• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புற்றுநோய் ஒழிப்பு – பாக்கியசிறீயின் இலக்கு!

2015_nov_pinju42
நவம்பர்

குருவி தலையில் பனங்காயா? – என்று சொல்லிக் கேட்டிருக்கோம். இது சுமைக்கு (wait) வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆனால், அறிவுக்கு? சின்ன குருவி தலையில் எவ்வளவு அறிவு வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு துணிவு வேண்டுமானாலும் இருக்கலாம். மலாலாவை நினைவு இருக்கிறதா? இன்னும் எத்தனை யெத்தனை  மாணவர்கள் இளைய வயதிலேயே சாதனை செய்து சரித்திரம் படைத்திருக்கின்றனர்.

அதை சரித்திரங்களின் தொடச்சியாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த மாணவி பாக்கியசிறீ தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

மாணவி பாக்கியசிறீ தன்னைப் பற்றி கூறுகையில். “சென்னை அம்பத்தூரில் வசிக்கிறோம். அப்பா பி.எஸ்சி பட்டதாரி. விவசாயம் பார்க்கிறார். அம்மா பாக்கியலட்சுமி இல்லத்தரசி. தம்பி பிபின் பிரசாத். நான் சென்னை வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறேன்.

தன் சாதனை முயற்சிக்கு நான்காம் வகுப்பு முதல் ஏஷியாட்டிக் விருது, இந்தியன் புக் ஆப் விருது, தன்வந்திரி விருது என மொத்தம் 400 விருதுகள், 1500 சான்றிதழ்களுக்கு மேல் பெற்றுள்ளார் பாக்கியசிறீ. 80 பள்ளிகள், 35 கல்லூரிகளில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் மருத்துவம் குறித்து நேரடி விளக்க நிகழ்ச்சி நடத்தியுள்ளார். மருத்துவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார்.

200 ஊராட்சிகளில் படகாட்சிகள் மூலமும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற பழக்கங்களை விட்டுள்ளதாக பெருமை பொங்க கூறுகிறார்.

முதலாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே மருத்துவம் சார்ந்த புத்தகங்களை ஆர்வமுடன் விரும்பி படித்தேன். எனக்கு யாருமே கற்றுக் கொடுக்கவில்லை.

நானாகவே படித்து தெரிந்து கெண்டேன். முதலில் வார்த்தைகள் மற்றும் அதற்கான விரிவாக்கம் என்று தொடங்கினேன். படிப்படியாக நோய்கள், அதற்கான காரணங்கள், மருந்துகள், மருத்துவப் பெயர்களுக்கான விளக்கங்கள் என 2500 வகைகளை தெரிந்து கெண்டேன்.

எதிர்கால தலைமுறை நலன்

புற்றுநோய் செல்கள் தூண்டப்படுவதை தடுத்தால் நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கலாம். துரித உணவு மற்றும் புகையிலைப் பொருட்கள் பயன்பாடு பள்ளிக் காலத்திலேயே தொடங்கிவிடுகிறது.

இதனால் மாணவர்கள் மத்தியில் இது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தேன். எதிர்கால தலைமுறை புற்றுநோய் இல்லாத தலைமுறையாக வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு கல்வி நிறுவனங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். முதல் முதலாக என்னுடைய விழிப்புணர்வு உரையாடலை செஞ்சியிலுள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தொடங்கினேன். ஒன்றரை மாத பயணத்தில் தமிழகத்தில் உள்ள 80 பள்ளிகள், 35 கல்லூரிகளில் பிரச்சாரம் செய்துள்ளேன்.

ஒவ்வெரு நிகழ்ச்சியிலும் 45 நிமிடங்கள் தகவல்களை வழங்குவேன். அதன்பின்னர் மருத்துவர்கள், மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். மேலும் இதுவரை 200 ஊராட்களில் உள்ள கிராமங்களில் படங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன்.

புதுச்சேரியில் வில்லியனூர், வடமங்கலம், செல்லிப்பட்டு கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு செய்துள்ளேன்.

ஒவ்வொரு ஊரிலும் அன்பான வரவேற்பு கிடைத்தது. பலர் செல்போனில் தொடர்பு கொண்டு தங்களுடைய நன்றியை தெரிவித்துள்ளனர். ஏராளமானோர் என்னிடம் ஆட்டோகிராப் வாங்கிச் சென்றுள்ளனர். சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்ற பழக்கங்களையும் விட்டுள்ளனர். தமிழக அளவில் ஒவ்வொரு ஊரிலும் புற்று நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் காரணங்கள் பற்றியும் அறிக்கை தயாரித்து இருக்கிறேன்.

புற்றுநோயாளிகளின் இறப்பை தடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். புற்றுநோய், வெண்புள்ளி போன்றவைகளுக்கு நிரந்தர தீர்வு காண மருந்து கண்டுபிடிப்பதே எனது லட்சியம்” என்கிறார் இந்த இளம் விஞ்ஞானி.

வெள்ளத்தனையை மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு
என்ற குறள் நினைவுக்கு வருகிறதா? பாக்கியசிறீ தன் முயற்சியில் வெற்றியடைய வாழ்த்துவோம்!

_ பவானி

24
எண்ணிப் பார் ஏழு வேறுபாடுஎண்ணிப் பார் ஏழு வேறுபாடு3rd November 2015
புள்ளிகளை இணையுங்கள்3rd November 2015புள்ளிகளை இணையுங்கள்

மற்ற படைப்புகள்

2015_nov_pinju57
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

எங்கள் தந்தை!

Read More
2015_nov_pinju25
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

பிஞ்சு வாசகர் மடல்

Read More
2015_nov_pinju16
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

கேள்விப் போர்!

Read More
2015_nov_pinju6
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

சும்மா மொக்க போடாதீங்க

Read More
2015_nov_pinju41
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

புள்ளிகளை இணையுங்கள்

Read More
2015_nov_pinju26
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

உலக நாடுகள் – டென்மார்க்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p