• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளின் சாதனை

2015_mar_pinju50
மார்ச்

சாதனைப் பிஞ்சுகள்

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளின் சாதனை

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், வீணான உணவுப் பொருள்களைக் கொண்டு பாலிதீன் பைகளை மக்க வைக்கும் நடைமுறை, புதிய வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

9ஆம் வகுப்பு மாணவிகள் ஏ.பிரியங்கா, ஜெனிஃபர், 10ஆம் வகுப்பு ராகமாலினி ஆகியோரின் முயற்சியினாலும் ஆசிரியையின் வழிகாட்டுதலிலும் இந்தச் சாதனை நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து, கெட்டுப்போன பால், தயிர், சாதம், அழுகிய வெங்காயம், திராட்சை ஆகியன பயன்படுத்தப்பட்டன.

இந்த உணவுக் கலவையை ஒரு வாளியில் ஊற்றி, அதில் பாலிதீன் பைகளை நீளவாக்கில் வெட்டிப் போட்டு மூடி வைத்துவிட்டோம். அப்போதுதான் அந்த உணவுப் பொருள்களிலிருந்து பாக்டீரியா உருவாகும். இந்த பாக்டீரியா மூலமே பை மக்கும்.

அதிக பாக்டீரியா உருவாக்க கெட்ட பாலை மேலும் 2 முறை சேர்த்தோம். 120 நாள்கள் கழித்துப் பார்த்தபோது பாலிதீன் பையில் ஆங்காங்கே ஓட்டைகள் தென்பட்டன. இழுவைத் திறனும் குறைவாக இருந்தது. மக்குவதற்கு முன்பு 6 புள்ளி இருந்தது, பின்னர் 0.28 புள்ளியானது. மக்கிய பாலிதீன் அடங்கிய மண் மூலம் செடி வளர்த்துள்ளோம்.

இதனைப் பெரிய அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும்போது பாலிதீன் பையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை வெகுவாகக் குறைக்க முடியும் என்று மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

……….

அருப்புக்கோட்டை மாணவர் வடிவமைத்த ஆளில்லா விமானம்

மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் புதிய படைப்புகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் பள்ளிக் கல்வித்துறை அறிவியல் கண்காட்சியினை நடத்துகிறது. இதில், மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை கண்காட்சியாக வைத்து பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்று வருகின்றனர்.

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும் ஆசிக் இலாஹி கான், ஆளில்லா விமானத்தை (குவாட் காப்டர்) வடிவமைத்து தேசிய அளவில் கலந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.

நான்கு மோட்டார்கள் நான்கு இறக்கைகளுடன் இயங்கக்கூடிய இந்த விமானத்தில் கேமரா (வை ஃபை), ஜி.பி.எஸ். கருவி, தட்பவெப்ப நிலையினைக் கண்டறியும் கருவி ஆகியன உள்ளன. பறந்து செல்லும்போது கீழே உள்ள இலக்குகள் தெளிவாகத் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளது.

எதிரிகளின் இலக்குகளை ஏவுகணை கொண்டு துல்லியமாகத் தாக்குவதற்குப் பயன்படும் இது ரிமோட் மூலம் இயக்கப்படுகிறது.

தேசிய அளவில் சண்டிகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான்கு படைப்புகளுள் ஆளில்லா விமானமும் ஒன்றாகும். சூரிய ஆற்றல் (சோலார்) மூலம் விமானத்தை இயக்கும் முயற்சியிலும் ஆசிக் ஈடுபட்டுள்ளார்.

22
உயிர்களை உண்ணும் தாவரங்கள்உயிர்களை உண்ணும் தாவரங்கள்25th February 2015
எண்ணிப் பார் ஏழு வேறுபாடு25th February 2015எண்ணிப் பார் ஏழு வேறுபாடு

மற்ற படைப்புகள்

2015_mar_pinju81
மார்ச்
25th February 2015 by ஆசிரியர்

பிஞ்சு நெஞ்சை நஞ்சாக்காதீர்

Read More
2015_mar_pinju15
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

குறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டி

Read More
2015_mar_pinju49
மார்ச்
25th February 2015 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2015_mar_pinju47
மார்ச்
25th February 2015 by ஆசிரியர்

எண்ணிப் பார் ஏழு வேறுபாடு

Read More
2015_mar_pinju45
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

கடந்த இதழில் வெளிவந்த குறுக்கு மறுக்கு எழுத்துப் போட்டியில் முதல் பரிசு பெறுபவர்: ஏ.அன்பு சுருளிப்பட்டி,

Read More
2015_mar_pinju86
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

குட்டி கிரகம் செரஸ்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p