• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

வலம்புரிச் சங்குல மட்டும் தான் அந்த சத்தம் வருதா?

2015_sep_pinju39
செப்டம்பர்

உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… “உங்க நாயனத்தில மட்டும் தான் இந்த சத்தம் வருதா? இல்ல, எல்லா நாயனத்திலையும் வருமா?” என்ற தில்லானா மோகனாம்பாள் வசனம் அந்தக் காலத்தில் பிரபலம்.

அது மாதிரி, தெரியுமோ தெரியாதோ, தெரிந்த மாதிரி எப்போதும் ஒன்று சொல்வார்கள்.
வலம்புரிச் சங்கினை காதில் வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலியோ கடலின் இரைச்சலோ கேட்கும் என்பர். உண்மையா?  இது வலம்புரிச் சங்குல மட்டும் தானா? பதிலளிக்கிறார் நம்ம பாபு அண்ணே!

சங்குகள் இயல்பாக இடம்புரியாகவே உருவாக, வெகு அபூர்வமாக வலம்புரியாகவும் உருவாகிடும். இது இயல்பான ஒரு நிகழ்தகவுச் செயல்பாடு. அதில் தெய்வீகமோ, ஆன்மீகமோ ஏதும் இல்லை. சிலர் அப்படிச் சொல்லிக் கொள்வார்கள்.

இது அபூர்வம் என்பது தவிர வேறொன்றும் சிறப்பு கிடையாது. சரி, காதில் வைத்தால், ஓம் என்றும் கடல் அலைகளின் ஓசையும் கேட்கிறதாமே என்று கேட்டால், அது இடம்புரிச் சங்கிலும் கேட்கும், காபி குடிக்கும் டம்ளரிலும் கேட்கும், தண்ணீர் முகரும் கப்பிலும் கேட்கும். என்ன ஒன்று ஓசைகள் வித்தியாசமாக வரும், அவ்வளவுதான்.

அறிவியல் விளக்கம்:

சிலர் சொல்வார்கள், காதுக்குள் இருக்கும் நரம்புகளில் ஓடும் ரத்தத்தின் ஓசைதான் சங்கிற்குள் பட்டு எதிரொலிக்கின்றது என்று. அப்படி என்றால், உடற்பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ செய்து விட்டு சங்கை காதில் வைத்துக் கேட்டால், அதன் ஓசை விரைவாகவும் அதிகமாகவும் கேட்கவேண்டுமே. அப்படிக் கேட்கவில்லை.

சரியான காரணம் என்னவென்றால், சங்கு ஒரு ஒத்திசைக்கூண்டு (Resonance Chamber) போன்று செயல்படுகின்றது. வெளிக்காற்றின் ஓசைகளை உள்ளே கடத்தி ஏற்படுத்தும் ஒத்த சலனம்தான் நமக்கு இரைச்சலாகக் கேட்கின்றது.

சங்கு என்றில்லை, மூன்று புறமும் மூடியுள்ள எதனைக் கொண்டும் இது உருவாகும். காதிலிருந்து அது எத்தனை தொலைவில் இருக்கிறது, எத்தனை கோண அளவில் இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

அந்த இரைச்சலை, ஓம் என்றோ, கடலோசை என்றோ எண்ணிக் கொள்வது நம் கற்பனை. எளிய மனம் எதைச் சொன்னாலும் நம்பி அதன் பின்னே போய் விடும்.

24
பேரண்டம்-ஓர் ஆண்டில்27th August 2015
கீர்த்தியும், சீர்த்தியும் ஒன்னா படிச்சவங்க8th September 2015கீர்த்தியும், சீர்த்தியும் ஒன்னா படிச்சவங்க

மற்ற படைப்புகள்

2015_sep_pinju35
செப்டம்பர்
8th September 2015 by ஆசிரியர்

கீர்த்தியும், சீர்த்தியும் ஒன்னா படிச்சவங்க

Read More
2015_sep_pinju10
செப்டம்பர்
8th September 2015 by ஆசிரியர்

எண்ணிப் பார் ஏழு வேறுபாடு

Read More
2015_sep_pinju23
செப்டம்பர்
8th September 2015 by ஆசிரியர்

சும்மா மொக்க போடாதீங்க

Read More
2015_sep_pinju17
செப்டம்பர்
8th September 2015 by ஆசிரியர்

Child Labour

Read More
2015_sep_pinju8
செப்டம்பர்
8th September 2015 by ஆசிரியர்

நாக்கு நோக்கு இருக்கா?

Read More
2015_sep_pinju32
செப்டம்பர்
8th September 2015 by ஆசிரியர்

பெரியாரைப் பற்றி எனக்கு ஏன் சொல்லவில்லை? அப்பாவிடம் கோபித்துக் கொண்ட அமெரிக்கப் பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p