகன் தேசியப் பூங்கா யொகோபு நதி பாய்ந்தோடும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா அமைந்துள்ள காடுகள் குளிர்காலத்தில்  உறைந்து பனிக்கட்டிபோலக் காட்சியளிக்குமாம். மனிதர்களைப் போன்ற இயல்பினைக் கொண்ட இந்தக் குரங்குகள் பனியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நினைத்தன.

பூங்காவிலிருந்து 850 மீட்டர் உயரத்தில் உள்ள ஜிகோகுடானி என்ற இடத்திற்கு ஓடின. குளிர்காலத்தில் இந்தக் குரங்குகள் செல்லும்போது பூங்காவில் உள்ள காவலாளிகள் அவற்றைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

பாறைகளுக்கு மேலே பனிக்கட்டிகள் உறைந்து கிடக்க, பாறைகளுக்கு நடுவே உள்ள குட்டைகளில்  வெந்நீர் நிரம்பியுள்ளதாம். அந்த வெந்நீரில் குரங்குகள் மகிழ்ச்சியுடன் நீந்தி விளையாடியுள்ளன.

பூமிக்கடியில் இருக்கும் வெப்பத்தினால் பாறைப் பிளவுகளில் இருந்து வரும் நீர் வெந்நீராக வெளியேறுகிறது. அந்த வெந்நீர் அங்கேயே தங்கிவிடுவதால் நீரின் சூடு தணியாமல் கொதித்து ஆவியாக வெளியேறுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையுள்ள பனிக்காலம் முடிந்ததும் தனது இருப்பிடத்தைத் தேடிச் சென்றுவிடுகின்றன. வெந்நீர்க் குளத்தில் குளியல் போடும் குரங்குகளைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் நிறையப் பேர் வந்து செல்கின்றனராம்.

22
சாய்கா ஆன்டெலோப்(Saiga Antelope)சாய்கா ஆன்டெலோப்(Saiga Antelope)27th January 2015
உலக நாடுகள் - கிறிஸ்துமஸ் தீவு(CHIRISTMAS ISLAND)27th January 2015உலக நாடுகள் - கிறிஸ்துமஸ் தீவு(CHIRISTMAS ISLAND)

மற்ற படைப்புகள்

2015_feb_40
பிப்ரவரி
27th January 2015 by ஆசிரியர்

தெரியுமா?

Read More
பிப்ரவரி
27th January 2015 by ஆசிரியர்

தடகள விளையாட்டு

Read More
2015_feb_4
பிப்ரவரி
30th January 2015 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2015_feb_20
பிப்ரவரி
27th January 2015 by ஆசிரியர்

உலக நாடுகள் – கிறிஸ்துமஸ் தீவு(CHIRISTMAS ISLAND)

Read More
2015_feb_47
பிப்ரவரி
30th January 2015 by ஆசிரியர்

குறுக்கு ‘மறுக்கு எழுத்துப் போட்டி’

Read More
2015_feb_56
பிப்ரவரி
31st January 2015 by ஆசிரியர்

தமிழ்ப் புத்தாண்டு உறுதிமொழி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p