• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஆரோக்கிய உணவைத் தேடி அலைந்த சாதனையாளர்

2015_jul_pinju53
ஜூலை


ஆரோக்கிய ராஜீவ்…

400 மீட்டர் தொலைவை 45.85 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றிருக்கும் திருச்சி லால்குடியைச் சேர்ந்த இளைஞர். அவர் இந்த வெற்றியைப் பெற்றிருப்பது தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய கிராண்ட் ஃப்ரீ தடகளப் போட்டியில்!

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த  ஆரோக்கிய ராஜீவ் விளையாட்டாக, ஓட்டப்பந்தயத்தில் பங்கெடுக்கத் தொடங்கினார். அதன் பிறகு பள்ளியில் பரிசு பெற்று உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரனின் கவனத்தைக் கவர்ந்தார். அதன்பிறகுதான் ஓட்டப்பந்தயத்தில் ஷூ அணிந்து ஓடலாம் என்பதே ராஜீவுக்குத் தெரியுமாம். தொடர்ந்து பயிற்சி எடுக்க வேண்டுமானால், சத்தான உணவு வேண்டும்.

அரசு ஆண்கள் பள்ளியில் அரசு வழங்கிய சத்துணவையும், நண்பர்கள் தனக்கென கொண்டு வரும் கூடுதல் உணவையும் உணடுவிட்டு பயிற்சியைத் தொடர்வாராம். மாலை நேரங்களில் வாழைத்தோப்பு, கரும்புத் தோட்டம் என கிடைத்ததை சாப்பிட்டு உடம்புக்கு வலு சேர்த்துக் கொள்வாராம். பின்னர் உடற்கல்வி பயிற்றுநர் ராமச்சந்திரன் குறைந்த செலவில் சத்தான சிறுதானிய உணவுகள் சாப்பிடும் முறையை சொல்லிக்-கொடுத்திருக்கிறார்.

ஏழ்மை நிலை ஒரு புறம் இருக்க, தொடர்ந்து கல்லூரியிலும் படித்து, பின்னர் விளையாட்டுத் துறையில் தன்னை வளர்த்துக் கொள்-வதற்காகவே இராணுவத்தில் சேர்ந்து ஹவில்தாராகி, தன்னுடைய ஓட்டப் பயிற்சியைத் தொடர்ந்துள்ளார். திட்டமிட்ட, இலக்கு நோக்கிய இந்த வாழ்க்கை ஓட்டம் தான் ஆரோக்கிய ராஜீவுக்கு இந்த வெற்றியைத் தந்திருக்கிறது. இராணுவத்தில் இருக்கும்போது தான் தடகள் வீரருக்குத் தேவையான முறையான உணவு என்பது என்ன என்பதே தனக்குத் தெரிந்தது என்கிறார் ஆரோக்கிய ராஜீவ்.

உணவு, அதிலும் சத்தான உணவு கிடைக்க எவ்வளவு பேர் பாடுபடுகிறார்கள்? அதுவும் சாதனை செய்ய அதற்காக எப்படி முயல்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டால், நாம் தேவையில்லாத உணவுப் பொருள்களை உண்ணவும் மாட்டோம்… தேவைக்கு மேல் உணவுப் பொருள்களை வாங்கி, அதையும் பயன்படுத்தாமல் வீணடிக்கவும் மாட்டோம்.

15
காக்கா முட்டை எழுப்பும் கேள்விகள்காக்கா முட்டை எழுப்பும் கேள்விகள்8th July 2015
அசத்தல் அகரன்8th July 2015அசத்தல் அகரன்

மற்ற படைப்புகள்

2015_jul_pinju50
ஜூலை
8th July 2015 by ஆசிரியர்

அசத்தல் அகரன்

Read More
2015_jul_pinju2
ஜூலை
13th July 2015 by ஆசிரியர்

கண்ணா… லட்டு தின்ன ஆசையா?

Read More
2015_jul_pinju52
ஜூலை
8th July 2015 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2015_jul_pinju21
ஜூலை
13th July 2015 by ஆசிரியர்

எண்ணைப் பார்த்து வண்ணம் தீட்டு

Read More
2015_jul_pinju33
ஜூலை
13th July 2015 by ஆசிரியர்

பிஞ்சு சமையல்

Read More
2015_jul_pinju4
ஜூலை
13th July 2015 by ஆசிரியர்

விடைகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p